google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிகே(PK)இந்தி-சினிமா விமர்சனம்

Wednesday, January 07, 2015

பிகே(PK)இந்தி-சினிமா விமர்சனம்

அமீர் கான்-ராஜ்குமார் ஹிரானி கூட்டணியினரின் 3 இடியட்ஸ் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றி நகைச்சுவை பாலிவுட் திரைப்படம்.......பிகே

பிகே(PK) படத்தின் கதையாக......
மனித உருக் கொண்ட வேற்று கிரகத்து ஏலியன் (அமீர் கான்) பூமியில் உள்ள மனிதர்களையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்ய ஒரு விண்கலத்தில் ராஜஸ்தான் பாலைவனத்தில்  நிர்வானான நிலையில் வந்து இறங்க...
அவரிடமிருந்த விண்கலத்தின் தொலைதொடர்பு ரிமோட் கண்ட்ரோல் கழுத்துப்பட்டையை ஒரு திருடன் அபகரித்து ரயிலில் தப்பி ஓடுகிறான்

அடுத்த காட்சியாக பெல்ஜியம் புரூகேஸில்......
தொலைகாட்சி நிருபரான இந்திய இந்து இளைஞ்சி ஜக்கு (அனுஷ்கா ஷர்மா) ஒரு திரையரங்கு வாசலில் ஒரு பாக்கிஸ்தான் முஸ்லிம் இளைஞன் சஃர்பராஜ் (ஸ்ரீசாந்த் சிங் ராஜ்புத்) என்பவரை சந்தித்து காதல் கொள்ள.....
 ஜக்குவின் தந்தை தங்களது குடும்ப சாமியார் தபஸ்வி மகாராஜிடம் (சவுரப் சுக்லா) ஆலோசித்து அவர்களது திருமணத்தை  எதிர்க்கிறார்

ஆனாலும் ஒரு தவறான கடிதத்தால் அவர்கள் காதல் முறிந்து ஜக்கு இந்தியா திரும்பும் போது டெல்லியில் கடவுளை காணவில்லை என்ற துண்டு பிரசுரங்களுடன் ரயிலில் கடவுளைத் தேடும் ஏலியனை சந்திக்கிறாள்

ஏலியனை பின்தொடரும் ஜக்கு கோயில் உண்டியலில் திருடுவது,கோயில் சுவரில் உச்சா அடித்து போலிஸ் லாக்கப்பில் தூங்குவது போன்ற விசித்திர நடவடிக்கையால் அவனது கதையை கேட்கிறாள்.......

அவளிடம் ராஜஜ்தானில் ரிமோட் கன்ட்ரோலை பறிகொடுத்த ஏலியன் எப்படி டெல்லி வந்து பிகே (குடிகாரன்) ஆன கதையை சொல்கிறான்  

ஒருவரின் கைகளை தொடுதல் மூலம் அவரின் மொழி,உணர்வுகள்,பழக்கம்... அனைத்தும்  அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஏலியன் அந்த ஊர் எல்லையில் ஒரு காரிலிருந்து ஆடைகளை திருடி அணிந்துக் கொண்டு அந்த மக்களோடு மக்களாக அலைகிறான்

அப்போது பைரோன் சிங் (சஞ்சய் தத்) இசைப்பாடகர் குழுவின் வாகனத்தில் ஏற்பட்ட விபத்தால் அவருடன் நண்பராக பழகுகிறான் அங்கே ஒரு விபச்சார பெண் உதவியால் அவளது கை தொடுதல் மூலம் போஜ்புரி மொழியை கற்றுக்கொண்டு நண்பர் பைரோன் சிங் தூண்டுதலால் ரிமோட் கன்ட்ரோலை தேடி டெல்லி வருகிறான்

அவரது விசித்திரமான நடவடிக்கையால் டெல்லி மக்களை அவரை பிகே (PEE KAY) என்று அழைத்து கடவுள்தான் அவரது காணாமல் போன ரிமோட்டை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்

முதலில் ஒரு இந்து கோவிலில் கடவுள் சிலையிடம் முறையிடும் பிகே பிறகு
ஒரு கிருத்துவ சர்ச்சில் இந்து பூஜை முறையுடன் தேங்காய் பழ தட்டுடன் நுழைய.....தொடர்ந்து முஸ்லீம் மசூதியில் ஒயின் புட்டிகளுடன் செல்ல....அனைவராலும் விரட்டி அடிக்கப்படும் பிகே......

