google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சண்டமாருதம்-சினிமா விமர்சனம்

Monday, February 23, 2015

சண்டமாருதம்-சினிமா விமர்சனம்


பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு ஆபத்தான இரசாயனங்களை வழங்கும் ஒரு மோசமான குற்றவாளி வில்லனை ஒரு நேர்மையான ரகசிய போலிஸ் அதிகாரி- என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஹீரோ அழிக்கும் படு பயங்கரமான பழைய கதையுடன் வந்துள்ள மசாலா திரைப்படம் ......சண்டமாருதம்  


ஆனால்......

sarathkumar


மர்ம நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரைக்கதையால் நவீன கால விஞ்ஞான  சமாச்சாரங்கள் silastic gel,silicone fishes,MacGuffin chemical... போன்ற பதம்களுடன் புராணகால மகாபாரத சக்ராவியுகம் போன்ற பதம்களும் கலந்து புதுமையாக தெரிகிறது  

இன்னும் புதுமையாக வில்லனும் ஹீரோவும் என்று இரட்டை வேடங்களில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒருவரே அதிரடியாக நடித்துள்ளார் 

அதி பயங்கர குற்றவாளி வில்லன் சரத்குமார் பணத்துக்காக ஆபத்தான கெமிக்கலை தீபாவளியன்று இந்தியாவின் 101 நகரங்களில் வெடிக்க திட்டமிடும்   பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சிக்க......

நேர்மையான ஹீரோ போலிஸ் அதிகாரி சரத்குமார் வில்லனை அழித்து எப்படி அந்த திட்டத்தை முறியடிக்கிறார்...? என்பதை.........

 இயக்குனர் வெங்கடேஷ் அவருக்கே உரிய ஸ்டைலில் கதையை பற்றி கவலைப்படாமல் சரத் ரசிகர்களை மனதில் வைத்து நிறைய அதிரடி திகில் திருப்பங்களுடன் படம் காட்டுவதே.......சண்டமாருதம் (புயல்)



படத்தின் சிறப்பான காட்சிகளாக......... 
-இரசாயன வெடிகுண்டு நிரம்பிய காசி செம்பால் சமுத்திரக்கனி கொள்ளப்படும் திரிலான காட்சி 
-ஹீரோ சரத் மதுரையில் ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் காட்சி 
-வாட்டர் கேன் சப்ளை பன்னும் இமான் அண்ணாச்சி ஓவியா மீது ஜொல்லுவிடும் காமெடி காட்சிகள் 
-கெஸ்ட் ஹவுஸில் ராதா ரவியும் காதல் தண்டபாணியும் கொலை செய்யப்படும் காட்சி 
இது போல் நிறைய காட்சிகள் படத்திற்கு சிறப்பூட்டினாலும் லாஜிக் இல்லாத காட்சிகளுக்கும் பஞ்சமில்லை 

சமுத்திரக்கனி ஹீரோ சரத்குமார் போலிஸ் நண்பராகவும் ராதாரவி வில்லன் சரத்குமார் நண்பனாகவும் தோன்ற.......

கவர்ச்சி நடிப்பில் ஓவியாவும் குடும்பப் பெண்ணாக மீரா நந்தனும் வந்து போக.....
இன்னும் வின்சென்ட் அசோகன்,கானா உலகநாதன்,இமான் அண்ணாச்சி,சிங்கம் புலி...என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர் 

அனேகன் படத்தில் எழுத்தாளர்கள் சுபா திரைக்கதையில் illussion, மாயை,என்று ஒரு சைகோலாஜி கதை இருந்தது

 சண்டமாருதம் படத்திலும் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் பல நவீன சமாச்சாரங்கள் இருந்தாலும் அவைகளை புறம்தள்ளி படம் முழுக்க சரத்குமார் மட்டுமே இருக்கிறார் 

sarathkumar

விஜயகாந்த்,அர்ஜுன் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான  தேசபற்று நடிகர்கள் வரிசையில் சண்டமாருதம் படத்தின் மூலம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் இணைந்துவிட்டார்....வந்தேமாதரம் 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1