google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பூஜை-சினிமா விமர்சனம்

Thursday, October 23, 2014

பூஜை-சினிமா விமர்சனம்

காமெடி கலந்த குடும்பக் கதையில் ரோலர்-கோஸ்டரில் பயணிக்கும் திரைக்கதையுடன் இருக்கை விழிம்பு வரை வழுக்கி விழ வைக்கும் அதிரடி மசாலா ட்விஸ்ட்கள் நிறைந்த  பூஜை திரைப்படம்.....

இயக்குனர் ஹரி வெண்திரையில் படைத்த இனிப்பு,துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு,கசப்பு..அறுசுவை தீபாவளி விருந்து

படத்தின் கதையாக........

பொள்ளாச்சியில் கொலை,கொள்ளை,அடுத்தவர் நிலங்களை ஆட்டை போடும் பைனான்ஸ் கம்பெனி அதிபரும் கூலிப்படை தலைவனும் கோயில் அறங்காவலருமான முகேஷ் திவாரி........

கோவையில் பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ்  பங்குதாரர்கள் ராதிகா,ஜெயபிரகாஷ்,தலைவாசல் விஜய்...ஆகியோருக்கு சொந்தமான நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.ஜெயப்பிரகாசை அடித்து அவமானப்படுத்துகிறார். உயர் போலிஸ் அதிகாரி சத்யராஜை கொலை செய்ய  கூலிப்படைகளை அனுப்புகிறார் 

இதனால் கோபம் கொண்ட ராதிகா வீட்டை விட்டு பிரிந்திருக்கும் தன் மகன் விஷாலிவிடம் சொல்லி முகேஷ் திவாரியை  அடக்கி வைக்க சொல்கிறார்

ஸ்ருதியுடன் காதலும் மோதலுமாக ஜொள்ளுவிட்டு அலையும்  விஷால் போலிஸ் அதிகாரி சத்தியராஜையும் அவரது மனைவியையும் முகேஷ் திவாரி ஆட்களிடமிருந்து காப்பாற்றி..........

திவாரியை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவமானப்படுத்துகிறார்
முகேஷ் திவாரியின் ஆட்கள் விஷாலை கொலை செய்ய தேடுகிறார்கள்

இருவருக்கும் இடையில் நடக்கும் எலியும் பூனையும் பழிவாங்கும் காமெடிக் கூத்துகளாக  நாயகன் விஷால் தனி ஆளாக நின்று சண்டையிட்டு வில்லன் முகேஷ் திவாரியை எப்படி பழிவாங்குகிறார்...? என்பதை.......

 இயக்குனர் ஹரி வழக்கமான அவரது அதிவேக ஆக்சன்  பாதையில் தவறாமல் காதல்,நகைச்சுவையுடன் அதிரடியாக படம் காட்டுகிறார் 

முதல் பாதியில் விஷால்-ஸ்ருதி காதலுடன் வில்லன் திவாரியின் அட்டகாசங்களை வெளிச்சம் போடும் படம்.......
இரண்டாம் பாதியில் மின்னல் வேகமெடுத்தாலும் நிறைய குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் தடுமாறுகிறது நீளத்தை குறைத்திருக்கலாம்

நடிகர் விஷால்...அதிவேக அதிரடி சண்டைக் காட்சிகளில்  ஆங்கிலப் பட அதிரடி நாயகர்களை மிஞ்சும் வண்ணம் பாய்கிறார் காதல் காட்சிகளில் அவருக்கே உரிய நளினம் மிளிர்கிறது

அய்யோப் பாவம் ஸ்ருதி ஹாசனை அதிக மேக்கப்போட்டு துணிக்கடை விளம்பர பொம்மை ஆக்கிவிட்டார்கள்

மற்றபடி சத்தியராஜ்,ராதிகா,ஜெயபிரகாஷ்...குணச்சித்திரமாக நடிக்க.......
ஆண்ட்ரியா........சிறப்பு தோற்றத்தில் ஒரு கவர்ச்சி குத்து போட்டு  குதிக்க......
கவுண்டமணி-செந்தில் போன்று  சூரி-பிளாக் பாண்டி இருவரும் காமெடியில் கலக்குகிறார்கள்

இசையில் யுவன் சங்கர் ராஜா அமுக்கி வாசிக்க.....பிரியனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டும் கவர்கிறது ஸ்ருதியை கொழு கொழு கொலு பொம்மையாக காட்டுகிறது

ஆக மொத்தத்தில்.............

பூஜை திரைப்படம்...... இயக்குனர் ஹரி வெண்திரையில் கலவையாக படைத்த இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு,  கார்ப்பு, உவர்ப்பு,கசப்பு..அறுசுவை தீபாவளி விருந்து   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1