google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கயல்-சினிமா விமர்சனம்

Thursday, December 25, 2014

கயல்-சினிமா விமர்சனம்

மைனா,கும்கி போன்று காதலை ஆழமாக காட்டாவிட்டாலும் வெள்ளித்திரையில் ஒரு கவிதை போன்று காதலை மிகவும் அழகாக காட்சிபடுத்தி பார்வையாளர்களை கவர்கிறது........பிரபு சாலமோனின் கயல் 

ஆறு மாதம் உழைத்து சம்பாதிப்பதும் சம்பாதித்ததை ஆறு மாதம் ஊர் சுற்றி ஜாலியாக கொண்டாடுவதுமான அனாதை விடுதியில் வளர்ந்த இரண்டு   நண்பர்கள் ஆரோன் மற்றும் சாக்ரடிஸ் தங்கள் ஊர் சுற்றும் பயணத்தில்......
ஊரை விட்டு ஓடி வந்த ஒரு காதல் ஜோடி தப்பிக்க  உதவுகிறார்கள் 

ஜாதி வெறி பிடித்த ஊர் மக்களும் ஜமின்தாரும் இருவருரையும் பிடித்துவைத்து காதல் ஜோடியின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடியாமல்........

ஜமீன்தார் வீட்டு வேலைக்காரி கயல் மூலம் அவர்களிடமிருந்து உண்மையை தெரிந்துகொள்ள  முயற்சி செய்கிறார்கள் ஆனால் அய்யோ பாவம் கயலின் அழகில் மயங்கி ஆரோன் அவளைக் காதலிக்க.......

ஓடிப்போன ஜமிந்தாரின் மகளை கண்டுபிடித்து விடுவதால்   ஆரோனையும் சாக்ரட்டிசையும் ஊரைவிட்டு விரட்டிவிடுகிறார்கள் 


ஊரைவிட்டு ஆரோன் போனப் பிறகு  கயலுக்கும் ஆரோன் மீது காதல் வந்துவிட ஆரோனை தேடிப் புறப்படுகிறாள்  ஆரோனும் கயலை தேடி அலைகிறான்

ஆரோனும் கயலும் சந்தித்தார்களா....? அவர்கள் காதல் என்ன ஆனது.....? என்பதே கயல் படத்தின் கதை 

இயக்குனர் பிரபு சாலமன் கயல் படத்தின் முன்பகுதியை ஒன-லைனர் காமெடி,வேடிக்கை நிகழ்சிகள் மூலம் நகர்த்திச் சென்றாலும் அவரது சிறப்பான திரைக்கதை முழு படத்திற்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக ஒரு கவிதை படிக்கும் உணர்வை தருகிறது 

ஆரோனாக நடித்துள்ள  சந்திரனின் வசன உச்சரிப்பும் நடிப்பும் பார்வையாளர்களை கவர்கிறது அப்படியே காமெடியன் சாக்ரடிஸாக நடித்துள்ள வின்சென்ட் செம கலக்கல்  கயலாக நடித்துள்ள ஆனந்தியின் அழகான கண்கள் கவிதை பாடுகின்றன ஜமீன்தாராக நடித்துள்ள கிருஷ்ணமூர்த்தி திரையில் தோன்றும் போதெல்லாம் அவரது நடிப்பு பார்வையாளர்கள் கை தட்டலைப் பெறுகிறது 

இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு உயிரோட்டமாக உள்ளது அதேபோல் வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் மலை சூழ் கிராமத்தின் இயற்கை காட்சிகளும் மிரலவைக்கும் சுனாமி காட்சியும் பரவசமூட்டுகின்றன 

அதேநேரம்......

பிரபு சாலமோனின்  பாத்திரப் படைப்புகள் சுருளி (மைனா), பொம்மன் (கும்கி), ஆரோன் (கயல்)..அனைத்தும்   ஒரே சாயலில் இருகின்றன

கிளைமாக்ஸ் சொதப்பலை மறந்துவிட்டால்...
 வெள்ளித்திரையில் ஒரு கவிதை போன்று காதலை மிகவும் அழகாக காட்சிபடுத்தி பார்வையாளர்களை கவர்கிறது........பிரபு சாலமோனின் கயல்


 படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.....

கயல்-படம் எப்படியிருக்கு.....?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1