ஷேக்ஸ்பியரின் ஹெம்லட் நாடகத்தை இந்திய காஷ்மீர் அரசியலின் கொந்தளிப்பான சூழ்நிலை பின்னணியில் இயக்குனர் விஷால் பரத்வாஜ் படம் காட்டும் ஹைதர் இந்திய இராணுவத்திற்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு........
படத்தின் கதையாக.............
இடாணுவ ஆட்சி நடைபெறும் 1995 காலகட்ட ஸ்ரீநகருக்கு அலீகர் பல்கலை கழகத்தில் பயின்று கொண்டிருந்த ஹைதர் (ஷாஹித் கபூர்) தன் தந்தை போராளியாக நினைத்து இந்திய ராணுவத்தால் கடத்தப்பட்டதாக செய்தி கேட்டு வருகிறான்
அங்கே அவர்களது வீடு தகர்க்கப்பட்டு அவனது தாய் காசலா (தபு) அவனது தந்தையின் சகோதரர் குர்ராம் (கே கே மேனன்) வீட்டில் வாழ்வதையும் அறிகிறான்
உண்மையில் தனது தந்தை கடத்தப்படவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் குர்ராமுடன் தனது தாய் கசாலா கொண்டுள்ள கள்ள தொடர்பே அவரது கொலைக்கு காரணம் என்பதையும் அறிந்த ஹைதர் மனநிலை பாதிக்கப்பட்டு......
தன் தந்தை கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்குவதே......
இயக்குனர் விஷால் பரத்வாஜ்.........இதற்கு முன்பு ஷேக்ஸ்பியரின் மேக்பத் (Macbeth) நாடகம் மூலம் மும்பை தாதா உலகத்தை மக்பூல் (Maqbool) படத்திலும் ஒத்தெல்லா (Othello) நாடகத்தை உ.பி.யில் நிலவும் சாதிய கும்பல் பின்னணியில் ஓம்காரா (Omkara) படம் மூலமும் வெற்றிகரமாக படமாக்கியது போல்................
ஷேக்ஸ்பியரின் ஹெம்லட் (Hamlet) நாடகத்தை ஹைதர் படம் மூலம் இந்திய இராணுவ பாதுகாப்பு படைகளுக்கும் பிரிவினை வாத தீவிரவாதிகளுக்கும் இடையில் உள்ளூர் காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,அடையாள நெருக்கடி,கடுமையான கண்காணிப்பு, சித்திரவதை.....போன்றவைகளை பின்னணியாகக் கொண்டு நாடகத்தன்மை இல்லாமல் விறுவிறுப்பான சினிமாத்தனமாக காட்சிப்படுத்தியுள்ளார்
ஷாஹித் கபூர்.......கதாப்பாத்திரத்திற்கு தேவையான ஒரு மிருகத்தனமான வெறித்தனமான வன்முறை உணர்வை முகத்தில் பிரதிபலித்து பாலிவுட் திரையுலகம் இதுவரை கண்டிராத ஓரு நடிப்பு திறனை முகத்தில் வெளிப்படுத்துகிறார்
நடிகை தபு......அவரது காசலா கதாப்பாத்திரத்திற்கு தேவையான பாலியல் பதற்றம், மனஉளைச்சல்...போன்ற உணர்வுகளை யதார்த்தமாகவும் பிரமாதமாகவும் வெளிப்படுத்துகிறார்
ஆக மொத்தத்தில்.................
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் பாலிவுட் திரைப்பட வரலாற்றில் வணிக சமாச்சாரங்கள் இன்றி நடிப்பும் டார்க் காமெடியும் நிறைந்த அறிவாளி ரசிகர்களின் அற்புத திரைவிருந்து.........ஹைதர்
மற்றபடி.........
ஹைதர்- இந்திய இராணுவத்திற்கு எதிராக பகடி செய்யும் படமா....? என்ற ஹேம்லட் குழப்பநிலை கேள்விக்கு....TO SEE OR NOT TO SEE?
நீங்களே படம்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
பதில் உங்கள் பார்வையையில்...........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |