google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வன்மம்-சினிமா விமர்சனம்

Friday, November 21, 2014

வன்மம்-சினிமா விமர்சனம்

யதார்த்தமான கிராமத்து கதைக்களத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் காதலும் சஸ்பென்ஸ் திகிலுடன் விஜய் சேதுபதி-கிருஷ்ணா மூலம் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா படம் காட்டுவதே....... வன்மம் 

படத்தின் கதையாக.........
குமரி மாவட்டத்தில் கடலும் மலையும் இயற்கை மிளிரும் கிராமத்தில் குடியும் ரவுடித்தனமாக வாழும் அன்னியோன்யமான நண்பர்கள் ராதா (விஜய் சேதுபதி), செல்லத்துரை (கிருஷ்ணா)

புலிவேசம் போட்டு ஆடு-புலி ஆட்டம் ஆடும் தன் நண்பன் செல்லத்துரையை அடிக்கவரும் போலிஸ் இன்ஸ்பெக்டரையே அடிக்கும் அளவுக்கு தில்லான  ராதா........
தன் நண்பன் செல்லத்துரை- வதனா (சுனைனா) காதலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறான் 

இன்னொரு ட்ராக்கில்......
ரத்தினம் (கோலிசோடா மதுசூதனன்)-ஜேபி என்று மர வியாபாரம் செய்யும்  இரண்டு பார்ட்னர்களுக்குள் ஏற்பட்ட மோசடியும் அதனால்  அவர்களுக்குள் ஏற்படும் பகையும் என்று படம் நகர......

ஒருநாள்.....
செல்லத்துரை-வதனா காதலை கண்டு ஆத்திரம் கொண்ட வதனாவின் அண்ணன்  ரத்தினம் செல்லத்துரையை வெட்டவருகிறான் நண்பனைக் காப்பாற்ற  ராதாவுக்கும் ரத்தினத்திற்கும் இடையில் நடந்த கைகலப்பில்  தவறுதலாக ரத்தினம் வெட்டப்பட்டு சாகிறான் 

ராதா தன் செல்வாக்கால் நண்பனுக்காக செய்த ரத்தினம் கொலையை மறைத்துவிடுகிறான்  

ஆனால்.....

ஜேபி தந்திரமாக செல்லத்துரையை ராதாவிடமிருந்து பிரித்து தன் பார்ட்னர் ரத்தினம் குடும்பத்திற்கு தொல்லை தருகிறான் இரண்டு நண்பர்களுக்கும் இடையில் பகையை உண்டாக்குகிறான் 

ராதாவோ குற்றவுணர்வின் பிரதிபலனாக   ஜேபியின் கொலைவெறியிலிருந்து ரத்தினம் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறான்

மீண்டும் நண்பர்கள் இருவரும் இணைந்தார்களா....? செல்லத்துரை-வதனா காதல் என்ன ஆனது....? என்பதை திரையில் காணுங்கள் 

படத்தின் சிறப்பான காட்சிகளாக...........
-கிருஷ்ணா புலிவேசம்  போட்டு ஆட்டை கடிக்கும் போது விஜய் சேதுபதி இன்ஸ்பெக்டரை அடிக்கும் காட்சி 
-சந்தையில் நடக்கும் யதார்த்தமான சண்டைக்காட்சி
-தான் கொலை செய்த ரத்தினத்தின்  கருமாதி நாளில்  அவர் வீட்டிலேயே விஜய் சேதுபதி போய் சாப்பிடுவது 
-ரத்தினம் கார் ட்ரைவர் குட்டியை  ஜேபி ஆட்கள் ரயிலில்  தள்ளிவிட்டு சாகடிக்கும் காட்சி 
மேலும் கடல்,மலை,மரங்கள்....இயற்கை காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில்..........வன்மம் படம் சொல்ல வந்த கதையை நச்சுனு சொல்லாமல் நீட்டிகொண்டு போகிறார் அதுவே படத்தின் வேகத்தடையாக உள்ளது பின்பாதியில் அதிகப்படியான  குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் மெலோட்ராமாவாக உள்ளது 

கிருஷ்ணா-சுனானா காதல் காட்சிகள் படம் பார்ப்பவர்களை நெளியவைக்கிறது மதுரை பக்கம் நடக்கும் கதை போல் கொலை கொலையா முந்திரிக்கா கதையாக உள்ளது அதிகப்படியான கதாப்பாத்திரங்கள் ஆனாலும் வசனங்களில் குமரித்தமிழ் கொஞ்சுகிறது 

விஜய் சேதுபதி.........முந்தைய ரம்மி ஜோசப் போல் ஏழையாகவும் கோழையாகவும் இல்லாமல் வன்மம் படத்தில் பணக்காரராகவும் தில்லுதுரையாகவும் ராதா கேரக்டரில் நண்பனுக்காக கொலையும் செய்யும் கதாப்பாத்திரத்தில் கிருஷ்ணாவுடன் ஷேர் செய்து நடித்துள்ளார் அவருக்கு தனிப்பட்ட டூயட் காட்சிகள் இல்லை இப்படியே போனால் ஷேர்-ஆட்டோ  விஜய் சேதுபதி என்று..........

கிருஷ்ணா...காதலைக்காட்டும் அளவுக்கு முகத்திலும் நடிப்பிலும்  ஆக்ரோஷத்தை காட்ட முடியவில்லை சுனைனா......அழகாக வந்து போகிறார் காதல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ளார் 

கொஞ்ச நேரம் வந்தாலும் கோலிசோடா மதுசூதனன் ராவ்.....பட்டையக் கிளப்புகிறார் மற்றபடி இவரது ட்ரைவர் குட்டியாக நடித்துள்ளவர் மனதில் நிற்கிறார் போஸ் வெங்கட் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது 

வன்மம் படத்தின் பிளஸ்-பாயின்ட்டாக இருப்பது இயற்கைக் காட்சிகளை இயற்கையாகச்  சுட்டு ஒவ்வொரு பிரேமிலும் படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பால பரணியின் ஒளிப்பதிவு 

அப்படியே எஸ்.தமனின் இசையில் பின்னணி இசை மிரட்டலாகவும் பாடல்கள் கேட்கும்படியும் இருப்பது செம....டைட்டில் இசை பக்தி பரவசம்

இதுவரை நாம் பலமுறை பார்த்து அலுத்து சலித்துப்போன நட்பு,கூட்டாளிகள் பகை....என்று புளித்துப்போன கதையால்  தள்ளாடினாலும் வன்மம் படம்.....

 அதன்   யதார்த்தமான காட்சியமைப்புக்காகவும்  ,விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்புக்காகவும்  ஒருமுறை பார்க்கலாம் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........

வன்மம்-படம் எப்படியிருக்கு?படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1