மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில்
வந்துள்ள இறுதிச் சுற்று திரைப்படம் முதல் சுற்றிலேயே இந்த ஆண்டின் தமிழில் சிறந்த படமாக வெற்றி பெற்றுள்ளது
பாக்ஸிங் விளையாட்டில் உள்ள மறைமுக அரசியல் அபத்தங்களால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் வீராங்கனையை உருவாக்க சென்னைக்கு மாற்றலாகி வரும் கோட்சர் பிரபு (மாதவன்)....
வடசென்னையில் மீன் விற்கும் ஒரு முரட்டுப் பெண் மதி
(ரித்திகா சிங் ) யிடம் மறைந்துள்ள பாக்ஸிங் திறமையை வளர்த்து உலகளவில் வெற்றி பெறச் செய்வதே.....
இறுதிச் சுற்று படத்தின் கதை ஆனால் அதில் கொஞ்சம் காதலை நளினமாகவும் நகச்சுவையை நாசுக்காகவும் கலந்து கட்டி இயக்குனர் நம்மை படத்தோடு ஒன்றிட வைப்பதில் வெற்றியடைந்துள்ளார்
இதுவரை நாம் பார்த்த ரோமன்டிக் ஹீரோ மாதவன் வித்தியாசமான நடிப்பு உடல் மொழியால் சிறந்த நடிகராக பரிணமிக்கிறார்
நிஜத்திலும் வீராங்கனையான ரித்திகா சிங் நடிப்பிலும் கொடி கட்டி பறக்கிறார்
நாசர்,காளி வெங்கட் இருவரும் கலகலப்பாக படத்தை நகர்த்துவருகின்றனர்
சந்தோஷ் நாராயண் இசை கதைக்கு பக்கபலமாக இருக்கிறது
ஆக மொத்தத்தில்.....
இறுதிச் சுற்று....தமிழ் திரையுலகில் பல சாதனை செய்யும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |