google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: December 2012
-->

Saturday, December 29, 2012

மனிதன் மிருகமாவது எப்படி...?சில நேரங்களில்
மனிதர்களில் சிலர்
மிருகங்களாய்..?

சில நேரங்களில்
மிருகங்களில் சில
மனிதர்களாய்...?

இருவருக்கும்
இருக்கும் மூளை
என்ன வேறுபாடு?


மிருகங்களின் மூளை
பாக்கெட் கால்குலேட்டர் போல...


மனிதர்கள் மூளை
சந்தையில் விற்கும்
சமீபத்திய கணணி போல...

சில நேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கால்குலேட்டர் கணணி போன்றும்..

சிலநேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கணணி கால்குலேட்டர் போன்றும்..

இப்படி இடக்கு முடக்காய்
இவைகள் வேலை செய்வதால்
இந்த மாற்றங்களோ...?இதற்குமேல் சொல்ல
என் மூளைக்கு
எதுவும் தெரியவில்லை...?
உங்களுக்கு..?   

.......................................பரிதி.முத்துராசன் 

Tuesday, December 25, 2012

பார்(ரி)வள்ளல்களும் தொப்பை நடனமும் (Belly Dance)

அன்றொரு நாள் (1995)
லண்டன் நகரத்தை
மாலை வரை சுற்றி விட்டு...
தங்கும் விடுதியில்
இரவு விருந்து...
களைப்பு தீர....?
களிப்பு விருந்து

நாவுக்கு விருந்து....
வித விதமான
மதுப்புட்டிகள்
பனிக்கட்டிகள் மிதக்கும்
மதுக்கோப்பைகள்

காதுக்கு விருந்து...
அருந்திக்கொண்டே தள்ளாட
தள்ளாடிக்கொண்டே அருந்த   
துள்ளல் மிக்க மேல்நாட்டிசை

கண்ணுக்கு விருந்து....
வயிற்றைக் குலுக்கி
அரைகுறை ஆடையில்
ஆடும் மங்கையின்
தொப்பை நடனம்(belly dance)

அவள் ஆட்டத்தில் கதிகலங்கி
இந்தியாவிலிருந்து சுற்றுலா போன
நம் இந்திய அண்ணன்மார்கள்
அவள் இடுப்பில் சொருகினார்கள்
இந்திய ரூபாய் நோட்டுகளை

மங்கிய வெளிச்சத்தில்
அவைகளை டாலர் நோட்டுகள்
அல்லது அவர்கள் நாட்டு பணம்
என்று நினைத்தாளோ...?
அவளும் மகிழ்ந்தே ஆடினாள்.

முதல் ஆட்டம் முடிந்து
ஆயாசமாக ஓய்வெடுக்க
அறைக்குள் போனவள்...
அத்தனையும் ரூ..நோட்டுகள்
கொதித்துத்தான் போனாள்

அந்த நடன மங்கை
அத்தனை காகித நோட்டுகளையும்  
அள்ளி வந்து வீசினாள்
நம் பார்(ரி)வள்ளல்கள் முகத்தில்

அத்தோடு முடிந்தது அவள் ஆட்டம்.
இன்று வரை இதை நினைத்து
நீர்த்துப்போகிறது என் வாட்டம்! 

.............................................பரிதி.முத்துராசன்
 thanks-images-deviantart 
***********************************************************

                    thanks-youtube-bellybunny

Thursday, December 13, 2012

தி தீவ்ஸ்(The Thieves)- கொரிய திரைப்படம் (ஒரு பார்வை)
அனைத்து நட்சத்திர குழும நடிகர்களுடன் சோய் டாங்-ஹன்(Choi Dong-hun) இயக்கிய ஒரு தென் கொரிய திரைப்படம் படம். 2012-ஆம் ஆண்டின் மிகப் பெரிய ஆக்க்ஷன் காமெடிப் படம். கொரிய திரைப்பட வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் செய்த மெகா ஹிட் திரைப்படம். 


நமது கோடம்பாக்கம் போல் அன்றி அனைத்து பிரபல நடிகர்களும் (பத்து பேர்) ஒன்றிணைந்து ஒருமிக்க நடித்த வெற்றிப் படம்.
திறமையான நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர்கள் KIM Yoon-suk,
KIM Hae-sook, OH Dal-soo, இவர்களுடன் வசூலுக்கு பெயர் பெற்ற நடிகர்கள் KIM Hye-soo, LEE Jung-jae and Gianna JUN ,அடுத்த தலைமுறையின் பிரகாசமான இளைய நடிகர் KIM Soo-hyun. மற்றும் இவர்களுடன் சீன நடிகர்கள் Simon YAM, Angelica LEE and Derek TSANG நடித்துள்ளனர்.


