google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எனக்குள் ஒருவன்-சினிமா விமர்சனம்

Saturday, March 07, 2015

எனக்குள் ஒருவன்-சினிமா விமர்சனம்

மாயை (illusion),மறுபிறவி..போன்ற உளவியல் சிந்தனையுடன் காதலைக் கலந்து வந்த அனேகன் படம் போல் மனஉளைச்சல், தூக்கமின்மை (insomnia),கனவு நிலை...போன்ற உளவியல் சிந்தனையுடன் காதலைக் கலந்து வந்துள்ள எனக்குள் ஒருவன்....... 

திரைப்படம் அதன் சிறப்பான திரைக்கதையாலும் யதார்த்தமான காட்சியமைப்புகளாலும் தமிழில் ஒரு வித்தியாசமான psychological த்திரிலர் படமாக அமைந்துள்ளது

கடன் வாங்கி சினிமா எடுத்து கஷ்டப்படும் துரை (ஆடுகளம் நரேன்)  என்பவரின் பழைய தியேட்டரில் வேலை செய்யும் விக்கி என்ற விக்னேஷ் (சித்தார்த்) தூக்கமில்லாமல் அவதிப்பட்டு....
ஒரு லூஸ் கெமிஸ்ட்யிடம்  (ஜான் விஜய்) அவரது கண்டுபிடிப்பான  லூசியா என்ற மாத்திரையை வாங்கி சாப்பிடுகிறார்

லூசியா என்பது தூக்கத்துடன் நாம் விரும்பும்  கனவு வாழ்க்கையை தொடர்ச்சியாக  தரக்கூடிய  ஒருவித டபாக்கூர் மாஜிக் மாத்திரை

லூசியா மாத்திரை  உதவியால் விக்னேஷ் தன்னை ஒரு பிரபலமான பிஸியான நடிகராக கனவுகாண்கிறார் 

தியேட்டரில் வேலை செய்யும் விக்னேஷ்-க்கு  பிட்சா ஷாப்பில் வேலைசெய்யும் திவ்யா (தீபா சன்னதி) வை பெண் பார்க்கிறார்கள் விக்னேஷ்-திவ்யா இருவரின் ஏற்றத்தாழ்வு நிறைந்த காதல் தொடர்கிறது

 விக்னேஷின் கனவுலகில் அதே திவ்யா  அவர் காதலிக்கும் மாடல் அழகியாக வருகிறார் தியேட்டர் முதலாளி துரை நடிகர் விக்னேஷிடம் வேலை செய்யும் உதவியாளராக வருகிறார்

அங்கேயும் இங்கேயும் வில்லன் ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்  போலிஸ் அதிகாரிகளும்  விசாரனை,பாதுகாப்பு என்று நிஜத்திலும் கனவிலும் விக்னேஷ் வாழ்க்கையில் வந்து போகிறார்கள்

இப்படி நடிகர் விக்னேஷ்  காட்சிகளை கருப்பு வெள்ளையாகவும் தியேட்டர் வேலையாள் விக்னேஷ்  காட்சிகளை வண்ணமயமாகவும் மாறி மாறி படம்காட்டி நம்மையும் லூசியா சாப்பிட்டது போல் எது நிஜம்..? எது கனவு? என்ற  ஒருவித கனவு குழப்ப நிலைக்கு  அழைத்து சென்று........

அறிமுக இயக்குனர் பிரசாத் ராமர் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் உடன் நிஜம்-கனவு இரண்டு கதைகளில் வரும் காதல்  முடிச்சைஅவிழ்க்கிறார்

ஒரு த்திரிலர் படத்திற்கு உரிய அம்சமாக நள்ளிரவில் காட்டுக்குள் இருவர் வேனிலிருந்து இறங்கி சில மாத்திரை மருந்துகளை தீயிட்டு கொளுத்துவது போன்று தொடங்கும் படம்.......

தொடர்ந்து  ஆஸ்பத்திரியில் கோமாவில் படுத்திருக்கும் சித்தார்த்தை காட்துவதும் போலிஸ் அதிகாரிகள் லூசியா விற்ற புரோக்கர்களை  விசாரிப்பது போல் காட்டுவதும் படம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது

அதேநேரம் எவ்வித அதிரடி ஆக்சன் காட்சிகளும் இல்லாமல் படம் ஆமை வேகத்தில் நகர்வதும் சிலநேரம் நகர அடம்பிடிப்பதும் எனக்குள் ஒருவன்  படம் பார்ப்பவர்களையும்  தூக்க நிலைக்கு கொண்டு செல்கிறது

சித்தார்த்....ஹேர்-ஸ்டைல்,உடல் மொழி,வசன உச்சரிப்பால் இரு வேறுபட்ட நடிப்பை காட்டி நடித்துள்ளார் 
தீபா சன்னதி......நடிக்கத்தெரிந்த அழகான உயரமான நடிகைகள் வரிசையில் இடம்பிடிக்க.......
ஆடுகளம் நரேன் நல்ல திறமையான குணசித்திர நடிகராக மாறியுள்ளார் ஜான் விஜய்.....விலங்கமான கெட்டப்பில் காமெடி செய்கிறார் 
அஜய் ரத்தினம்...போலிஸ் அதிகாரியாக வருகிறார்

சந்தோஸ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு இடையூறு இல்லை பாடல்கள் கேட்கும் வண்ணம் உள்ளன மாணிக்க விநாயகம் பாடிய கொட்டி போச்சி....பாடல் குத்துப்பாட்டு ரகம் 

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கனவுக் காட்சிகள் கருப்பு வெள்ளையாக வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

ஆக மொத்தத்தில்........

கிறிஸ்டோபர் நோலனின் inception படத்தின் தாக்கத்தில் உருவான லூசியா கன்னட படத்தின் ரீமேக்கான எனக்குள் ஒருவன்....... 

காதல் நிறைந்த நிஜம்-கனவு என்ற இரு கதைகளை ஒன்றாக படம் காட்டி  படம் பார்ப்பவர்களை எது நிஜம்? எது கனவு? என்பதை கண்டுபிடிக்கச் சொல்லி கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது 


அறிவுஜீவி உலக சினிமா நேயர்களுக்கு நல்ல விருந்து.....வெகுஜன நேயர்களுக்கு மருந்து.........லூசியா தூக்க மருந்து 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1