சிவன் வேடமணிந்த ஒருவரை கடவுள் என்று துரத்தி  தபஸ்வி மகாராஜின் பிரச்சார போதனை கூடத்தில் நுழைந்து விடுகிறார் அங்கே அவரது ரிமோட் கன்ட்ரோலை கண்டு எடுக்க முயலும் போது தபஸ்வியின் ஆட்களால் விரட்டப்படுகிறார் 

பிகேயின் கதையை அறிந்த ஜக்கு அவளது தொலைகாட்சி சேனல் உரிமையாளர் உதவியுடன் தபஸ்வியிடமிருந்து பிகேவின் ரிமோட்டை மீட்க ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி மீட்க உதவுகிறாள் பிகே தபஸ்வியின் கபட வேடத்தை அம்பலப்படுத்தி அவருக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்குகிறான் 
ஜக்கு மீது ஒருவித ஒருதலைக் காதல் கொண்ட பிகே அவளது கடந்த கால காதல் முறிவை கண்டறிந்து மனம் வருந்துகிறான்

அதேநேரம் பிகேவின் நண்பர் பைரோன் சிங் தொலைக்காட்சியில் அந்த ரியாலிட்டி ஷோவை பார்த்துவிட்டு ரிமோட்டை திருடி தபஸ்வியிடம் விற்ற   ராஜஸ்தான் திருடனுடன் டெல்லிக்கு வருகிறார் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து பிகே கண்முன்னே இருவரும் சாகிறார்கள் 

மீண்டும் தபஸ்வி ஒரு ரியாலிட்டி ஷோவில் பிகேவிடம் சவால்விட மூட நம்பிக்கையால் ஏற்படும் விபரிதங்களால் மனமுடைந்த பிகே ஜக்குவின்  காதல் முறிவுக்கு தபஸ்வியின் முஸ்லிம் பகை உணர்வு மட்டுமல்ல தவறான கடிதமும் காரணமாகும் என்றும்........

 சஃர்பராஜ் இன்னும் ஜக்குவை தேடி இந்தியாவில் அலைவதை உறுதி படுத்தி தபஸ்வியிடமிருந்து ரிமோட்டை மீட்டு தனது சொந்த கிரகத்திற்கு விண்கலத்தில் சில நினைவுப் பொருட்களுடன் பயணிக்கிறார் 

 பிகேவுடன்  தனது இழப்பை நினைவுபடுத்தி ஜக்குவும் PK என்று ஒரு நாவல் வெளியிடுகிறாள்

ஓராண்டுக்குப் பிறகு.......

 பிகே அவரது கிரகத்திலிருந்து பூமிக்கு சுற்றுலாவாக இங்குள்ள மக்களின் மூட நம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி ஒருவரை ஒரு விண்கலத்தில் அழைத்து வருவாது போல் பிகே திரைப்படம் நிறைவடைகிறது 

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி அவரது முந்தைய நகைச்சுவை படங்கள் 3 இடியட்ஸ்,முன்னாபாய் போன்று பிகேபடத்தில் யதார்த்தமான மத சம்பந்தப்பட்ட குத்தல்,நக்கல்,பகடிகளை  காட்சிகளாக படம்காட்டுகிறார் அதில் இந்து மத நம்பிக்கைகளை சிரிப்பூட்டுவது தூக்கலாக உள்ளது மற்றபடி போராட்டம் பண்ணும் அளவுக்கு அவதூறாக இல்லை 

பிகே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அமீர் கான் தனது முகத்தில் வேற்று கிரக மனிதராக அப்பாவியான குழந்தைத்தன முக பாவனையை ஒரு சவாலாக பிரதிபலிக்கிறார் 

ஜக்கு ஜனனியாக நடித்துள்ள அனுஷ்கா ஷர்மா.....அமீர் கானுடன் தோளுக்கு தோள் கொடுத்து சிறப்பாக நடிக்க,பிகே நண்பராக கொஞ்ச நேரமே திரையில் வரும் சஞ்சய் தத் மனதில் இடம்பிடிக்கிறார் இந்து சாமியாராக வரும் சவுரப் சுக்லாவின் அலட்டல் நடிப்பு அட்டகாசம் 

ஆக மொத்தத்தில்.............
கடவுளைவிட கடவுள் பற்றிய மத மூட நம்பிக்கைகளை நகைப்பூட்டும் காமெடி படமான அமீர் கானின் பிகே (PK) இந்தி திரைப்படம்.....

மூட நம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு படம் மதவெறியர்களுக்கு மதவுணர்வுகளை சீண்டிப்பார்க்கும் பப்படம்

  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1