google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: August 2013

Saturday, August 31, 2013

முகநூலில் கலக்கும் விஜய் சேதுபதி


(குறிப்பு-இன்றைய திரைவானிலும் ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதி...முகநூல் வானிலும் கண்சிமிட்டும்  கவின்மிகு நட்சத்திரமாக... )


vijaysethupathi

விஜய் சேதுபதியின் முகநூல்  பக்கம் (facebook) அவ்வப்போது அழகான  அவரது திரைப்படங்களின் புகைப்படங்கள் மட்டுமல்லாது...அவரது அன்றாட நிகழ்வுகளின் கையேடாக அவரது புகைப்படங்களால்  புகைப்படக் கவிதைகளாகவும்   இருக்கும் 
அவைகளில் சில இங்கே காண்போம்...... 



மேலே நீங்கள் காணும் படம்.....
விரைவில் வரவிருக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  படத்துக்கு எதிர்பார்ப்பை எக்கு தப்பா எகிற செய்யும்.....
இன்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படம்.........3 மணிநேரத்தில் 500-க்கும் மேற்பட்ட LIKE பெற்று.....  


vijaysethupathi

இது ரம்மி படத்துக்கான அவர் இணைத்துள்ள புகைப்படம்....எல்லாமே அவரது எளிமையான நடிப்பை  இயல்பாக எடுத்துக்காட்டும்...........


vijaysethupathi

இது பண்ணையாரும் பத்மினியும்  என்று வரவிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்-வுடன் அவர் இணைத்துள்ள...

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/282903_402949936483710_615662380_n.jpg

அவரது பிரார்த்தனை.........prayer song 
 இது சமீபத்திய அவரது இ.ஆ.பா. படத்தின் இசைவேளியிட்டு விழா காணொளி....


                                 thanks-YouTube-by kalakkal cinema videos

மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது முகநூல் பக்கத்தை  நான் லைக் பண்ணும்போது 50-ஆயிரத்துக்குளிருந்த அவர் இன்று 1 லட்சத்தைத் தாண்டி....வாழ்த்துவோம்  

Friday, August 30, 2013

தங்கமீன்கள்-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-படம் பார்க்கப் போகுமுன் மனதில் இருந்த ஏதோ ஒர் இறுக்கம்...படம் முடியும் போது நம்மிடம் இல்லை அதிரடி,குத்துப்பாட்டு,கவர்சிக்கூத்து போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத ஒரு நல்ல சினிமா பார்த்த நிறைவு...) 

தங்கமீன்கள்-கதை ஒரு புறம் பெற்றோர்-பிள்ளைகள் பாசம் என்று சொல்வதும் இன்னொரு புறம் தனியார் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அவலங்களைத் தோலுரிக்கிறது. 

தன் 8-வயது மகள் செல்லம்மா (பேபி சாதனா) மீது உயிரே வைத்திருக்கும் தந்தை கல்யாணசுந்தரம் என்ற கல்யாண் (இயக்குனர் ராம்) அதே போல் தன் தந்தை மீதும் பாசமாக இருக்கும் மகள் என்று காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்க... 

http://images.desimartini.com/media/versions/main/original/e74d226d-e911-4fa5-83f0-b4b6126ce2ad_original_image_500_500.jpeg
 
மகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளியில் கட்டுப்பாடு என்ற பெயரில் நடக்கும் குழந்தைகள் அவமரியாதையைக் கண்டு கல்யாண் கோபப்பட.. அதனால் கல்யாணின் தந்தை (பூ ராமு)க்கும் அவருக்கும் மனஸ்தாபம் வந்து....கல்யாணி கோபித்துக்கொண்டு கொச்சி போகிறார்.... 

