google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கே.பாலச்சந்தர்-திரையுலகின் பிரம்மா-1

Wednesday, December 24, 2014

கே.பாலச்சந்தர்-திரையுலகின் பிரம்மா-1

இன்று (23/12/14) கே.பாலச்சந்தர் மரணமடைந்தார் 
ஆனால் இயக்குனர் சிகரம்  கே.பாலச்சந்தர் என்ற படைப்பாளிக்கு என்றும் மரணமில்லை 

வெள்ளித்திரையில் அவரது படைப்புகள்  காலத்தை வென்றவைகள் 
தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில்  தன் இயக்குனர் திறமையால் மூன்றாவது துருவமாக இருந்த திரையுலகின் பிரம்மா..............கே.பாலச்சந்தர்
  
அவரது திரைப்படங்கள் அவை வெளிவந்த காலகட்டத்தின் சமுக,அரசியல்  அவலங்களின் பிரதிபலிப்புகள் 
அவைகளில் சில துணிச்சலான பெண்களை சித்தரித்து பெண்ணியத்தின் பெருமையை படம் காட்டின இன்னும் சில அடிமட்ட மேல்மட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளை பிரதிபலித்தன 

அவரது நீர்க்குமிழி திரைப்படத்தில்......
 சேது (நாகேஷ்) என்ற மரணத்தின் வாயிலில் இருக்கும் ஓர் அப்பாவி  வேடிக்கை இளைஞனை சித்தரித்து... 

                    thanks YouTube by Raveendrarasa Paramanathan

Death is very likely the single best invention of Life. 
It is Life's change agent.(Steve Jobs)
மரணம் பற்றிய  வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைத்தார் 

மேஜர் சந்திரகாந்த் படத்தில்.......
சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ள மோகன் (நாகேஷ்) தன் தங்கை விமலா (ஜெயலலிதா)வை காதலித்து ஏமாற்றி அவளது தற்கொலைக்கு காரணமான சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ள  மேஜர் சந்திரகாந்(சுந்தராஜன்) தின் மகனை பழிவாங் அவரது வீட்டிலேயே தஞ்சம் அடைவது  போன்று படைத்தார் 

அவரது பாமாவிஜயம் படத்தில்.........
நடுத்தர வர்க்கத்து கூட்டு குடும்பமான ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எத்திராஜ் (டி.எஸ்.பாலையா) தன் மூன்று மகன்களும்  (மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன்,நாகேஷ்) அவர்களது துணைவிகளும் (சௌகார் ஜானகி,காஞ்சனா,ஜெயந்தி)........

                                  thanks YouTube by petromax light

 பக்கத்து வீட்டிற்கு குடிவந்த நடிகை பாமா (ராஜஸ்ரீ) வின் பகட்டு வாழ்க்கையை கண்டு தாங்களும் அவள் போல் தகுதிக்கு மீறி வாழ ஆசைப்படுவதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் 

                                                                                          (தொடரும்)



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1