google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திருநாள்-சினிமா விமர்சனம்

Wednesday, August 10, 2016

திருநாள்-சினிமா விமர்சனம்




சாராயத்திற்கு கலர் அடித்து டாஸ்மாக்கில் பிராந்தி,விஸ்கி என்று விற்பது போல ஒரு ரவுடிக்கு வரும் காதல் என்ற பழைய சமாச்சாரத்தை புதுசு போல் படம் காட்டுகிறது -ஜீவா நயன்தாரா நடித்துள்ள "திருநாள்"

கும்பக்கோணம்-தஞ்சாவூரை கலக்கும் கொலை கொள்ளை தாதா நாகா (சரத் லோகித்வா) வின் வலது-இடது கை அடியாள் பிளேடு (ஜீவா) க்கும் பள்ளி ஆசிரியை வித்யா (நயன்தாரா) வுக்கும் காதல் 

மிருகமாக இருக்கும் பிளேடுவை மனிதனாக மாற்றிய வித்தியாவின் காதலுக்கு வில்லனாக நாகாவே மாறிவிட நடக்கும் போராட்டத்தில் இவர்கள் காதல் நிறைவேறி திருமணம் நடக்கும்  நாளே திருநாள்  படமாகும் 

பழைய ரஜினி ஸ்டைல் வில்லனாக ஜீவா வித்தியாசமாக நடிக்க கிராமத்து காதலை நளினமாக நயன்தாரா பிரதிபலிக்க காமெடி பஞ்சத்தில் படம் நகர்கிறது 

தாதாவாக வளம் வரும் சரத் லோகித்வா பெண் சபலத்தில் நல்லாவே தள்ளாடுகிறார் முறைப்பாகவும் விறைப்பாகவும் ASP புகழேந்தியாக நீயா நானா கோபிநாத்  கொஞ்ச நேரம் வந்து போக...
 நயன்தாராவின் தந்தையாக ஜோ மல்லூரி நல்ல பெரியமனிதராக நடிப்பில் அசத்துகிறார். கருணாஸ் வேஸ்ட்

படத்துக்கு மெருகூட்டுவது கிராமத்து காதலுக்கு ஏற்ப கலக்கலாக ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில்  பழைய சோறு பாடலும் ஆட்டமும் பார்வையாளர்களை ஈர்க்கிறது 
மதுவும் புகையுமே ஓங்கி நிற்கும் படத்தில் பள்ளிச் சிறுவன் ஒருவன் நயன்தாராவுக்கு லிப்லாக் செய்யும் காட்சி வேற....த்தூ 

ஒரு ரவுடி படத்தின் கதையை விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் கண்டு சென்ற இயக்குனர் P S ராம்நாத் உச்சகட்ட காட்சியில் சொதப்பல் ரவுடிக்கதை என்பதாலோ என்னவோ படம் முழுக்க மது,மாது,புகை பஞ்சமில்லை கொஞ்சம் குறைத்திருக்கலாம்

ஆக மொத்தத்தில்.......
 காதலில் விழுந்த ஒரு ரவுடிஜீவா  நல்லவனாக மாறுவது சகஜம் என்றால் நல்ல குடும்பத்துப் பெண்ணாக வரும் நயன்தாரா பக்கா பொறுக்கி மீது எந்த நிகழ்வும் இல்லாமல் காதலில் விழுவது கரடு முரடு கதையாக இருக்கிறது



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1