google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பசங்க-2 சினிமா விமர்சனம்

Sunday, December 27, 2015

பசங்க-2 சினிமா விமர்சனம்

இது குழந்தைகள் படம் என்பதை விட.......அதற்கும் மேல 
குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு பாடம் நடத்தும்  படம் என்பதே சிறந்தது  சமுக சிந்தனையுடன் பெற்றோர்-குழந்தைகள் பிரச்னைக்கு தீர்வு சொல்ல எடுக்கப்பட்டுள்ள தமிழ் சினிமா என்றால் ஆச்சரியம் 

முனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் சுட்டித்தனமான குழந்தைகள் 

கட்டுப்பாடான பள்ளிக்கூடங்களின் முறைசார் கல்வி முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மறுக்கிறார்கள் அதனால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு  ஏற்படும் பல பிரச்சனைகள்  

மனநல மருத்துவர் சூர்யாவும் ஆசிரியை அமலாபாலும் அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து எப்படி சுமுகமான விடுதலை கிடைக்கச் செய்கிறார்கள்  என்பதே.........இயக்குநர் பாண்டிராஜின் பசங்க-2

இயக்குநர் பாண்டிராஜ்.........வழக்கமான தமிழ்சினிமா இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு வியாபார சமாச்சாரங்கள் எதுவுமின்றி சாட்டையடி வசனங்களால் அமுக அவலங்களை செல்லுரித்து செல்லுலாய்டில் படம் காட்டியுள்ளார் வாழ்த்துக்கள் 

முனிஸ்காந்த், வித்யா,  கார்த்திக்குமார், பிந்துமாதவி,குழந்தைகள் நிஷேஷூம், வைஷ்ணவி  இவர்களுடன் ஸ்டார் நடிகர் சூர்யாவும் அமலாபாலும் இயல்பாக நடித்துள்ளது படத்திற்கு சிறப்பு

இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பலர் கௌரவத் தோற்றங்களில் வந்து படத்தின் கதையோட்டத்திற்கு உதவுகிறார்கள் 

இசையமைப்பாளர் அரோவ்கெரோலியின் மனதை உருக வைக்கும் பின்னணி இசை ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் வண்ணமயமான சிலிர்க்க வைக்கும் காட்சிகள் படத்துக்கு மெருகூட்டுகின்றன 


ஆக மொத்தத்தில்......

பசங்க-2.......தமிழ் சினிமாவில் வித்தியாசமாக வந்துள்ள ஒரு சமுக சிந்தனை கொண்ட குடும்பத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய குடும்பப் படம்  
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உங்களுக்கு ஒவ்வொரு பாடம் சொல்லும் படம்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1