இதன் கதை-ஒரு சூதாட்ட விடுதியில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ள
'Tear of the Sun' என்ற வைரத்தை திருட வரும் தொழில் முறை திருடர்கள் பற்றியது. இரண்டு அணிகளாக பத்து திருடர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவரவரே வைரத்தை திருடி தனியாக பதுக்கி விடும் எண்ணத்தோடு மக்காவோ(Macao) நகருக்கு வருகிறார்கள்.


இந்த திருட்டு குழு ஏற்பாடு செய்யும் தலைவராக Popeye-யாக (லீ யுங்-ஜே)-வும் ஆவரதது கூட்டாளிJampano-யாக (கிம் சூ ஹ்யுன்) மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். நடுத்தர வயது மது சூயிங் கம்-மாக (Kim Hae-sook) மற்றும் கவர்ச்சி புயல் (நம்ம நமீதா மாதிரி...?) Anycall-ஆக (ஜூன் ஜி ஹ்யுன்) 


இருவரும் தாயும் மகளுமாக தொழில் முறை திருடர்கள் என்ற போர்வையில் நடித்துள்ளனர்.

இன்னொரு திருட்டு குழு ஏற்பாடு செய்யும் தலைவராக Popeye-யின் பழைய திருட்டு பங்குதாரர் மக்காவோ பார்க்-காக Kim Yoon-seok-வும் நடித்துள்ளார்.

இந்த இரண்டு அணியினரு ஓன்று சேர்ந்து வைரத்தை திருடும் முயற்சியே படத்தில் உச்சகட்டமாக உள்ளது.

படத்தின் நிறைய காட்சிகள் நமது சமீபகால தமிழ் திரைப்படங்களில் பார்த்தது போல் உள்ளது. அவர்களே நமது படங்களில் இருந்து சுட்டு இருக்கலாம் என்று பெருமையாக...? நினைத்துக்கொள்வோம். 

Thanks-ref and images from 
-http://asianwiki.com
-http://en.wikipedia.org

இந்த  திரைப்படத்தின் விளம்பர காட்சி-


                  Thanks-YouTube-Uploaded by koreandramadiary*************************************************************
Thanks-soundcloud

  

Wednesday, December 12, 2012

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ சினிமா..வா? 'சிரி'மா..வா?


        === சினிமாவுக்குப் போன சிரிப்பு மந்திரி-2 ===
ஏண்டா...அறிவுச்செல்வா!
நேத்து ஒரு படத்துக்குப் போனமே.....
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
என்ன படம்டா...அது
ஒரு சினிமாவுக்கு உள்ள எதையும் காணோம்..
ஒரு டிஷ்யும் டிஷ்யும் சன்டையில்ல
ஒரு குத்துப்பாட்டு இல்ல ஒரு டூயட் இல்ல
அப்புறம்..டா படம் ஆரம்பிக்கும்போது
நம்ம ஹீரோக்க ஆடிகிட்டு பாடிகிட்டு வருவாங்களே
என்ட்ரி சாங் அதுவுமில்ல...
கொட்டகையில அவ்வளவு கூட்டம்
ஆனால் சிரிப்பைத் தவிர...ஒரு விசுலு சத்தம் ..ம்கூம்
ஹீரோ யாருன்னு கண்டுபிடிக்கவே ரொம்ப நேரமாச்சு
அப்புறம்...ஹீரோயின படம் முடியும் போதுதாண்டா காட்டுனாங்க...
அதுக்கு முன்னாடி பொம்பளகனு பார்த்தது இரண்டு நர்ஸுகத்தாம்பா

கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி
ஹீரோ கிரிக்கட்டு விளையாடுறாரு பிரண்ட்ஸ்களோட..
பந்த கேச் பிடிக்கும்போது கிழே விழுந்து பிடரியில அடிபட்டு..
அது என்ன அம்மலேட்டா..ஆம்லெட்டா ..ஏதோ மறக்கிற வியாதி
மறக்கிரதுனா....இடைபட்ட காலத்தில நடந்தத...
அவரு காதலிச்ச கல்யாணப் பெண்ணையே மறந்திடுறாரு
அவரோட பிரண்ட்ஸ் யாருக்கும் தெரியாம அத மறைச்சி
அவருக்குக் கல்யாணத்த நடத்திப்புடுறாங்க.....
*     
*
*
*
*
அதுதாண்டா..படத்துல ஒரே சிரிப்பு.
சிரிச்சி சிரிச்சி வயிறேல்லாம் புண்ணாப் போச்சுடா..

