google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வாசம்-சினிமா விமர்சனம்

Wednesday, January 16, 2019

விஸ்வாசம்-சினிமா விமர்சனம்


சிவா இயக்கத்தில் நடிகர் தல அஜீத்குமாரின் "விஸ்வாசம்" அதிரடிக் காட்சிகள் நிறைந்த குடும்பப்படம் .மட்டுமல்ல 
இரு வேறுபட்ட குணம் கொண்டவர்கள் வாழ்வில் இணைந்து,பின் பிரிந்தால்   ஏற்படும் பிரச்சனைகளும் அது அவர்கள் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பாற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பவைகளை எடுத்துரைக்கும் குடும்பப்பாடம் .

தேனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் அய்யனார் சாமி மீசையுடன்   நல்ல சண்டியராகவும் அரிஸ்டாட்டில் தாடியுடன் அறிவாளியாகவும் நிறைய பங்காளி உறவினர்களுடன் வாழும் தூக்குதுரை (அஜீத்குமார்)....

 தங்கள் கிராமத்துக்கு மருத்துவ முகாம் நடத்தவரும் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா).....

இருவேறு குணம் கொண்ட இருவரும் வாழ்வில் இணைந்திட,பின் மன வேறுபட்டால்   அவர்களுக்கு பிறக்கும் ஒரு பெண் குழந்தையுடன் நிரஞ்சனா  மும்பைக்கு தூக்குதுரையை விட்டு பிரிந்து  சென்று விடுகிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு உறவினார்கள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க தன் மனைவியையும் மகளையும் அழைத்துவர மும்பைக்கு செல்லும் தூக்குதுரைக்கு அங்கே கவுதம் வீர் (ஜெகபதி பாபு) என்ற தொழிலதிபரால் தன் மகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்வதை அறிகிறார்.

தூக்குதுரையா...? தொக்குதுரையா...?  விடுவாரா தல...? தன் மகளை பல சிரமங்களுக்கிடையில் காப்பாற்றி மீண்டும் இணைகிறார் 

இயக்குனர் சிவாவின் தெலுங்கு பட வாடை வில்லன் ஜெகபதிபாபுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துலும் அதிரடி சண்டைக்காட்சிகளிலும் தெரிகிறது. 

ஆக மொத்தத்தில்.....

அஜீத்குமாரின் விஸ்வாசம் அவ்வை சண்முகி,தங்க மீன்கள் படங்கள்  போல் தந்தை-மகள் .பாசத்தை மட்டும் படம் காட்டாமல்...
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால்  பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதைக் காட்டும்  குடும்ப படம் / பாடம் 

விஸ்வாசம் படம் எப்படியிருக்கு....?





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1