google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரோமியோ ஜூலியட்-சினிமா விமர்சனம்

Friday, June 12, 2015

ரோமியோ ஜூலியட்-சினிமா விமர்சனம்



ஷேக்ஸ்பியரின் Romeo Juliet என்ற சோக காதல் நாடகத்தின் கதைக்கருவான காதலை மட்டும் எடுத்துக்கொண்டு உண்மையான காதலுக்கு பணமே பிரதானம் என்பதை ஜெயம் ரவி - ஹன்சிகா மூலம் காமெடி கலந்து காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் லக்ஷ்மன்........ரோமியோ ஜூலியட்

ஜிம் கோச்சரான ஜெயம் ரவியை பெரிய பணக்காரராக நினைத்துக்கொண்டு காதலிக்கிறார் ஏர்-ஹோஸ்டஸ்  ஹன்சிகா......
ஜெயம் ரவியும் அம்மணி மீது காதலில் விழுகிறார் 

ஜெயம் ரவி ஏழை என்ற உண்மை தெரிந்ததும்   வாழ்க்கைக்கு பணமே முக்கியம் என்று நினைக்கும் ஹன்சிகா அவரை நிராகரிக்கிறார் 

காதலியை  மறக்க முடியாத ஜெயம் ரவி ஹன்சிகாவை பின் தொடர்ந்து வாழ்க்கைக்கு உண்மையான அன்பே முக்கியம் என்று உணர்த்துகிறார் 

ஜெயம் ரவி-ஹன்சிகா காதல் வென்றதா....? என்பதை காமெடியாக படம் காட்டுகிறார் இயக்குனர் 

காதல்-வாழ்க்கை இரண்டையும் இயக்குனர் கையாண்டுள்ள விதம் உணர்வுப் பூர்வமாக நம்பும்படி உள்ளது படத்தின் சிறப்பு மேலும் பாகவதர் காலம் தொட்டு எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்,கார்த்திக், அஜித்,விஜய், தனுஷ்...என்று காதலுக்கு மரியாதை செய்யும் இயக்குனரின் புதுமையான ஐடியா.......நன்று

ஜிம் பயிற்சியாளராக ஜெயம் ரவி அதற்குரிய உடற்கட்டுடன் தோன்றுகிறார் 
ஹன்சிகா......அழாகாக தோன்றி அருமையாக நடித்துள்ளார் 

இமான் இசையில் டண்டணக்கா, அரக்கி,தூவானம்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாடல்கள் அனைத்தும் ரசனை ரகம் 

ஆக மொத்தத்தில்..........

காலத்திற்க்கேற்ப எதுவும் புதுமை இல்லாமல் பலமுறை நாம் பார்த்து சலித்த பழைய காதல் கதைக்கருவுடன் வந்துள்ள......
 ரோமியோ ஜூலியட் படம் ....
ஜெயம் ரவி-ஹன்சிகா இடையிலான கெமிஸ்ட்ரியை ரசிக்கவும் 
 இமானின் இசைச் சாரலில் நனையவும் ..........பார்க்கலாம் 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1