google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செல்வந்தன்-சினிமா விமர்சனம்

Sunday, August 09, 2015

செல்வந்தன்-சினிமா விமர்சனம்


மகேஷ் பாபு-ஸ்ருதிஹாசன் நடித்து தெலுங்கில் ஸ்ரீமந்த்துடு என்றும் தமிழில் செல்வந்தன் என்றும் வந்துள்ள படம்....காதல்,காமெடி,அதிரடி,  ஆந்திரா கலப்படம் 

ஆடம்பரமாக வாழும் பணக்கார அப்பா ஜெகபதி பாபு-வுக்கு மகனான மகேஷ் பாபு எளிமையாக வாழ்கிறார் கண்டதும் காதலாக ஸ்ருதி-யிடம் காதலைச் சொல்ல....
அம்மணியோ அவருடைய பூர்விக கிராமத்தின் அவல நிலையை எடுத்துரைக்கிறார் 

மகேஷ் பாபு தன்னுடைய கிராமத்துக்கு சென்று ரவுடிகளிடமிருந்து கிராம மக்களை காப்பாற்றி ஸ்ருதியை கரம் பிடித்தாரா...? என்பதே செல்வந்தன் படத்தின் கதை 

மகேஷ் பாபு நாற்பதை நெருங்கினாலும் இருபது போல் கல்லூரி மாணவராக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக படம் முழுக்க கலக்கலாக வருகிறார் 
ஸ்ருதிஹாசன் பாடல் காட்சிகளில் துள்ளலாக நடித்துள்ளார் திரையில் வரும்போதெல்லாம் மூஞ்சில பவுடர அப்பிக்கொண்டு வருகிறார்

பாகுபலி தெலுங்கு படமாக இருந்தாலும் பிரபாஸ் டோலிவுட் நடிகராக தமிழில் யாருக்கும் தெரியாதவராக இருந்தாலும் அதன் பிரமாண்டம்  இங்கே மட்டுமல்ல உலகம் முழுக்க வரவேற்ப்பு பெற்றது 

பாகுபலியை நினைத்து செல்வந்தன் போட்டுக்கொண்டது ....சூடு 
சென்னையில் கூட எந்த தியேட்டரில் ஓடுதுன்னு கண்டு பிடிப்பதற்குள் கிழிஞ்சது கிருஷ்ணகிரி கதையானது 

ஆக மொத்தத்தில்..........

செல்வந்தன் தமிழ் நாட்டுக்கு வந்து ஏழை ஆகிவிட்டானோ...?
 என்று நினைக்க தோன்றுகிறது  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1