google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காக்கி சட்டை-சினிமா விமர்சனம்

Friday, February 27, 2015

காக்கி சட்டை-சினிமா விமர்சனம்

கண்களில் காமெடி-சீரியஸ் என்று இருவித வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலித்து காக்கி சட்டை படத்தின் மூலம் கோலிவுட் மாஸ் ஹீரோக்கள் அஜித்,விஜய், சூர்யா.. வரிசையில் இடம் பிடித்துள்ளார் வெற்றி தளபதி சிகா என அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் 

kaakisattai


காதலும் கிண்டலுமாக கூத்தடிக்கும் ஒரு சாதாரண போலிஸ் இளைஞர்  ஒரு நிகழ்வுக்குப் பிறகு எப்படி  சக்திவாய்ந்த போலிஸ்காரராக மாறுகிறார்  என்ற வழக்கமான கதைக்கருவை......

பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதையாலும் சிவகார்த்திகேயன் நடிப்பாலும் இயக்குனர் துரை செந்தில்குமார் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் ஒரு ட்விஸ்ட் வைத்து.......

 காதல்-காமெடி-சென்டிமென்ட்-அதிரடி-சஸ்பென்ஸ் என்ற ஐந்து சுவைகளும் கலந்த பழைய பஞ்சமிருதத்தை புது டப்பாவில் அடைத்து படம் காட்டுவதே....... காக்கி சட்டை

சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற வெறியுடன் புதுசா வேலைக்கு வந்துள்ள இளம் போலிஸ் மதிமாறன் (சிவகார்த்திகேயன்)  போகப் போக தெரிந்துகொள்கிறார் அவரது வேலையால்  ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்று.....

இதற்கிடையில் நர்ஸ் திவ்யா (ஸ்ரீதிவ்யா) வை காதலிக்கும் மதிமாறன் அவள் வேலை செய்யும்   மருத்துவமனையில் நடக்கும் உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலை கண்டுபிடிக்கிறார் 

  அந்த குற்றவாளி கும்பலுடன் மறைமுக தொடர்பு வைத்துள்ள அவரது மூத்த போலிஸ் அதிகாரிகளால் ஊழலில் மிதக்கும்  போலிஸ் துறையை  அதிரடியாக  எப்படி சுத்தம் செய்கிறார்   என்பதே காக்கி சட்டை படத்தின் கதை........  படத்தின் சிறப்பான காட்சிகள்........
- கேரளா படகு வீட்டில் திருட்டு நகைகளை சகா கண்டுபிடிக்கும் காட்சி
-சகா மாறுவேடத்தில்  பிச்சை எடுக்கும் காட்சி 
-காக்கி சட்டை பாடலில் வரும் பிரமாண்டமான பில்டிங் காட்சி 
-திவ்யாவை காப்பாற்ற கொட்டும் மழையில் சகா போடும் அதிரடி சண்டைக்காட்சியின் ஒளிப்பதிவும் பதறவைக்கும் BGM ஒலிப்பதிவும்
-சகா திவ்யாவுடன் சேர்ந்து SUN GLASS விற்கும் காமெடிக் காட்சி 
-மனோபாலாவுடன் சகா-மயில்சாமி பேசும் காமெடி மிமிக்கிரி  
இன்னும் நிறைய ட்விஸ்ட் காட்சிகளும் கூர்மையான வசனங்களும் உள்ளன-
  சிவகார்த்திகேயன்........காமெடி-அதிரடி என்று இரு வேறுபட்ட நடிப்புகளை  அசால்டாக பிரதிபலிக்கிறார் அவர் திரையில் தோன்றும் போதும் அவரது நக்கலும் விக்கலுமான (ஹர ஹர மகாதேவி...) வசன உச்சரிப்பின் போதும் அரங்கத்தில் அவரது ரசிகர்களின் கர்ஜனை அவர் ஒரு மாஸ் ஹீரோ ஆகிவிட்டதை உணர்த்துகிறது

ஸ்ரீதிவ்யா.....அழகான கண்களில் புன்னகை மிளிர கொஞ்சம் நடிக்கவும் செய்துள்ளார்

போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள  பிரபு சிவகார்த்திகேயனுக்கு உசுப்பேற்றி விடும் படத்தின் முக்கிய திருப்பமாக உள்ளார்

பயங்கர பில்டப்புடன் வரும் பாலிவுட் காமெடி நடிகர் விஜய் ராஸ்  முற்றிலும் மாறுபட்ட வில்லனாக ஆனாலும் முடிவில் வழக்கமான மசாலா வில்லனாக மாறி புஸ்வானமாகிறார்

இமான் அண்ணாச்சி,மனோபாலா,மயில்சாமி...இவர்களுடன் சிரிச்சா போச்சு காமெடி குழுவினர்களும் சிரிக்கவைக்கிறார்கள்

அனிருத் இசையில்........
பாடல்கள் வெளிவந்த உடன் காட்டுதீ போல் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவியதும் விமர்சகர்கள் பாராட்டியதும் படத்தில் விசுவலாக காணும் போது சிறப்பாக உள்ளது அதுக்கும் மேல....BGM காட்சிகளுடன் கச்சிதமாக பொருந்தி பிரமிக்க வைக்கிறது

எம்.சுகுமார் ஒளிப்பதிவில்........
பாடல்கள்  அதிலும் "காதல் கண் கட்டுதே...' பாடல் பெரிய திரையில் காணக் கண்கள் கோடிவேண்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஸ்டைலில் நடக்கும் மழை சண்டைக்காட்சி பார்வையாளர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது

ஆக மொத்தத்தில்.........
சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஓர் அட்டகாசமான அதிரடி மாஸ் மசாலா பொழுதுபோக்கு திரைப்படம்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

kaakisattai


காக்கி சட்டை-படம் எப்படியிருக்கு.....?வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

வலைதளங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள.....

காக்கி சட்டை-விமர்சனங்கள்  

பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1