(அண்ணேன்...
நடுவுல கொஞ்சம் வரிகளைக் காணோம்..
இப்படியெல்லாம் விமர்சனம் எழுதினா
திரட்டிகாரங்க உங்களை விரட்டி விடப்போறாங்க...
பதிவை படிக்கிறவங்க உங்க பேரக் கண்டாலே ஒடப்போறாங்க)

படம் பார்த்துட்டு வந்ததிலிருந்து எனக்கும் அந்த (மறதி) வியாதி 
தொற்றிக்கிச்சோ....என்னவோ...?
படம் மட்டும் வித்யாசமா எடுக்கலாம்
நான் எழுதுறது மட்டும் பழைய மாதிரியே எழுதனுமா..?
டைரக்டர் தம்பி புதுசாமே..பாலாஜி தரணிதரன்
கதாநாயகன் விஜய் சேதுபதி அப்படியே யதார்த்தமா நடிசிருக்குப்பா
ஒர் ஆஸ்பத்திரி...ஒரு கல்யாணமண்டபம் ..இந்த இரண்டையும் காட்டியே...ஒளிப்பதிவாளர் பிரேம் ...பெரிய ஆளுத்தாம்பா.
சரி..சிரி...எல்லோரும் கட்டாயம் படத்தப் பாருங்க
கவலைகள மறந்து சிரிங்க...
இது  சினிமா இல்ல.."சிரி"மா...?


  
                   thanks-YouTube-by LeoVisionProductions·

Monday, December 10, 2012

அணுஉலைகளைப் பதுக்கியவள்!

                                                       

அன்பே! நீ
உன் பற்கள் தெரிய
சிரிக்காதே!.

நீ சிரிக்கும் போது
உன் பல்லழகைப்
பார்த்ததாலே.....

நீ
ஆழ் கடலின்
அழகிய முத்துக்களை
அபகரித்து விட்டதாக....  

முத்துச்சிப்பிகள்
புகார் கொடுக்க
புறப்பட்டுவிட்டன....!

அன்பே! நீ
உன் தோள் அசைய
நடக்காதே!

நீ அசையும் போது
உன் தோள் அழகைப்
பார்த்ததாலே.......

நீ
அடர்ந்த வனத்தில்
வளர்ந்த மூங்கில்களை
அள்ளி வந்ததாக....

உன்னைத் தழுவிய
தென்றல் காற்று
முகாரி பாடுகின்றது...!

அன்பே! நீ
அந்த பூவனம் உள்ளே
போகாதே!

நீ பூவனம் போனதால் 
உன் மேனியில் வீசும்
நறுமணத்தை முகர்ந்து...

நீ
அந்தப் பூவனத்தின்
மலர்கள் வாசனையை
மிஞ்சி விட்டதாக...

மலர்கள் அனைத்தும்
மண்ணில் உதிர்ந்து
உயிரை மரித்தன..!

அன்பே! நீ
உன் கண்களை
சிமிட்டாதே!

நீ கண்சிமிட்டும் போது
பாய்ந்து வரும் கதிர்வீச்சை
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து ...

நீ
இரு விழிகளிலும்  
அணுஉலைகளை
பதுக்கியதாகப் புலம்ப...

(கோபப்படாதே, பெண்ணே!
வள்ளுவர் காலத்தில்தான்
வேலும் அம்பும் உண்டு.)

மின்வெட்டில் தவிப்போர்
மின்சாரம் கிடைக்குமென்று
ஆவலுடன் இருக்கிறார்கள்!

***********************************************************                                        


 கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்பதே காகங்களின் 
தனித்தன்மை வாய்ந்த குணம் ...இயற்கை படைப்பில் எதிரிகளாக இருக்கும் பூனை,நாய்,காகம்-இவைகள் மூவரும் நண்பர்களாக...
கிடைத்த  உணவை பகிர்ந்து உண்ணும அழகு காணக்கிடைக்காத காட்சி....நம்ப முடியாத நட்பு....

நம்பமுடியாத நண்பர்கள்
நன்றி....

Pearl Mubee 

Laurent Jean Philippe  originally shared this post:
Sunday, December 09, 2012

நைட்டிங்கேல் ராபர்-ரஷ்ய திரைப்படம் (ஒரு சிறு பார்வை)
நைட்டிங்கேல் ராபர் என்ற இந்த ரஷ்ய மொழி திரைப்படம்
அதிரடி சண்டை மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்தது.
இது ஹாலிவுட் ஜேம்ஸ்பான்ட்-OO7 வைகையைச் சார்ந்தது. இதன் இயக்குனர் யேகோர் பரனோவ் (Yegor Baranov). 


