google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டூரிங் டாக்கீஸ்-சினிமா விமர்சனம்

Wednesday, February 04, 2015

டூரிங் டாக்கீஸ்-சினிமா விமர்சனம்


மதங்களால் பிரிவு படும் காதல் என்று முதல் பாதியிலும்  கிராமத்து சாதி வெறிக் கொலைகள் என்று இடைவேளைக்குப் பிறகும்  வேறுபட்ட இரண்டு தனித்தனி கதைகளை  வெள்ளித்திரையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் படம் காட்டுவதே........டூரிங் டாக்கீஸ் 



முதுமையிலும் தன் இளமைக்காதலை அசை போட்டு பிரிந்து சென்ற தன் காதலியை நினைத்து வாடும் ஒரு முதியவர் பற்றி LOVE-IN-75 என்ற படத்தின் கதையாக.........


சென்னையில் மோசமான உடல்நிலையால் இன்றோ நாளையோ என்று மரணத்தை தழுவக் காத்திருக்கும் 75 வயது பெரியவர் ஆண்டனி தாத்தா (எஸ்.எ.சந்திரசேகர்) விடம் அவரது நண்பர் கோட்டி (மனோபாலா) அவரது இளவயது   காதலி ஹேமா (பாப்ரி கோஸ்) வை சிம்லாவில் பார்த்ததாகச் சொல்ல......

ஆண்டனி தன் 25 வயதில் ஏற்பட்ட காதலை நினைத்து அசைபோடுகிறார் 

கிருத்துவரான ஆண்டனியும் இந்து மார்வாடிப் பெண்ணான ஹேமாவும்  உயிருக்கு உயிராக காதலித்து ஒரு குத்து பாட்டும் ஆட்டமும் போட்டு......
ஆண்டனி ஹேமாவை சோலி முடித்துவிடுகிறார் 
பிறகு இருவரும்  சர்ச்சில் திருமணம் செய்ய நினைக்கும் போது.......

ஹேமாவின் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவளை மிரட்டி அழைத்துக்கொண்டு அவளது பெற்றோர் சென்னையை விட்டு எங்கோ போய்விடுகிறார்கள்

முதியவரான ஆண்டனி தாத்தா தன் காதலியைத் தேடி சிம்லாவுக்கு பயணிக்கிறார் அங்கே இரண்டு தமிழ் வாலிபர்கள் உதவியுடன்  தேடி அலைந்து ஒரு வயதான பாட்டி(ஹேமா)யை  கண்டுபிடித்து  இருவரும் கண்களால் பேசி........
முதியவர் ஆண்டனி  தாத்தா அந்தப் பாட்டியின் மடியில் இரத்தம் கக்கி உயிரைவிடுகிறார் 

இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர்.......நிறைய  லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரொம்ப இளமைக் கவர்ச்சியாக படம் காட்டுகிறார் கொஞ்சம் தவறினாலும் மலையாள கில்மா படமாயிருக்கும் 

நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர்.....பல நடிகர்களை உருவாக்கிய
இயக்குனர்கள் பாலச்சந்தர்,பாரதிராஜா,பாலு மகேந்திரா.....போன்றவர்கள் வரிசையில் எஸ்.எ.சந்திரசேகரும் செல்லுலாயிடில் தானும் நடிகன்டா என்று பதிவு செய்துவிட்டார் 
ஆனால்...படம் பார்ப்பவர்கள் முகம்தான் ஏனோ தானோ என்று ஆகிவிட்டது திரையரங்கில் இருந்த இருபது பேரில் பத்து பேர் இடைவேளைக்கு பிறகு காணோம் 

நாம் விமர்சனம் எழுதவேண்டுமே என்ற தலையாயக் கடமையால் அமர்ந்திருக்க....
இடைவேளைக்குப் பிறகு ஆரம்பித்த மேல் சாதி-கீழ் சாதி அடக்குமுறையை படம் காட்டும் செல்வி 5-ஆம் வகுப்பு என்ற படத்தின் கதையாக..........


கொண்டிவீரன் பட்டி கிராமத்தில் சபலம் நிறைந்த முதியவர் ஜெயபாலன் அவரது மகன் ரோபோ சங்கர் செய்யும் ஆற்று மணல் கொள்ளையை தட்டிக்கேட்கும் கீழ் சாதி தாசில்தாரை உயிரோடு புதைத்துவிடுகிறார்கள் 

இதை கேள்விப்பட்டு துப்பறிய வருகிறார்கள்  ஒரு தொலைகாட்சி இளம் நிருபர்கள் அஸ்வின்-காயத்திரி (இவர்கள் துப்பறிவதைவிட போடும் காதல் சண்டைகள் அதிகம்)

ஜெயபாலன் வீட்டு வேலைக்காரி பூங்கொடி (சுனுலட்சுமி)யின் தங்கை 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி செல்வியும் ரோபோ சங்கரின் மகளும் ஒரே வகுப்பில் படிக்கும் உயிருக்குயிரானதோழிகள் ரோபோ சங்கர் மாணவி செல்வியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட......

வேலைக்காரி பூங்கொடி தந்திரமாக சபலபுத்தி ஜெயபாலனை மர்ம உறுப்பில் தேள் கடிக்க வைத்து ஊருக்குள் நிர்வாணமாக அலையவிட்டு சாகடிக்கிறாள் 

ரோபோ சங்கர் குடிக்கும் சாராயத்தில் தன் மூத்திரத்தை கலந்து கொடுத்து பழிவாங்குகிறாள் 

உண்மை தெரிந்த ரோபோ சங்கர் பூங்கொடியை கொலை செய்ய விரட்டும் போது ஒரு ட்விஸ்ட்........
ரோபோ சங்கர் சுடப்பட்டு கொல்லப்படுகிறார் 


இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.....இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார்..? சாதி வெறிக் கொடுமையா? குழந்தை பாலியல் வன்கொடுமையா...? என்பது அவருக்கே வெளிச்சம் 

ரோபோ சங்கர்........இதுவரை நம்மை நகைச்சுவை வேடங்களில் சிரிக்க வைத்த இவர் இப்படத்தில் கொடூரக் காம வெறியனாகவும் சாதி வெறியனாகவும் நடித்துள்ளார் கஷ்ட காலம் அவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான் 

குடியும் புகையும் மட்டுமே மிஞ்சி நிற்கும் டூரிங் டாக்கீஸ் படமே தனது கனவு படம் என்று சொல்லும் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அப்படியே இதுவே தனது கடைசிப் படம் என்று சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சி 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1