google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜோக்கர்-சினிமா விமர்சனம்

Monday, August 15, 2016

ஜோக்கர்-சினிமா விமர்சனம்



ராஜு முருகன் இயக்கத்தில் வந்துள்ள ஜோக்கர் திரைப்படம் நம் நாட்டில் உள்ள இன்றைய அரசியல்வாதிகளை புட்டு புட்டு வைத்து நையாண்டியுடன்  நெற்றிப் பொட்டில் அடிக்கிறது 


தமிழகத்தின் ஒரு பின்தங்கிய  கிராமத்தில் வசிக்கும் ஒரு சாமானியக் குடிமகன்  தன்னை இந்திய ஜனாதிபதியாகக் நினைத்துக் கொண்டு  அரசு அதிகாரிகள், போலீஸுடன்  பொதுப் பிரச் சினைகளுக்காகப் போராடுவதும்........
  
நம் நாட்டின் ஊழல் புரையோடிய அரசியல் அமைப்பு, அவரது வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதே ஜோக்கர் படத்தின் கதை

இயக்குனர் ராஜுமுருகன் கதைக்குள் கதையாகவும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாகவும் நாட்டு நடப்பை பகடி செய்வதுடன் அழகான ஒரு காதலையும் சித்தரிக்கிறார் 

அதுக்கும் மேல...துணிச்சலுடன் நிகழ்கால அரசியல் அபத்தங்களை நையாண்டியாகவும் பகடியாகவும் குத்தூசியாய் குத்திக் கிழிக்கும் வசனங்கள்
- மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர்  ‘AMA', 
-பாடகர் கோவலனை நினைவூட்டும் 'மதுவால் இறந்தவர் இங்கே... மதுவைத் திறந்தவர் எங்கே’,
-ஓர் அரசியல்  தலைவரின் அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏ.சி...? 


-இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சிட்டு ‘முப்பாட்டன்’ என அறைகூவும் ‘ஒறவுகளே’ தலைவர்

இப்படி காட்சிகளை எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி அடிக்கும் வசனங்கள் படம் முழுக்க பரவிக் கிடக்கின்றன

கதாப்பாத்திரங்களாக மாறிவிட்ட நடிகர்கள்  குரு சோமசுந்தரம்,
மு ராமசாமி, ரம்யா பாண்டியன்,காயத்ரி கிருஷ்ணன்....அவ்வப்போது நிஜ உலக போராளிகள் சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி நினைவூட்டுகிறார்கள் 

நாடகம் போல் நகர மறுத்து அடம்பிடிக்கும் காட்சிகள், திரும்ப திரும்ப வந்து பார்வையாளர்களை வதம் செய்யும் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் 

ஆக மொத்தத்தில்.... 

கபாலிக்கள் உலாவரும் தமிழ் சினிமாவில் இந்த 70 வது சுதந்திர தினத்தை ஒட்டி வந்துள்ள ஜோக்கர் திரைப்படம் தந்திரமாக நாட்டு நடப்புகளை பகடி செய்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பது வரவேற்க வேண்டிய விஷயம்  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1