google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சூர்யா Vs சூர்யா (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Sunday, March 08, 2015

சூர்யா Vs சூர்யா (தெலுங்கு)-சினிமா விமர்சனம்


கோடியில் ஒருவருக்கு இருக்கக்கூடிய ஒருவித மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன் பற்றிய ஒரு நல்ல நாவலுக்கு உரிய கதைக்கரு.........

 இன்னும் கொஞ்சம் தெளிவான திரைக்கதை அமைத்திருந்தால் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்திருக்கும் ... சூர்யா Vs சூர்யா (தெலுங்கு)
15 நிமிடங்களுக்கு மேல்   சூரிய ஒளி உடம்பில் பட்டால் மரணம் நிச்சயம் என்ற ஒருவித அரிய மரபணு (Porphyria) நோயால் பிறவியிலேயே பாதிக்கப்பட்ட சூர்யா (நிகில்).....

தனது பகல் நேர வாழ்க்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு இரவில் மட்டுமே வெளியில் நடமாடுவதும் நண்பர்களுடன் பழகுவதும் இரவு நேரக்கல்லூரியில் பயில்வதுமாக........

இரவுநேர நிகழ்சிகளை நடத்தும் ஒரு தொலைகாட்சி  தொகுப்பாளினி சஞ்சனா (திரிதா சவுத்ரி) மீது சூர்யா காதல் கொள்ள....

சூர்யா-சஞ்சனா இருவரின் காதலும் ஆட்டம் பாட்டத்துடன் தொடர்கிறது ஒரு கட்டத்தில் சஞ்சனாவுக்கு சூர்யாவின் இருட்டு வாழ்க்கை நோய் ரகசியம் தெரிந்ததும்  அய்யோ பாவம் காதல் அத்துக்கிட்டு போகிறது 

சூர்யா தன் மரபணு நோயை குணப்படுத்திக் கொண்டாரா...?  மீண்டும்  தன் காதலி சஞ்சனாவுடன் சேர்ந்தாரா...? என்பதே சூர்யா Vs சூர்யா (தெலுங்கு) படத்தின் மிச்சம் சொச்சம் கதை........

படத்தின் முன் பகுதி காமெடியும் காதலுமாக கலகலப்பாக நகர்கின்றது பின் பகுதியோ குடும்ப சென்டிமென்ட் மற்றும் உணர்சிகரமான  காட்சிகளால் தத்தளிக்கிறது  ஆனாலும்  இயக்குனர் கார்த்திக் காட்டமனேனிக்கு   இப்படம் டோலிவுட்டில் வெள்ளித்திரையில் ஒரு முழு வெற்றி பெறாத பரிசோதனை முயற்சி

டோலிவுட்டில் நாவல்டியாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் நிகில் இப்படத்திலும் தன் உணர்சிகளை கொட்டி குழப்பமான சூழ்நிலைகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார்

திரிதா சவுத்ரி....சாதாரனமாக அதேநேரம் இயல்பாக  நடித்துள்ளார்  மதுபாலா....நிகிலின் அம்மாவாகவும் சாயாஜி ஷின்டே....திரிதாவின் அப்பாவாகவும் சத்யா,தனிகலா பரணி....நிகிலின் நண்பர்களாகவும்    நடித்துள்ளார் 


ஆக மொத்தத்தில் .......

சூர்யா Vs சூர்யா (தெலுங்கு.......
டோலிவுட்டில் ஒரு புதுமையான பரிசோதனை முயற்சி இதுவரை அடிபிடி அதிரடி மசாலாப் படங்களே தெலுங்கில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு வெள்ளித்திரையில் ஒரு நாவல் படித்த மகிழ்ச்சி 

கொஞ்சம் டிங்கரிங் பட்டி பார்த்து கோலிவுட்டில் ஓடவிட்டால்  ABCDE....Z ஏதாவது ஒரு சென்டரில் ஓடும் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1