 ஆனால் படத்தைப் பார்க்கும் போது நம்ம ஊர் இயக்குனர்கள்  சிலர் நினைவுக்கு வருகிறார்கள்....நைட்டிங்கேல் ராபர் படத்தின் கதை(எனக்கு புரிந்தவரை)  H-7 கொள்ளைக் கும்பலைதலைமை உளவாளியான கதாநாயகன் 

தனது குறும்பு மற்றும் திறமையால் ஒரு கொள்ளை முயற்சியை முறியடிப்பது. நகைச்சுவையுடன் அதிரடி சண்டைக்காட்சிகள் 

காண்பதற்கு அருமையாக உள்ளது..காதல் மற்றும் கிளுகிளுப்புக் காட்சிகள் நிறைந்து உள்ளன. 

இன்னும் நமது அதிரடி திரைப்பட இயக்குனர்கள் இந்தப் படத்தின் DVD-யைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். 


பார்த்தால் நமக்கு நிறைய சுட்டப்பழங்கள் கிடைக்கும்.     

நடிகர்கள்:

இவன் Okhlobystin, யூஜின் Stychkin Oksana Fandera இகோர் Jijikine செர்ஜி Badyuk அலெக்சாண்டர் Strizhenov பால் Priluchny மேரி Golubkina Sukhinin அலெக்சாண்டர், மைக்கேல் Gorevoy

 

(ஹாய்....அன்பர்களே! இப்போது திரை விமரிசனங்கள் எழுதும் பதிவுகள்தான் அதிகமாக வாசிக்கப்படுகிரத்தை அறிந்து நானும் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன்.

வாசித்த உங்களுக்கு நன்றி. மற்ற பதிவுகளையும் பார்வையிடவே இது எழுதப்பட்டது.உங்கள் ஆதரவைப் பொறுத்து அவ்வப்போது இப்படி எதையாவது சுட்டுத்தருகிறேன்..தொடரும் மொக்கை பதிவுகள்..(பிரபல சினிமா விமரிசனப் பதிவர்கள் மன்னிக்கவும் உங்கள் அளவுக்கு திறமை எனக்கு கிடையாது பயப்பட வேண்டாம்)  மன்னிக்கவும் ஹி..ஹி)   

மாதிரி விளம்பரத் திரைப்படம்-

                 thanks-YouTube-uploaded by-thecrywolverine


thanks-images from here
Thursday, December 06, 2012

சிரிப்பு மந்திரியும் பொய் வதந்தியும்ஏண்டா...அறிவுச்செல்வா..
கொஞ்சநேரம் அசந்து தூங்கினா
இப்படியாடா பண்ணுவானுங்க...?

நேற்று...அந்த டாஸ்மாக் கடை
திறப்புவிழாவுக்கு போனேன்

அவனுக கலருல எதையோ
கலந்து குடுத்துட்டானுங்கடா...

அசதியிலே அப்படியே
அசந்து தூங்கிட்டேன்
காலையில முழிக்கிவன்
மதியம் முழிச்சேன்...
அதுக்குள்ளே போயிட்டேனு
புரளியைக் கிளப்பிட்டானுங்கடா...

இப்படித்தான் ஒருநாள்
ஆயி போகும்போது
வயிறு சரியில்லே..
கூட அரைமணி நேரம்
உள்ளே இருந்துட்டு வந்தேன்
அதுக்குள்ள..எவனோ
காலரா-னு வதந்தி பரப்பிட்டான்...

அதுவாது பரவாயில்ல..
போனவாரம் காய்ச்சல்னு
டாக்டர் கிட்டப் போனா...
டெங்கு-னு வதந்தி பரப்பிட்டானுக.....(அவிங்க கிடக்கிரானுக..அண்ணேன்
நீங்க ட்விட்டர்-ல
டெய்லி கீச்சுங்க..ண்ணேன்
அப்பத்தான் நீங்க இருக்குறது
எல்லோருக்கும் தெரியும்...)

இதுவே...பரவாயில்ல
நீ ஒரேயடியா உள்ளே போறதுக்கு
வழி சொல்லுற....பாவி!    

*************************************************

                                                          Thanks-YouTube-Uploaded by
தத்தி (கதைக் கவிதை)
சிறு வயதிலிருந்தே
அவனுக்கு வெளிஉலகம்
பழக்கமில்லை....
அவன் பெற்றோர் அவனை
வீட்டுக்குள் வைத்தே வளர்த்தனர்
அவனும் ஆனான் தத்தியாக....

