செய்தி-
தமிழகத்தில் நடைபெறும அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து, இனிமேல் கருப்புச் சட்டையே அணிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சந்தேகம்-
அடுத்து நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன சட்டை போடுவீர்கள்? சமுக காவலர் என்று காக்கிச் சட்டையா?
************************************
செய்தி-
அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் விதமான தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து துண்டுபிரசுரத்தை வழங்கி தனது நூதன போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சந்தேகம்-
சுவரொட்டிகள் சுவரைத்தான் அசிங்கப்படுத்தும் துண்டறிவிக்கைகள் தெருவைத்தான் குப்பையாக்கும் மக்கள் விரோத நடவடிக்கை எங்கு நடக்கிறது எதில் நடக்கிறதோ அங்கே நேரில் போராடுங்கள் நல்லது நடந்தாலும் நடக்கலாம்.
*****************************************
செய்தி-
தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்களுக்கு கொடுத்தார் ஜெ.,
சந்தேகம்-
அது சரி பொது மக்களுக்கு உண்டா ஏதும் விலைவாசி உயர்வு படி?
******************************************
செய்தி-
இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயற்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சந்தேகம்-
இப்படி அறிவிக்கை விட்டும் கண்டனம் தெரிவித்துமே காலம் போகிறது.கேட்டு கேட்டு காதுதான் வலிக்கிறது.
******************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |