கத்தி படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணங்கள் எவை?
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்........
கதையிலும் திரைக்கதையிலும் நிறைய லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிந்தாலும் ஒரு மிகப்பெரிய பட்ஜெட்,மிகப் பெரிய நடிகர் நடித்த கத்தி படத்தில்........
விவசாய பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகள்-விவசாயத்துக்கான நீர்வளத்தை திருடும் குளிர்பான கார்பரேட் கம்பெனிகளின் அய்யோக்கியத் தனங்கள்,2 ஜி ஊழல் பற்றிய வசனங்கள்... பற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் சிந்தனைகள் பாராட்டப்பட்டாலும்........
பொழுது போக்கு காதல்,காமெடி கமர்சியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரது ரமணா படம் போன்ற விழிப்புணர்வு படமாக அமையவில்லை enஎன்றும் சொல்கின்றனர்
நடிப்பு..........
நடிகர் விஜய்-தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர் விஜய் கிராமத்து மக்களுக்காக வாழும் புரட்சிகர கம்னிஸ்டாக ஜீவானந்தம் என்ற ஒரு வலுவான கதாப்பாத்திரத்தில் அமைதியாக அடக்கமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறார்
அதேநேரத்தில் அவரது அதீத ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய கதிரேசன் என்ற இளமைத் துள்ளலுடன் அதிரடி சண்டைக்காட்சிகள், வேகமான நடன அசைவுகள்,காதல் பாடல்காட்சிகள்....என்று கலக்கலாக நடித்துள்ளார்
ஒரே உருவத்தில் இரு வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்
மற்றபடி சமந்தா-பாடல்களுக்காகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் வந்து போகிறார் சதீஷின் காமெடி எடுபடாமல் போக.....ஆனால் நீல் நிதின் முகேஷின் வில்லத்தனமான நடிப்பு கவனிக்க வைக்கிறது
இசை.........
அனிருத்-பின்னணி இசையில் இன்னும் அடங்காத கொலைவெறியுடன் அலைந்தாலும் மூன்று பாடல்களில் தேனிசை ஊட்டுகிறார்
ஒளிப்பதிவு..........
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் கெல்கத்தா சிறை உடைக்கும் காட்சி,சுரங்கப்பாதை காட்சி மட்டுமின்றி ஒரு கிராமமும் அழகாக காட்டப்படுகிறது சில்லறை நாணயங்களை தூக்கிப் போட்டு அடியாட்களை பந்தாடும் இருட்டில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமிக்க வைக்கிறது
இப்படத்தின் வெற்றி ஒரு கூட்டு முயற்சியாக தெரிவதால்......
கத்தி வெற்றிக்கு காரணம்...?
(ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்)
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |