google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிசாசு-சினிமா விமர்சனம்

Monday, December 22, 2014

பிசாசு-சினிமா விமர்சனம்

வித்தியாசமான கதைக்கரு,திரைக்கதை,காட்சி அமைப்பு,ஒளிப்பதிவு.. போன்றவைகளை ரசிக்கும்  உலக சினிமா ரசிகர்களுக்கு காதல்,நகைச்சுவையை கலந்துள்ள திகிலுடன் படம்காட்டும்  மிஷ்கினின் பிசாசு வெண்திரையில் ஒரு புரட்சி மற்றவர்களுக்கு......?

விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும்  இளம்பெண் பவானி(ப்ரயாகா)யை  ஓர் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் சித்தார்த் (நாகா) 

மருத்துவமனையில் அந்தப் பெண்  சித்தார்த்தின் கையைப் பற்றிக்கொண்டு ஒரு காதல் பார்வையுடன் பரிதாபமாக இறந்துப்போகிறாள்  

ரொம்ப பீலிங் ஆன சித்தார்த் பவானியின் ஒற்றைக் கால் செருப்பை நினைவாக தனது அபார்ட்மெண்ட் வீட்டில் கொண்டு வைக்கிறார் தொடர்ந்து அவருக்கு அந்த வீட்டில் பல அமாஷ்ய நிகழ்வுகள் நடக்க ஒரு பெண் பேய் விரட்டியை வைத்து விரட்ட நினைத்தும் முடியாமல்.......
இறந்துபோன பவானிதான் பேயாக அலைவதாக அவரது தந்தை (ராதாரவி) மூலமாக அறிந்துகொள்கிறார்  

தன் தாயார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்பட அந்தப் பவானி பேய்தான் காரணம் என்று நினைத்த சித்தார்த் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளது சமாதியை தோண்டி உடலை எடுத்து தீயிட்டு எரித்து அந்த ஆவியை அழிக்க முயல்கிறார்

ஆனால் அந்தப் பேய்தான் தன தாயை காப்பாற்றியது என்பதை அறிந்த போது  சித்தார்த் பவானியின் விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார்
 

சித்தார்த் அந்த விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடித்தாரா? பவானியின் உடலை எரித்து ஆவியை அழித்தாரா? என்பதை இயக்குனர் மிஷ்கின் அவருக்கே உரிய தனித்தன்மை மிக்க திரைக்கதை, காட்சியமைப்புடன் படம்காட்டுவதே.....பிசாசு   

மிஷ்கினின் பிசாசு.....முன்பாதியில் திகில் நகைச்சுவையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறது பின்பாதியில் அறிவுஜீவி ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அதிகப் புரிந்துணர்வு குறியீடு காட்சிகள், நிறக்குருடு, மனோதத்துவம், பிரமை...போன்ற அசாதரணமான காட்சிகள்   சாதாரண ரசிகர்களை குழப்புகிறது

நடிகர்களில் பவானியின் அப்பாவாக வரும் ராதாரவி மனதில் நிற்கிறார் சித்தார்த்தாக நடித்துள்ள நாகா படம் முழுக்க அவரது முகத்தை மறைத்துக் கொண்டே வருவதால் நவரசமும் தெரியவில்லை ஒரு ரசமும் புரியவில்லை பேயாக வரும் ப்ரயாகா நல்ல அழகு என்பது ஒன்றிரண்டு காட்சிகளில் தெரிகிறது மற்ற காட்சிகளில் கிராபிக்ஸ் பேய்....பெண் பேய்விரட்டி நல்ல காமெடி நடிப்பு மற்றபடி சொல்லும்படி யாருமில்லை

அரோல் கரோலி இசையில் ஒரு பாடல் மற்றபடி பின்னணி இசையில் எதுவும் புதுமை இல்லை ஆனால் கதையை நகர்த்திச் சென்று நம்மை தூங்கவிடாமல் செய்கிறது ரவிராயின் இருட்டில் மிரட்டும்  ஒளிப்பதிவு குருட்டு ஒளிப்பதிவல்ல  


வெண்திரையில் மர்மயோகி படம் காலம்தொட்டு விட்டலாச்சார்யா  ஜெகன்மோகினி சமிபத்திய பிட்சா,வில்லா,முனி,அரண்மனை வரை எத்தனையோ பேய் படங்கள் பார்த்திருப்பிர்கள் ஆனால் ஹிஹி... மிஷ்கின் பகுத்தறிவுவாதியாக பேய்களை நக்கலடிக்கும் படமே......... பிசாசு
 

இன்னும் அவருக்கே உரிய இயக்கும் திறமை (மிஷ்கினிஸம்)யை  தெரிந்துகொள்ள ஒருமுறை திரையில் காணுங்கள்  பிசாசு.....இது பயம் காட்டாத ஆனால் பரிதாபம் உண்டாக்கும் ஒரு தலை காதல் பேய்

மற்றபடி.....

உலக சினிமா ரசிகர்களுக்கு காதல்,நகைச்சுவையை கலந்துள்ள திகிலுடன் படம்காட்டும்  மிஷ்கினின் பிசாசு வெண்திரையில் ஒரு புரட்சி மற்றவர்களுக்கு........கொஞ்சம் அலற்சி 


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........

மிஷ்கினின் பிசாசு எப்படியிருக்கு? 




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவர்க்கும் நன்றி........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1