யதார்த்த சினிமாவை கனவு கண்ட இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யன் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் நிஜத்தின் பிரதிபலிப்பாக உலக சினிமா வரிசையில் கொண்டாடப்படுருகிறது
மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ என்ற நாவலைத் தழுவி வெற்றி மாறன் உருவாக்கியிருக்கும் ‘விசாரணை’ படம்
யதார்த்த காட்சிகளால் தனித்து நிற்கிறது
ஆந்திரா குண்டூரில் நண்பர்களுடன் தங்கி ஒரு மாளிகை கடையில் வேலை செய்யும் பாண்டி (தினேஷ்) ஒரு போலீஸ் அதிகாரி வீட்டு வேலைக்கார பெண்ணை காதலிக்க....
பாண்டியும் அவனது மூன்று நண்பர்களும் காவல் நிலையத்தில் செய்யாத குற்றத்திற்காக விசாரணை என்ற பெயரில் படு பயங்கரமாக தண்டிக்கபடுகிறார்கள்
கோர்ட்டில் சந்திக்கும் ஒரு தமிழக காவல் அதிகாரி (சமுத்திரக்கனி) உதவியால் தப்பி....
சென்னையில் உள்ள சில தவறான காவல் அதிகாரிகளின் சூழ்ச்சியால் அந்த நால்வர் வாழ்க்கையும் எப்படி சின்னா பின்னமாக சிதைந்து போகிறது...
என்பதை படம் பார்ப்பவர்கள் சினிமா என்று உணராமல் பதரும் படி இயக்குனர் வெற்றி மாறன் காட்சி படுத்தியுள்ளார்
தினேஷ்....பாண்டியாக நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார் என்பதே சரி உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்
முருகதாஸ்,சமுத்திரக்கனி,கிஷோர்..அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி கதாப்பாத்திரங்களாக உலா வருகிறார்கள்
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கதையின் யதார்த்தத்தை ஓவியம் போல் பிரதிபலிக்கச் செய்கிறது
ஆக மொத்தத்தில்.....
வெற்றி மாறனின் விசாரணை வலிக்கும் காதல்,மெல்லிய நகைச்சுவை, பதற்றமான கிளைமாக்ஸ், அதிரடி சண்டைகள் என்று பல வணிக சமாசாரங்கள் நிறைந்த ஒர் உலக கலை படைப்பு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |