google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐ-சினிமா விமர்சனம்

Thursday, January 15, 2015

ஐ-சினிமா விமர்சனம்இங்கே விக்ரம்-சங்கர்-ஏ.ஆர்.ரகுமான்-பி.சி.ஸ்ரீராம்...போன்ற கலையுலக ஜாம்பவான்களின் ஐ திரைப்பட விமர்சனமும்  ஐ-படம் எப்படி இருக்கு? மற்றும் ஐ-படத்தில் உங்களுக்கு பிடித்தவை...? என்ற கருத்துக்கணிப்பும்

ஐ-திரைப்படம் நாம் இதற்கு முன்பு பார்த்த வழக்கமான காதல் பழிவாங்கும் கதையுள்ள படமே ஆயினும் நடிகர் விக்ரம் நடிப்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைக்கதையாலும் சிறப்பு பெறுகிறது

ஒரு கல்யாண மண்டபத்திலிருந்து மணப்பெண்ணை முதுகு கூனிய ஒரு மாற்று திறனாளி கடத்தி செல்வதுபோல் துவங்கும் ஐ-படத்தின் கதையாக......

உடற்பயிற்சி கூடம் நடத்திக்கொண்டே மிஸ்டர் தமிழ்நாடு ஆக முயற்சி செய்யும் லிங்கேசன் (விக்ரம்) விளம்பர மாடல் அழகி தியா (எமி ஜாக்சன்) மீது அபிமானமாக இருக்கிறார்

 மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்துக்கான போட்டியில் ஏற்படும் மோதலில் பழைய மிஸ்டரையும் அவனது கூட்டாளிகளையும் அடித்து துவைத்து விரோதத்தை சம்பாதித்துக்கொள்ளும் லிங்கேசன் தான் நேசிக்கும் மாடல் அழகி தியாவுடன் மாடல் செய்யும் வாய்ப்பு....
தியாவின் குடும்ப டாக்டரும் லிங்கேசனின் ஜிம்மில் பழக்கமானவருமான சுரேஷ் கோபி மூலம்  கிடைக்கிறது

மாடல் உலகில் பிரபலமான ஜானின் (உபேன் படேல்)  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தியா மிஸ்டர் தமிழ்நாடு லிங்கேசனை.....
ஒரு அழகுகலை நிபுணர்  திருமங்கை  உதவியுடன் ஆண் மாடல் லீ(விக்ரம்) யாக மாற்றி  தன்னுடன் விளம்பரத்தில் நடிக்க சீனாவுக்கு அழைத்து செல்கிறார்

சீனாவில் தன்னை ஒருதலையாக காதலிக்கும் திருமங்கையை லீ அவமதிப்பதுடன் லீ-தியா இடையே காதல் வளர்கிறது  விளம்பர வாய்ப்பிழந்த ஜான் சீன ரவுடிகளை அனுப்பி லீயை கொள்ள முயற்சிக்கிறான் ஜான் மற்றும் திருமங்கையின் விரோதங்களையும் லீ  சம்பாதிக்கிறான்

லீ-தியா நடித்த i-பிரான்ட் வாசனைத் திரவியங்கள்,அழகுசாதனப் பொருட்கள்...போன்றவைகளில் நடித்த லீ அதன் தொழில் அதிபர் ராம்குமாரின் இன்னொரு தயாரிப்பான ICE குளிர்பானத்தில்  நச்சுப்பொருள் இருப்பதால் நடிக்க மறுப்பதுடன் பேட்டியும் அளித்து அவரது தொழில் நஷ்டமடைய காரணமாகி அவரது பகையையும் சம்பாதிக்கிறார்

இப்படி இவர்களது பகையை  சம்பாதித்துக்கொண்ட லீ ஒருநாள் தாக்கப்பட்டு டாக்டர் சுரேஷ் கோபியின் அலட்சியத்தால் உடல் உருவம் படிப்படியாக சீர் குலைந்து அகோரமான முதுகு கூனிய மாற்றுதிறனாளியாகிறார்

தன் அகோர நிலைக்கு காரணமான மேற்படி ஜிம்பாய்,மாடல் ஜான்,தொழில் அதிபர் ராம்குமார்,திருநங்கை,டாக்டர் சுரேஷ் கோபி ஆகியோர் தன் உடலில் செலுத்திய i -வைரஸ் கிருமிகளே காரணம்  என்பதை ஒரு வயதான நல்ல டாக்டர் மூலம் அறிந்த லிங்கேசன்....

 எதிரிகள்  ஒவ்வொருவரையும் தன்னைப் போன்று அகோர உருவம் கொண்டவர்களாக்கி எப்படி தண்டிக்கிறார் என்பதையும்............

மணக்கோலத்தில் லிங்கேசனால் கடத்தப்பட்ட தியா என்ன ஆனாள்..? என்பதையும் திரையில் காணுங்கள்

இயக்குனர் ஷங்கர் அவரது வழக்கமான அதேநேரம் வித்தியாசமும் பிரமாண்டமும் கலந்த பாடல்காட்சிகள் மூலம் மூன்று மணிநேர படமாக்கி பார்வையாளர்களை கிறங்கடித்து மயக்குகிறார் ஆனாலும்  நிறைய வில்லன்களை உருவாக்கியும் ஊகிக்கக்கூடிய திருப்பங்களாலும் ஐ-படத்தின்   விறுவிறுப்பை குறைத்து விட்டார்

இன்னும் ஐ படம் அந்நியன் படத்தின் சண்டைக் காட்சிகளையும் பாடல்களையும் நினைவுபடுத்துவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்

விக்கிரம்........"ஐ" சங்கரின் படம் என்பது போய்  விக்ரமின் "ஐ"படம்  என்று அழைக்க தோன்றும் அளவுக்கு ஈடுபாட்டுடன் மூன்று வேறுபட்ட உடல் தோற்றத்துடன் நடித்துள்ளார்  

எமி ஜாக்சன்.......மாடல் அழகியாக கவர்சிக் காட்டி பாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்கிறார் 

சந்தானம்........அவருக்கே உரிய ஒன்-லைனர் காமடியில் மட்டுமல்லாது நன்பேண்டா...என்று குணச்சித்திரத்திலும் கலக்குகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்....பந்தா ஆக்டராக வந்து கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கிறார்  மற்றபடி ராம்குமார்,உபேன் பட்டேல்,சுரேஷ் கோபி......நடித்துள்ளனர்

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையைவிட பாடல்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சிகள்,சீனத்து இயற்க்கை காட்சிகள் கண்களை கவர்கின்றன

ஆக மொத்தத்தில்..............
ஷங்கரின் ஐ படத்தை விக்ரமின் ஐ படம் என்பதே பொருத்தம்படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

-படம் எப்படி இருக்கு?வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............

-படத்தில் உங்களுக்கு பிடித்தவை எவை?
(ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு வாக்களிக்கலாம்)
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............

இங்கே வாசித்தீர்களா...?

ஐ -ட்விட்டர்கள் விமர்சனம்  
சினிமாவை சீர்படுத்தும்   ட்விட்டர் போராளிகளின் 
நறுக் விமர்சனங்கள்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1