தந்தையைப் பிரிந்த மகளுடன் பேசி அவள் ஆசைப்பட்டது போல் கிருஸ்துமஸ் தாத்தா போல் பேசுகிறார்...கடைசியில் அவள் கேட்ட வோடாபோன் நாய்க்குட்டி(PUG)-க்காகப் பல கஷ்டங்கள் சந்தித்து........கடைசியில் கல்யாணி தன் மகள் ஆசையை நிறைவேற்றினாரா...? நாய்க்குட்டி வாங்கிக்கொடுத்தாரா...? பள்ளி மேட்டர் என்னவாயிற்று...? இதுதான் படத்தின் முக்கியக் கிளைமாக்ஸ் காட்சி....திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



 (யோவ்...என்னய்யா இது? சின்னப்புள்ளத்தனமாயிருக்கு என்று நீங்கள் நினைக்கவோ கேட்கவோ தோன்றும் .ஆம்..இது குழந்தைகள் பற்றிய படம் ஆனால் குழைந்தைப் படம் அல்ல இது வாழ்க்கையின் நிதர்சனங்களையும் அன்றாட நிகழ்வுகளையும் எந்தவிதமான சினிமாத்தனமான நடிப்புகளும் ஜோடிப்புகளும் இல்லாமல் சொல்லும் சினிமா... 

நடிகை பத்மப்பிரியா..பூ ராமு இவர்களைத் தவிர அனைவரும் புது முகங்களாக..ஆனாலும் அவர்கள் அத்தனை பேரும் கதாப்பத்திரங்களாகத் திரையில் வாழ்கிறார்கள்..அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது...அனைவரும் நாம் நிஜத்தில் சந்திக்கும் மனிதர்களாக.......யாரும் நடிக்கவில்லை. கல்யாண் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர் நடிப்பு அற்புதம்


http://cinebuzz.in/wp-content/uploads/2012/11/Thanga-Meengal-Movie-500x280.jpg

படம் ஆரம்பமே தங்கமீன்களைத் தேடி செல்லம்மா குளத்துக்குள் இறங்கப் போகும் திகிலூட்டும் காட்சி...அடுத்து தன் மகளைக் காப்பாற்றியும் ராம் பாடும்...ஆனந்த யாழை மீட்டுகிறாள்...என்று யுவன் சங்கர் ராஜாவின் இனிமையான இசையில் Arbhindu Saaraa ஒளிப்பதிவில் நம்மை வித்தியாசமான ஒர் உலகில் சஞ்சரிக்க வைக்கிறது.... அதே போன்று  அப்பாவும் மகளும் நிலவைக் கையில் பிடித்துக் குதுகளிக்கும் நதிவெள்ளம்...பாடல் காட்சியும் நம் நெஞ்சை விட்டு அகலாது...

 சில நேரங்களில் ராமின் நடிப்பும் படத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள்...பள்ளியில் ஆசிரியையிடம் தர்க்கம் செய்வது..மகள் நாய்குட்டி கேட்டால் என்பதற்காக அல்லாடுவது ஆஸ்திரேலிய-விலிருந்து வந்த தங்கையிடம் விமான நிலையத்தில் விவாதம் செய்வது..இப்படி சில காட்சிகள் அவரை ஏதோ மனவியாதிக்காரர் போல் காட்டினாலும் படத்தில் உள்ள வலுவான கதை...நிறைய வலுவான காட்சிகள்..குறைகளை மறைக்கின்றன..மறக்கச் செய்கின்றன (அப்படித்தான் முத்தம் காமம் என்று எதையோ சொல்லி...கவிதை பாடி தேவையில்லாமல்...) 


                 thanks-YouTube-by directorramofficialdirectorramofficial

தங்கமீன்கள்- நம்பத்தகாத,இயற்கைக்கு மாறுபட்ட கவர்ச்சியான காட்சிகள் எதுவுமில்லாமல்...காட்சிக்குக் காட்சி உண்மையின் பிரதிபலிப்பாக யதார்த்தமாக உள்ளது.


 தீர்ப்பு-படம் பார்க்க போகும் முன் யதார்த்தம் என்ற பெயரில் கழுத்து அறுவையாக இருக்குமோ..? என்ற இறுக்கத்தில் தயக்கமாக இருந்தது...ஆனால் படம் பார்த்தப் பிறகு...........

 அதிரடி,குத்துப்பாட்டு,கவர்சிக்கூத்து போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத ஒரு நல்ல சினிமா பார்த்த நிறைவு... 


