google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யட்சன்-சினிமா விமர்சனம்

Friday, September 11, 2015

யட்சன்-சினிமா விமர்சனம்


ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் காமெடிக் காட்சிகளுடன் நிறைய சஸ்பென்ஸ் திருப்பங்கள்  நிறைந்த அதிரடி திரைப்படம்........யட்சன் 

நடிகர் அஜித் கட்-அவுட்க்கு பாலாபிஷேகம் செய்யும் கொலைவெறி ரசிகனான ஆர்யா ஊரில் ஒரு கொலையும் செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவருகிறார் 
அதே சமயம் சினிமா நடிகர் ஆகவேண்டும் என்ற வெறியில் கிருஷ்ணாவும் சென்னைக்கு ஓடி வருகிறார் 

சென்னையில் கொலைகாரனாக மாறவேண்டிய  ஆர்யா சினிமா நடிகராகிவிடுகிறார் 

சினிமா நடிகராக வேண்டிய  கிருஷ்ணா கொலைகாரன் ஆகிவிடுகிறார் 

இந்த  சஸ்பென்ஸ் முடிச்சை சில பல நகைச்சுவை காட்சிகளுடன்   
யட்சன் என்றால் இயக்குபவன் என்று பொருள். யார் யாரை இயக்குகிறார்கள் என்பதுதான் கதை என்று சொல்லும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.......

 ஆர்யா கதை-கிருஷ்ணா கதை என்று மாறி மாறி பார்வையாளர்களை விழி பிதுங்க படம் காட்டுவதே.........யட்சன் 

 திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்  முன்பாதி ஆமை வேகம் இடைவேளை வரை இழுவை பின்பாதி சொதப்பல் சுபாவின் கதை வசனம் ஆறுதல் 

ஆர்யாவின் பண்பட்ட நடிப்பு  ஆனாலும் அறிந்தும் அறியாமலும்,பட்டியல்... படங்களை நினைவூட்டுகிறது கிருஷ்ணாவின் நடிப்பைவிட பேச்சு நடை சொதப்பல் வித்தியாசமான நடிப்பில் வில்லன் அடில் ஹுசைன் 

தீபா சன்னதியின் நடிப்பைவிட சுவாதி ரெட்டியின் காமெடி நடிப்பு பிரமாதம் இன்னும் தம்பி ராமையா,எம்.எஸ்.பாஸ்கர்,ஜான் விஜய்,ஆர்.ஜே.பாலாஜி,எஸ்.ஜே சூர்யா.... என்று கோலிவுட் கோமான்கள் அனைவரும் நடித்து நம்மை குழப்பி உள்ளனர் 

யுவனின் இசையில் முனுமுனுக்க வைக்கும் துண்டுத் துண்டு பாடல்கள் 

ஆக மொத்தத்தில்..........

யட்சன்.........
இன்னும் பழைய பானையிலையே இருக்கும்  பழைய கள்ளு காதல்,காமெடி, சஸ்பென்ஸ் சினிமா பிரியர்களுக்கு பிடிக்கும் 



படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........


யட்சன்-படம் எப்படி இருக்கு....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1