அவன் தந்தையார் மரணத்திற்குப் பிறகு
அவர் செய்துவந்த வாணிபத் தொழிலை
அவன் செய்ய வேண்டிய நிர்பந்தம்
தன்னால் முடியுமா? என்றப் பயத்தில்    
அவனால் சரிவர நடத்த முடியவில்லை.
தோல்வியைத் தழுவிய அவன்
பரதேசிபோல் அலைந்தான்...

ஒரு வழிப்போக்கன் போல
எங்கே போகிறோம்..? என்று தெரியாமல்
அவன் போய்க் கொண்டிருந்த பாதையில்...    

ஒரு காலில் மட்டும்
சிறு கயிற்றால் கட்டப்பட்ட
ஒரு மிகப் பெரிய யானை
அடக்கம் ஒடுக்கமாக
அமைதியாக நிற்பதைக் கண்டான்.

அந்த யானைப்பாகனிடம்
வினாவினான்.....
“இந்தப் பலமிக்க யானை
ஒரு சிறு கயிற்றை
அறுத்துச் செல்லாமல்
அடிமையாய் கிடக்கிறதே...
அது எப்படி..?

அதற்கோ
அந்த யானைப்பாகன்....

“இந்த யானை குட்டியாக இருந்தப்போதே
இப்படி ஒரு சிறு கயிற்றில்தான்
கட்டிவைத்தோம் அன்று
அந்தக் கயிற்றை அறுத்துச் செல்லும் சக்தி
அப்போது இந்தக் குட்டியானைக்கு இல்லை
பலமுறை அது முயன்று பார்த்துவிட்டு
அமைதியாக அடங்கிவிட்டது
இன்று அது வளர்ச்சியான யானை
இன்று அது பலமிக்க யானை
இன்று அதற்கு உண்டு
அந்தச் சிறு கயிற்றை அறுத்திடும் சக்தி...
ஆனாலும் அது முயற்சிப்பதில்லை...
அடிமையாய் அடங்கிகிடக்கிறது

அந்த யானைப்பாகனின் வார்த்தைகள்
அந்த வலிப்போக்கனுக்கு
அவனுக்குள் இருக்கும் சக்தியை
அவனை உணரச் செய்தது.

புத்துணர்வுடன் வீடு நோக்கினான்
புதிய தெம்புடன் நடை போட்டான்
புதுத் தொழில் தொடங்கும் நோக்குடன்...
அதைச் சிறப்புடன் நடத்தும்
சிந்தனை நேக்குடன்...

தத்தியாக இருந்தவன்
சக்தியாக மாறிவிட்டான்....

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.....( குறள் 611)

 
நன்றி-கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
thanks-http://www.thirukkural.com
**********************************************************


              Thanks-YouTube-Uploaded by


 **********************************************************
*************************************************************

இன்றைய நண்பர் தளம்.....
நன்றி-அறிவியல்
link- http://arinjar.blogspot.in/


 

Sunday, December 02, 2012

வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
அந்த ஞானியிடம்
அவன் கேட்டான்-

“நான் செய்யும்
காரியங்கள் அனைத்தும்
தோல்வியிலேயே முடிகின்றன.
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

அவனை
ஆற்று நீருக்குள்
அழைத்துச் சென்றார் ஞானி

கழுத்து வரை
தண்ணீருக்குள் செற்றதும்...

அவன் கழுத்தைப் பிடித்து
அப்படியே நீருக்குள்
அமுக்கினார்

துடியாய் துடித்த அவன்
உயிர் போகும் தருவாயில்
அமுக்கும் அவர் கைகளை
திமிறிக்கொண்டு தள்ளினான்

தண்ணீருக்கு வெளியே
தலையைத் தூக்கியதும்
காற்றைச் சுவாசித்து
மீண்டும் உயிர் பெற்றான்...

அப்போது அந்த ஞானி
அவனிடம் கேட்டார்-

“உயிர் போகும் தருவாயில்
உனக்கு என்ன தோன்றியது...?

அதற்கு அவனோ-

“சுவாசிப்பதற்கு
காற்று கிடைக்காதா..?   
கடும்பாடு பட்டேன்
தண்ணீருக்குள் அமுக்கும்
உமது கைகளிலிருந்து
விடுபடத் துடித்தேன்..
வெற்றிப் பெற்றேன்

அந்த ஞானியோ
சிரித்துக்கொண்டு...
“இனி நீ செய்யும் காரியங்கள்
உனக்கு வெற்றியே தரும்..போ
என்று சொல்லி 
அவனது காதில் 
வெற்றி மந்திரத்தை ஓதினார்.....

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்.....குறள்-
(666) 

UA-32876358-1