(குறிப்பு-நான் படம் பார்த்த கோல்மால் தியேட்டரில் ப்ரொஜெக்டர் ப்ராப்ளம்..1 மணி நேரம் தாமதமாகத்தான் படம் காட்டினார்கள் 1.20 உள்ளே போனவன் 4.30 மணிக்குத்தான்   வெளியேவிட்டார்கள்...(அதுதான் பதிவு எழுத காலதாமதம்) ஆனாலும் படம் பார்க்கும்போது எவ்வித அழற்சியும் இல்லாமல் இருந்ததே படத்தின் சிறப்பு...மேலும் இதுவரை குத்து சினிமாவுகளுக்கே விமர்சனம் எழுதிப் பயக்கம்...ச்சே....பழக்கமானதால் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுத கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது) 
 

Thursday, August 29, 2013

கோச்சடையானும் கோமாளித்தனங்களும்


(இது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் ஏன் காலதாமதமாகிறது...? என்பது பற்றிய ஓர் அலசல் பதிவு.....)


kochadaiyaan

சும்மா கையக் காலை ஆட்டி ஒர் ஆட்டம் போட்டோமா...? 
சிங்கம் சிங்களாத்தான் வரும்-னு ஒரு பன்ச் பேசுனோமா...? 
அப்படியே பத்து பேர அடிச்சோமா...? துட்ட வாரி பையிலப் போட்டோமா...? என்று இல்லாமல் சூப்பர் ஸ்டார்.........அவதார் படம் போல் மோஷன் கேப்சர் நுட்பத்தில் படம் எடுப்பதாக....ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டார் அதுதான்  கோச்சடையான்  



அவதார் படம் எடுத்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் திரையில் ஒரு புதிய உலகத்தைக் காட்ட மோஷன் கேப்சர் புதிய தொழில் நுட்பத்தில் திக்கு முக்காடிப் போனார்...ஆம்...ஜேம்ஸ் கேமரூன் இதுவரை மக்கள் யாரும் கேள்விப்படாத ஒரு விசித்திரமான உலகையும் விசித்திரமான மனித உருவங்களையும் அனிமேசன் முறையில் அடுத்த கட்டத்துக்கு வந்தார் புதுமையைக் காட்டினார்... அவர்கள் பேச்சு மொழிகூட அவர் பல அறிஞர்களை வைத்து உருவாக்கினார்.


                                 thanks-YouTube-by officialavatar
2005-ல் கேமரூன் அவதார் படத்துக்கான புதிய அனிமேசன் மனிதர்களைப் பல வல்லுனர்கள் உதவியுடன் 3D உருவத்தில் வரைந்து...2006-ல் அவதார் பட ஸ்கிரிப்ட் வேலைகளைத் துவங்கி...Reality Camera System மூலமாக எடுக்கத் தீர்மானித்தார்.... 

http://www.sg.hu/kep/2010_03/3dd03.jpg

2007-ல் Weta Digital லார்ட் ஆப் ரிங்க்ஸ் திரைப்படத்துக்கு உதவியவர்கள் துணையுடன்...வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகப் பிரஸ் மீட்டில் தெரிவித்து....கதை விசித்திரமான இன்னொரு கிரக மனிதர்கள் அவர்களது கலாச்சாரம் சுற்று சூழல் பாதுகாப்பு என்றும் அது ஒரு புரட்சிகரமான உணர்ச்சிப் பயணம் என்றும் சொன்னார் (அதுவே உலக அளவில் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியது) 

மிகப் பெரிய தொகை ($310 மில்லியன்) செலவில்   RealD 3D, டால்பி 3D, XpanD 3D, மற்றும் ஐமேக்ஸ் 3D வடிவமைப்புகளைப் பயன்படுத்தி மோஷன் கேப்சர் படப்பிடிப்பு நுட்பத்தில்   டிசம்பர் 2009-ல் திரையில் படம் காட்டி வெற்றி பெற்று பல விருதுகளையும் பணத்தையும் வாரிச் சுருட்டினார்... ஆக அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் 5 ஆண்டுகள் கடுமையான உழைப்பு....


