இயக்குனர் வேல்ராஜ்-நடிகர் தனுஷ் கூட்டணியில்.....
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியால் மிகவும் எதிர்பார்க்க பட்ட படம் தங்கமகன் இதிலும் குடும்ப சென்டிமென்ட்வுடன் அம்மா பாசத்தில் மிளிர்ந்து ரசிகர்களை பிளிந்து.....
தங்கமகன் படத்தின் கதையாக......
தன உயர் அதிகாரி கொடுத்து வைத்திருந்த 5 கோடி ரூபாய் கருப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் தன அக்கா மகனிடம் கொடுத்து ஏமாந்த கே.எஸ்.ரவிகுமார் கோழையாக தற்கொலை செய்து கொள்ள.....
அவரது மகன் தனுஷ் அந்த பணத்தை எப்படி மீட்கிறார் என்ற விறுவிறுப்பான கதையை ....
தனுஷின் எமி ஜாக்சனுடனான பிளாஸ்-பேக் காதலையும் அன்பு மனைவி சமந்தாவுடன் கொஞ்சலையும் கலந்து குடும்ப பாங்குடன் ஆமை வேகத்தில் இயக்குனர் சொல்லும் கதையே.........தங்கமகன்
இயக்குனர் வேல்ராஜ் வெள்ளித்திரையில் காட்டும் தொலைக்காட்சி சீரியலே தங்கமகன் படத்தின் திரைக்கதை
பீப் சாங் சர்ச்சையில் அடிபடும் அனிரூத் இசையில்......
உயிரே உயிரே என்ன சொல்ல பாடல் ரசிக்கும் படி உள்ளது
தனுஷின் நடிப்பு கதைக்கு கைகொடுக்கவில்லை ஆனால் வாய் கொடுத்துள்ளது நிறைய வெறுப்பூட்டும் லிப்-லாக் காட்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன
ஆக மொத்தத்தில்.....
சந்தன ஓடையில் கலந்த சாக்கடை போல் குடும்ப கதையில் கலந்த கொஞ்சல்கள் என்னமோ போங்கடா...என்று படம் பார்த்தவர்களை சலித்துக் கொள்ள வைக்கிறான் தனுஷின் தங்கமகன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |