google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வேதாளம்-சினிமா விமர்சனம்

Tuesday, November 10, 2015

வேதாளம்-சினிமா விமர்சனம்


தல அஜித்தின் வேதாளம்....முழுக்க முழுக்க வணிகரீதியில் எடுக்கப்பட்ட  டோலிவுட் சமாச்சாரங்களுடன் ஒரு  கோலிவுட் மசாலா பொழுதுபோக்கு படம் 

படத்தின் கதையாக..... 


தான் அதிகம் நேசிக்கும் தங்கை தமிழை (லஷ்மிமேனன்)  கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா வந்த அப்பாவித்தனம் நிறைந்த கார் டிரைவர் கணேஷ் (அஜித்)க்கு அங்குள்ள மற்ற கார் டிரைவர்கள் உதவி புரிவது கொல்கத்தா போலீஸ்க்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது 

கனேஷ்க்கும்   ஓர் இரட்டை கொலைக்கும் உள்ள  பயங்கர தொடர்பைக்  கண்டு அனைவரும் திகைக்கின்றனர் 

எதிர்பாராத திருப்பம் நிறைந்த அந்தக் கொலைக்குள் புதைந்திருக்கும் மர்மமே வேதாளம் படத்தின் கதையாகும் 

சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் மட்டுமின்றி வேதாளம் படமுழுக்க பரவிக்கிடக்கிறது இயக்குனர் சிவாவின்  தெலுங்கு மசாலா வாசனை மற்றபடி எதையும் புதுசாக காட்சிப்படுத்தவில்லை வசனங்களில் ஸ்லாங் உச்சரிப்புகளில் கவனம் செலுத்தவில்லை

தல அஜித்தின் வித்தியாசமான  நடை,உடை,பாவனையுடன் இரண்டு வேறுபட்ட தோற்றம்,அதிரடி   சண்டைக்காட்சிகள்  அதுக்கும் மேல அவரது வில்லத்தனமான நடிப்பு அவரது ஹார்ட்கோர் ரசிகர்களை குஷிப்படுத்தி தெறிக்க விடும்

சூரி,மயில்சாமி,கோவை சரளா லொள்ளுசபா சாமிநாதன்...போன்றவர்களால் படத்தின் முன் பகுதி  கலகலப்பாக உள்ளது  

வக்கீலாக வரும் ஸ்ருதிஹாசன் ஒரு காமெடியனாக பல காட்சிகளில் சிரிக்க வைத்து  ‘Don’t You Mess With Me’  பாடலில் கனவுதேவதை போல் கவர்ச்சியால் அசத்துகிறார் 

படத்தின் திரைக்கதையின் தூண்களாக லட்சுமிமேனனும் தம்பி ராமையாவும் பெண்களை கவரும் விதம் வருகின்றனர்

அனிருத் இசையில் " வீர விநாயகா " ஆலுமா டோலுமா" பாடல்கள் அஜித் ரசிகர்களுக்கு தெறிமாஸ்  படத்தின் பின்பகுதி கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் தள்ளாடினாலும் அனிருத் BGM பக்கபலமாக உள்ளது எதிர்பார்த்த பிளாஷ்-பேக் காட்சியும்  சோடைபோகவில்லை  

வெற்றியின் ஒளிப்பதிவு  சண்டைக்காட்சிகளிலும் பாடல்காட்சிகளிலும் களை கட்டுகிறது ‘Don’t You Mess With Me’ பாடல்காட்சி சிறப்பாக இருந்தாலும் கதைடோனுக்கு ஒத்துவரவில்ல 

சிறுத்தை சிவா-அஜித் கூட்டணியினரின் முந்தைய வீரம் படம் போல் வேதாளம் படத்தையும் அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக கண்டு ரசிக்கலாம் 

ஆகமொத்தத்தில்...........

அஜித்தின்  இரண்டு வேறுபட்ட தோற்றம்,அதிரடி அடிதடி,வித்தியாசமான வில்லன் நடிப்பு போன்றவைகளால்  வேதாளம் படம்...
அவரது ரசிகர்களுக்கு தெறிக்கும் தீபாவளி விருந்து


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..........        வேதாளம் -படம் எப்படி இருக்கு?


படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 

இங்கே வாசித்தீர்களா....? 


http://parithimuthurasan.blogspot.in/2015/11/thoongavanam-vimarsanam.html

தூங்காவனம்-சினிமா விமர்சனம்

தூங்காவனம்-பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்றாலும் அந்தக் கதையை தமக்கே உரிய அதிரடி நடிப்பாலும் அட்டகாசமான பாய்ச்சலாலும் விறுவிறுப்பான த்திரிலர் திரைப்படமாக்கி....மேலும் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1