நாளைய முதல்வராகும் கனவில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்க்கு நாளைய இயக்குனராக தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றிப்படைப்பு... பேட்ட
ரவுடிகளால் ஆக்கிரமிக்கபட்ட ஓரு கல்லூரி விடுதிக்கு ரவுடி வார்டன்னாக வரும் (ரஜினிகாந்த்) காளிக்கு விடுதியில் உள்ள ரவுடி மாணவன் (பாபி சிம்கா) வையும் வெளியேற்றியும்...
ஒரு கல்லூரி மாணவ இளம் ஜோடியின் காதலையும் சேர்த்து வைக்கும் பொறுப்பும்...
அப்படியே ஒரு டாக்டர் (சிம்ரன்) உடன் காதல் ஜொல்லு வழியும்
காட்சிகளாக துள்ளளுடன் நகரும் "பேட்ட" படம்....
காளிதான் 20 வருடங்களுக்குமுன் மதுரையில் வாழ்ந்த பிரபல (நல்ல)ரவுடி என்பது போன்ற ஒன்றல்ல...பல நூறு திருப்பங்களுடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை,இயக்கம் பார்வையாளர்களை அதிரவைக்கிறது.
திருப்பங்களில் பல ஓட்டைகள் இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த்தின் இளமை தோற்றம் ஸ்டைலும் அதிரடி வசனம்,நடிப்பும் திரைக்கதையில் உள்ள பல ஓட்டை உடைசல்களை சரிக்கட்டுகிறது
விஜய் சேதுபதி,சசிகுமார்,பாபி சிம்கா... போன்ற திறமையான ஹீரோ நடிகர்கள் திரைக்கதையால் டம்மி டும்மி ஆகிவிட்டார்கள்.
நடிகர்கள் VS இயக்குனர்கள் படவரிசையில் இதுவரை இயக்குனர் வரிசையில் இருந்த கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ரஜினியின் ரசிகர்களை திருப்திபடுத்த முயற்சிசெய்துள்ளார்.
வடநாட்டு காதலர்கள் எதிர்ப்பு காவி தலைவனாக சித்து (விஜய் சேதுபதி) சித்தரிக்கப்பட்டுள்ளது கொஞ்சம் அரசியல் நெடி வீசுகிறது....
ஆக மொத்தத்தில்....
நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை இயக்கத்தில் ஒரு வித்தியாசமான படைப்பாக வந்துள்ள...
"பேட்ட" படம் எப்படியிருக்கு...?...
ரஜினிகாந்தின்....— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 15, 2019
"பேட்ட" படம் எப்படியிருக்கு...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |