google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நாய்கள் ஜாக்கிரதை-சினிமா விமர்சனம்

Saturday, November 22, 2014

நாய்கள் ஜாக்கிரதை-சினிமா விமர்சனம்

படத்தின் நாய்....யகன் போன்று ஒரு பெல்ஜிய ஷெப்பர்ட் நாய் பெயரை முதலில் போட்டு நாய்குலத்துக்கே பெருமை தேடி கொடுத்துள்ளார்.....நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இயக்குனர் சக்திராஜன்  

ஹாலிவுட் போன்று நாய் சார்ந்த இன்வெஸ்ட்டிங் த்திரிலர் திரைப்படங்கள் கோலிவுட்டில் அரிதான ஒன்றாகும் அத்தகை திரைப்படத்தை தேர்வு செய்து நடித்துள்ள நடிகர் சிபிராஜ் பாராட்டுக்கு உரியவர்

படத்தின் கதையாக............
பனிபடர்ந்த மலைப் பிரதேசத்தில் உள்ள லடாக் இராணுவ எல்லைப்பகுதியில் இராணுவ பயிற்சி பெற்ற  ஒரு பெல்ஜிய ஷெப்பர்ட் நாயின் எச்சரிக்கையை மீறி செல்லும் அதன் மாஸ்டர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு மரணிப்பது போல் துவங்கும் படம்....

பிறகு இன்னொரு இராணுவ அதிகாரியின் பாதுகாப்பில் இருந்து கோயம்பத்தூரில் காவல்துறை ஆய்வாளராக இருக்கும் சிபிராஜ் வசம் சுபிரமனியாக வருகிறது  

மனவுளைச்சல் மிக்க போலிஸ் அதிகாரி சிபிராஜின் குடும்பத்தில் ஒருவராக மாறிய சுப்பிரமணி எப்படி அவருக்கு உறுதுணையாக இருக்கிறது...? ஒரு கட்டத்தில் கடத்தப்பட்ட அவரது கர்ப்பிணி மனைவி அருந்ததியை எப்படி காப்பாற்றுகிறது...? என்பதை நகைச்சுவை கலந்த திகில் காட்சிகளுடன் படம் காட்டுவதே........

சக்திராஜன் இயக்கத்தில்.....நாய்கள் ஜாக்கிரதை முழுமையான த்திரிலராக திரைக்கதை எழுதப்படாமல் முன்பாதி முழுவதும் காதாப்பாத்திரங்களில் அறிமுகத்திற்கு மட்டுமே என்று செல்ல இடைவேளைக்குப் பிறகு படம் சூடு பிடிக்கிறது  

சிபிராஜ்-அருந்ததி இடையே உள்ள கணவன்-மனைவி நெருக்கத்தை அதிகம் காட்டத்தவறியதும் வில்லன் (பாலாஜி) கதாப்பாத்திரத்தில் அதிக கவனம் செலுத்த தவறியதும் இயக்குனரின் பின்னடைவு ஆயினும் உச்சகட்ட காட்சி அதீத உணர்ச்சி பிரளயமாக காட்சிப்படுத்தி உள்ளார் 

நடிகர் சிபிராஜ்........நடிப்பில் புதுமையும் ஆற்றலும் தெரிந்தாலும் இன்னும் அவருக்கு முகத்தில் கதாபாத்திரத்தின் உணர்ச்சியை பிரதிபலிக்க செய்யும் கலை தெரியவில்லை  

ஆனால் அந்த பெல்ஜிய ஷெப்பர்ட் நாய் ஒரு கைதேர்ந்த நடிகர் போல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது அதன் பயிற்சியாளர் மட்டுமின்றி இயக்குனரும் அந்த நாயிடமிருந்து கற்றுகிட்ட மொத்த வித்தையையும் மொத்தமாக இப்படத்தில் இறக்கியுள்ளனர் 

சின்னப்பா தேவர்,இராமநாராயணன் படங்களில் வேடிக்கை காட்டும் மிருகங்களாக பார்த்த நமக்கு ஒரு நாயை விவேகம் உள்ள நடிகராக காட்டிய இயக்குனரை பாராட்டலாம்  

மகாத்மா காந்தியின் மேற்கோள்....."ஒரு நாட்டின் முன்னேற்றமும் பெருந்தன்மையும் அந்த நாட்டில் உள்ள விலங்குகள் எப்படி வழிநடத்தப்படுகின்றன என்பதில்தான் உள்ளது"....காட்டி பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டி துவங்கும் படம்....

தயாரிப்பாளர் சத்யராஜின் மறைந்த நண்பரை நினைவுபடுத்தும் விதமாக அமைதிப்படை கிளிப்பிங் காட்டுவதுடன்..........

இயக்குனர் சாமர்த்தியமாக வணிகரீதியில்  அஜித்-தின்  மங்காத்தா, விஜய்-யின் துள்ளாத மனமும் துள்ளும் படங்களின் துண்டு காட்சிகளை காட்டி அவர்களது ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார்  

இப்படி வித்தியாசமான நாய்கள் ஜாக்கிரதை த்திரிலர் திரைப்படத்தை நாய்கள் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஒருமுறை கண்டுகளிக்கலாம் 


அதேநேரம் நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் 1989-ல் ராட் டேனியல் இயக்கத்தில் மெல் ஹாரிஸ் நடித்த K-9 அமெரிக்க ஆக்ஷன் / திரில்லர்-நகைச்சுவை படத்தின் இன்ஸ்பிரேசன் என்றும் சொல்லப்படுகிறது


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

நாய்கள் ஜாக்கிரதை-படம் எப்படியிருக்கு?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1