google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கில்லாடி-சினிமா விமர்சனம்

Tuesday, February 03, 2015

கில்லாடி-சினிமா விமர்சனம்

அதிரடி இயக்குனர்கள் லிங்குசாமி,பேரரசு...வரிசையில் அவர்களையும் மிஞ்சிவிட்ட A.வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் நடித்துள்ள கில்லாடி... தெலுங்கு கார மசாலா படங்களை த்தூ..என்று தூக்கித் தூரப்போடும் அளவுக்கு காமெடி கலந்த பக்கா தமிழ் அதிரடி மசாலா திரைப்படம்

சாலையோரம் ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும் போது ஹீரோயின் பிளாஷ் பேக் காட்சியாக நினைத்துப் பார்ப்பது போல் அதிரடியாக துவங்கும் கில்லாடி படத்தின் கதையாக...........

கோபக்கார கல்லூரி மாணவரான தரணி (பரத்) தன் நண்பன் காதலித்த உயர் போலிஸ் அதிகாரி ஒருவரின் மகளை கல்யாண மண்டபத்திலிருந்து கடத்தி திருட்டு கல்யாணம் நடத்திவைக்கிறார் அதனால் அவரது கோபத்திற்கு ஆளாகிறார்

அதேநேரம் மிகப் பெரிய பணக்காரியும் சொர்ணக்கா மாதிரி ராங்கிக்காரியுமான அங்கயர்கண்ணி  (ரோஜா) தன்  மகள்  அஞ்சலி (நிலா)யை தன் தம்பி ரவுடி ராக்கப்பன் பவானி (வின்சென்ட் அசோகன்) க்கு கட்டாய திருமணம் நடத்த முயற்சிக்க.........
அஞ்சலி வீட்டைவிட்டு தப்பி ஓடும் போது தற்செயலாக தரணியின் பைக்கில் லிப்ட் கேட்டு பேருந்து நிலையத்திற்கு செல்கிறாள்

பவானியும் ஆட்களும் அஞ்சலியை தரணிதான் மறைத்து வைத்திருப்பதாக நினைத்து அவரது தங்கையை கடத்தி மறைத்து வைத்து தரணியை ஒப்படைக்க சொல்கிறார்கள் 

தரணியும் தேடி அலைந்து அஞ்சலியை கண்டுபிடித்து மீட்டு வரும் போது இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொள்கிறது அதனால் அவரது பாதுகாப்பில் அஞ்சலியை மறைத்து வைத்து பவானியிடமிருந்து தன் தங்கையை மீட்கிறார்  அங்கயர்கன்னியிடம் தான் அஞ்சலியை மணக்கப் போவதாகவும் முடிந்தால் தடுத்துக்கொள் என்றும் சவால்விடுகிறார் 

தரணியை பழிவாங்க துடிக்கும் போலிஸ் உயர் அதிகாரியுடன் இணைந்து அங்கயர்கண்ணி-பவானி தங்கள் ஆட்களுடன் அஞ்சலியை மீட்க்க போராடுகிறார்கள் 

அவர்களை எதிர்த்து தனி ஆளாக கில்லாடி தரணி கில்லாடித்தனமாக போராடி அஞ்சலியை மணந்தாரா....? என்பதை தெரிந்து கொள்ள கில்லாடி படத்தை திரையில் பாருங்கள்

இயக்குனர் வெங்கடேஷ்........கில்லாடி திரைப்படத்தில் ஒரு மசாலா படத்துக்கான சிறப்பம்சங்கள்.......ஹீரோ அறிமுகப் பாடல்,கோபக்கார நாயகன்,நாயகனின் பாசமுள்ள குடும்பம், தேவதை மாதிரி ஆடையில் நாயகி,சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்,குத்து நடனத்துடன் காதல் டூயட்,பயங்கரமாக கூச்சல் போடும் வில்லன்,பறக்கும் கார்கள் என்று  அத்தனையும் சரியான விகிதத்தில் கில்லாடித்தனமாக கலந்து படைத்துள்ளார் 

பரத்.......அஜித்,விஜய் மாதிரி அதிரடி நாயகர்களாக மாற முயற்சிக்கிறார் நிலா....நடிப்பதுபோல் அழகாக வந்து போகிறார் 
வின்சென்ட் அசோகன்....வழக்கமான வில்லன்கள் போன்றுதான் நடித்துள்ளார்  ரோஜா......வில்லி சொர்ணக்கா இடத்தை நிரப்ப முயற்சித்துள்ளார் விவேக்-செல் முருகன் கூட்டனியினர் தனி ட்ராக்கில் காமெடியாக நடித்து சிரிக்கவைக்க ........

மற்றபடி.......
.ஒரு கில்லாடி இயக்குர் கில்லாடித்தனமாக வெள்ளித்திரையில் மசாலா தோசை சுடுவதே......கில்லாடி திரைப்படம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1