google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோவிந்துடு அந்தரிவாடில்லே (தெலுங்கு)-திரை விமர்சனம்

Friday, October 03, 2014

கோவிந்துடு அந்தரிவாடில்லே (தெலுங்கு)-திரை விமர்சனம்

கமல்ஹாசனின் தேவர் மகன்,சிரஞ்சீவியின் விஜேதா கலவையாக.......     கிருஷ்ண வம்சி இயக்கத்தில் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வாலுடன் நடித்துள்ள தெலுங்கு மசாலா நிறைந்த குடும்பச் சித்திரம்..........கோவிந்துடு அந்தரிவாடில்லே


raamcharan

படத்தின் கதையாக...............
ஒரு சிறு கிராமத்து தலைவரான பால் ராஜு (பிரகாஷ் ராஜ்) மருத்துவ வசதியில்லாத தன் கிராமத்தை மேம்படுத்த தன் இளைய மகன் சந்திரசேகரை (ரகு) டாக்டருக்கு படிக்கவைத்து கிராமத்தில் ஒரு மருத்துவமனையையும் கட்டி வைத்து காத்திருக்க....
அவரோ லண்டனுக்கு வேலைபார்க்க சென்றுவிடுகிறார் அதனால் அப்பா மகன் உறவு பாதிக்கப்படுகிறது 

பலவருடங்களுக்குப் பிறகு........

சந்திரசேகரின் மகனும் பால் ராஜு பேரனுமான அபிராம் (ராம் சரண்)  தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் லண்டனிலிருந்து அந்த கிராமத்திற்கு வந்து பரிகாரம் செய்வதையும்   பிரிந்த தன் அப்பா-தாத்தா பகையை சரிசெய்வதையும் உணர்வுப் பூர்வமான காட்சிகளால் இயக்குனர் கிருஷ்ண வம்சி படம் காட்டுவதே........ கோவிந்துடு அந்தரிவாடில்லே

ramcharan

இதற்கிடையில்   இன்னொரு கதையாக கிராமத்தின் தலைமையை பால் ராஜுவிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் அவரது சகோதரர்  (கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ் ) குடும்பத்தினர் கதை அதிரடி சண்டைக்காகவும் அபிராம் தன் அத்தை மகள் காஜல் அகர்வால் மீது கொண்ட காதல் கதையும் துனைக்கதைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 

இயக்குனர் கிருஷ்ண வம்சி ஒரு குடும்பக் கதையில் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியை திறம்பட வெளிப்படுத்தி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதத்தில்.. ஆனாலும் ஆகப் பழைய கதையுடன் வந்துள்ள படத்தில் பின் பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் முன் பாதியில் இல்லை 



ராம் சரண்.........படத்தின் முதுகெலும்பாக இருப்பதுடன் அவரது திறமையான உணர்சிகரமான நடிப்பும்  துள்ளும்  நடனமும் அருமையாக வெளிப்படுகிறது 

காஜல் அகர்வாலின் லொள்ளு அழகும் ஜொள்ளு கவர்ச்சியும் அவர் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறது 

மற்றபடி.........கோபக்கார தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ்,அவரது மனைவியாக ஜெயசுதா நடிப்பில் மிளிர்கிறார்கள் 

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆகாவும் இல்லை ஒகேவும் இல்லை பாடல்கள் சில முனுமுனுக்க வைக்கின்றன சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் சுடப்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோயில்,ராமேஸ்வரம், பொள்ளாச்சி...காட்சிகள் பளிச் 
ramcharan

ஆக மொத்தத்தில்............
கமல்ஹாசனின் தேவர் மகன்,சிரஞ்சீவியின் விஜேதா,சீதாராமையாகாரி மன்வரலு,கபி குஷி கபி கம்...போன்ற படங்களின்   கலவையாக வந்தாலும் கோவிந்துடு அந்தரிவாடில்லே பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வெற்றிப்படம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1