                             thanks-YouTube-by Kochadaiyaan3D·

ரஜினியின் கோச்சடையான் இவைகளில் எதுவும் சேர்த்தியில்லை...
கதை எழுதியவர் (படையப்பா) கே.எஸ்.ரவிகுமார்...இயக்குவது ரஜினியின் மகள் சௌந்தர்யா  (அணிமேசின் தொழில் நுட்பம் அறிந்தவர்)..இருவரும் படத்தின் கதை ஆன்மீகமா...? பாண்டிய மன்னர் வரலாறா...?   என்று எதையும் தெளிவாகச் சொல்லாமல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி.....


kochadaiyaan

ரஜினி அஷ்டகோணலில் காலைத் தூக்கிக்கொண்டும் அப்பா-மகன் இரு வேடங்கள் என்றும்  3-D மோஷன் கேப்சர் படப்பிடிப்புத் தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி..........ரூ.125 கோடி மதிப்பீட்டில்........ 
  
http://timesofindia.indiatimes.com/photo/18747037.cms
 
ஜனவரி,2012-ல் தான் வேலையை ஆரம்பித்தார்கள் அதனால் விரைவில்....? வரும் பொறுத்திருங்கள்..துட்டுக்கேத்த பனியாரம்தான் கிடைக்கும் அப்புறம் தின்னுபுட்டு யாரும் குறை சொல்லாதீர்கள்... தமிழ் திரைப்படம் உலகத்தரம் என்று பெருமை படுங்கள்        
   
***********************************************************
இது சும்மா சரிக்க.....

freeonlinephotoeditor    
  
இவிய்ங்க.... கோச்சடையான் அல்ல....
கோச்சடைகள்.............?

****************************************************************************
ஏய்...யாருடா எங்க அண்ணேன் சூப்பர் ஸ்டாரக் கலாயிக்கிறது...?   


http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/03/Power-Star-Srinivasan.jpg

ஏய்...நான்தான்டா  பவர் ஸ்டார்....புழல் போச்...சடையான்...
நானே வந்துட்டேன்....வெளிய 
சூப்பர் ஸ்டார் கோச்...சடையான்  வரமாட்டாரா திரையில.........? 

freeonlinephotoeditor
(அண்ணேன்...உங்க படத்துல எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க..
அப்புறம் பாருங்க...அவதார் படத்த பீட் பண்ணி...ச்சீ...பண்ணலாம் 
 

Wednesday, August 28, 2013

தங்க மீன்கள் உயிர்வாழட்டும்


(குறிப்பு-இன்றய தமிழ் சினிமா அதிரடியிலும் நகைச்சுவையிலும் சிக்கி ஜொலிக்கும் காலகட்டத்தில் விரைவில் திரைக்கு வரும் இயக்குனர் ராமின் கலைப்படைப்பு தங்க மீன்கள் போட்டி போட்டு வெற்றிபெறுமா...? என்பது பற்றிய பதிவு...)

http://images.desimartini.com/media/versions/main/original/e74d226d-e911-4fa5-83f0-b4b6126ce2ad_original_image_500_500.jpeg

முதலில் இயக்குனர் ராமின் முதல் படம் கற்றது தமிழ் பற்றிப் பார்க்க.... வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை ஆயினும் விமர்சிகர்களாலும் வித்தியாசமான சினிமாவை ரசிக்கும் ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டது.
கற்றது தமிழ் படத்தில் முதுகலை தமிழ் படித்த தமிழ் ஆசிரியர் தமிழ் சமுதாயத்தில் சிக்கித் தவித்து மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறும் கதை...

படத்தில் நிறைய அம்சங்கள்....எழுத்து, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் பாராட்டப்பட்டுப் பல விருதுகள் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு அதே போல்..பிலிம்பேர், விஜய் விருதுகள்,பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகள் என்று வாங்கிக் குவித்தது.(என்ன வாங்கி என்ன அண்ணேன்... காசு,துட்டு,பணம்...MONEY சினிமா உலகில் வெறும் விருதுகள் வைத்து என்ன செய்ய...?)



