----காதல் எச்சரிக்கை-6-----
அறுபது வயதான
மனைவியை இழந்த
ஒரு வயோதிகருக்கு
வீட்டு வேலை செய்ய
அந்த ஊருக்கு
வந்தவள்தான் அவள்.
அந்த காமுக கிழவரின்
சின்னத்தனமான சில்மிஷம்
பதினைந்து வயதே ஆன
அவள் உடலை
பாழ் படுத்தியது
அவள் உள்ளத்தை
காயப் படுத்தியது
காணும் காளையர்கள் மீது
காதல் பார்வை பார்த்தாள்
எல்லோரிடமும் சிரிப்பாள்
எல்லோரிடமும் பழகுவாள்
எந்த வித வேறுபாடுமின்றி
எல்லோருக்கும் இடம் கொடுத்தாள்
இதயத்தில் மட்டுமின்றி இருட்டிலும்
யாராவது ஒருவரிடம்
உண்மையான காதல்
உள்ளதா என்று தேடினாளோ?
அகப்பட்டவர்களில்
ஒருவனை மணந்தாள்
ஆறு மாதம்தான்
அவனுடன் வாழ்ந்தாள்
அன்று ஊரில் ஒரு விசேசம்
தெருவில் திரை கட்டி
அங்கே திரையிட்டார்கள்
அந்த ஏழு நாட்கள் படம்
வந்த காலகட்டம் அது.
அடுத்த நாளே
அவள் முடிவு செய்தாள்
உண்மையான காதல்
தன் புருஷனிடம் இல்லை என்று
இன்னொருவனை கட்டிக்கொண்டாள்
இவன்தான் தன் முதல் காதலன்
உண்மையான காதலன் என்று
அத்துடன் முடியவில்லை
அவள் காதல் பயணம்....
இன்று அவளுக்கு
அய்ந்து குழந்தைகள்
அவளுக்கும் தெரியாது
எந்தக் குழந்தைக்கு
எவர் தந்தை என்று?
இன்று வரை தொடர்கிறது
இனிதே அவள் காதல் பயணம்
இருமிக்கொண்டு
மெலிந்துப்போன தேகத்துடன்...
ஆனால்
அவளுக்கும் தெரியாது
அந்த கிராமத்தில்
எவருக்கும் தெரியாது
எய்ட்ஸ் என்று ஓன்று உண்டு
உயிரை எடுக்கும் நோய் என்று.
அவளின் காதல் பயணம்
எய்ட்ஸ் வரை போனது.
இதுதான் காதல் என்றால்....
காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(தொடரும்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |