google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தாக்க தாக்க - சினிமா விமர்சனம்

Saturday, August 29, 2015

தாக்க தாக்க - சினிமா விமர்சனம்


அரசியல் அல்லக்கைகள்,விபச்சார அடிமைகள்...சமுக அவலங்களை பிரதிபலிக்கும் ஒரு  கடினமான கதைக்களத்தில்  திகில் காட்சிகளுடன் காதல்,சென்டிமென்ட், நட்பு,காமெடி, பொழுது போக்கு அம்சங்கள்  உள்ள அதிரடி திரைப்படம்...தாக்க தாக்க 

பலவந்தமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட  ஓர் இளம் பெண் தான் பிரசவித்த  ஆண் குழந்தையை சமுக விரோதிகளின் கொடும் தீயிலிருந்து காப்பாற்றுவது போல் உணர்சிகரமாக துவங்கும் தாக்க தாக்க படத்தின் கதையாக......

சென்னையில் ஒரு மதுப்பாரில் வேலை செய்யும் விக்ராந்த் இளம் வயதில் தன தாயை கொன்ற அருள்தாசை கண்டதும் ஆத்திரத்தில் கொலை செய்துவிடுகிறான் 

அதனால் அருள்தாஸின் தம்பி ராகுல் வெங்கட்,கூட்டாளி போஸ் வெங்கட்  விக்ராந்தின் நண்பனையும் காதலியையும் சித்திரவதை செய்கிறார்கள் இவர்களிடமிருந்து விக்ராந்த் தன நண்பனை  காப்பாற்றினாரா...? வில்லன்களை அழித்தாரா...? என்பதை திகில் ட்விஸ்ட் காட்சிகளுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சீவ் 

இயக்குனர் சஞ்சீவ்.....காதல்,காமெடி காட்சிகளை புறந்தள்ளி நட்பு,அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட விபச்சார கதைக்களத்தை காற்றில் பறக்கவிட்டார் 

நடிகர் விக்ராந்த்......சிரிப்பையும் காதலையும் தூக்கி எறிந்துவிட்டு சீரியஸான முகப்பாவத்துடன் அதிரடி சண்டைக்காட்சிகளில் வித விதமான ஆயுதங்களுடன் அதிரடி நாயகனாக அசால்டாக தூள் கிளப்புகிறார் 

அபிநயா,அரவிந்த் சிங்,ராகுல் வெங்கட்,போஸ் வெங்கட்....என்று எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தாலும்   பார்வையாளர்களை பதறவைக்கும் நடிப்பில் அருள்தாஸ் அடித்து நொறுக்குகிறார் 

பாடல்கள் சொதப்பினாலும் ஜெக்ஸ்பின்னணி இசை பயம் காட்டுகிறது 
சண்டைக்காட்சிகளில்  சுஜித்தின் ஒளிப்பதிவு பிரகாசிக்கிறது 

ஆக மொத்தத்தில்.................

எடுத்துக் கொண்ட கதைக் கருவிலிருந்து தடம் மாறினாலும் நட்பும் பழிவாங்கலும் என்று தூக்கலான அதிரடி சண்டைக் காட்சிகளால் ரசிகர்களை தாக்கி தாக்கி ரசிக்க வைக்கிறது........தாக்க தாக்க
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1