தங்க மீன்கள் திரைப்படமும் 2011-ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை இந்தா அந்தா என்று இழுத்துக்கிட்டுக் கிடந்தது இப்போதுதான் கவதம் மேனன் புண்ணியத்தில் சுவாசிக்க ஆரம்பிக்க....


freeonlinephotoeditor

கடந்த வாரம் தங்க மீன்கள் திரைப்படத்தின் முன்னோட்ட கானோளிக்கு இணைய உலகில் அதிக வரவேற்பு...
"அப்பா, மகளுக்கான உறவு என்பது மற்ற உறவுகளை விட மகத்தானது. அந்த உறவை யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறேன். எல்லாக் குழந்தைகளும், பெற்றோருக்கு தங்க மீன்கள்தான் என்ற பொருளில் தலைப்பு வைத்துள்ளேன்." என்று பெருமிதம் கொள்கிறார் இயக்குனரும் நடிகருமான ராம் 
அதுமட்டுமல்ல...படத்தை பிரத்தியேகமாக பார்த்த அனைவரும் பாராட்டுகின்றனர்...
"தங்க மீன்கள் படத்தை நான் என் மகளுடன் பார்த்தேன் இருவருக்கும் பிடித்திருந்தது மனதை உருகச் செய்தது..யாரும் பார்க்காமல் தவறவிடாதீர்கள்" என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு 
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாஜி சக்திவேல்....ராம்-சிறுமி சாதனா இருவரின் நடிப்பையும் பாராட்டியதோடு..I i wish the film wins a National Award.


                    thanks-YouTube-by directorramofficialdirectorramofficial

அதேநேரம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலோ, கேட்ட அத்தனை பேரையும் நெகிழ வைத்துவிட்டது.

http://cinebuzz.in/wp-content/uploads/2012/11/Thanga-Meengal-Movie-500x280.jpg
ஆனால்..கடலை விட ஆழமானது...தமிழ் சினிமா மக்களின் ரசனை...சிங்கத்தின் கர்ஜனையையும் விரும்புவார்கள் அதே நேரம் அட்டகத்தியையும் தூக்கிப் பிடிப்பார்கள்  நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்றாலும் ப்பே..என்பார்கள்.......


                              thanks-YouTube-by directorramofficialdirectorramofficial

மக்களே! சினிமா மக்களே! ஆதலால் தங்க மீன்களையும் நேசியுங்கள்...அதை வணிக ரீதியில் வெற்றியடையக் குடும்பத்துடன் எல்லோரும் திரையரங்கம் செல்வீர்...


http://i1.ytimg.com/vi/eU_2joBzqJg/hqdefault.jpg

தங்க மீன்கள் வீட்டு தொட்டியில் வளர்ப்பது இரத்த அழுத்தம் உயர்வு-தாழ்வு உள்ளவர்களுக்கு உடம்புக்கு நல்லது அப்படிதாங்கோ....தங்க மீன்கள் திரையில் பார்ப்பவர்களுக்கு மனித பாசத்துக்கும் நேசத்துக்கும் நல்லது   
அதுவே நீங்கள் ஒரு கலைப் படைப்பாளிக்கு அளிக்கும் விருது....
நல்ல கலைப் படைப்பு....
தங்க மீன்கள் உயிர்வாழட்டும்    


  

பதிவர் சந்திப்புக்கு வரும் ஒரு முகமூடிப் பதிவர்


வரும் செப்.1 அன்று சென்னையில் நடக்கும் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு வரும் வெளியூர் பதிவர்கள் அனைவரையும் வருக..வருக...என்று முதலில் வரவேற்று.... 


அய்யாமார்களே! அண்ணன்மார்களே! எல்லோரும் கேட்டுக்குங்க...அவரும் ஒரு பதிவர்தான்...
( யோவ்...அவர் பதிவர் என்கிறதுக்கு என்னையா ஆதாரம் இருக்கு...? அப்படின்னு  யாரும் அவரைக் கேட்டுப்புடாதீங்க அப்படி இப்படின்னு வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு வருடம் 4 மாதத்தில் ஆயிரம் பதிவுகள அவரும் நெருங்கிட்டார்ரர்ர்ர்ர் ..)



கடந்த ஆண்டுப் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள அவரும் ஆவலுடன் இருந்தார்..ஆனால் அப்போது அவர் பதிவு எழுத ஆரம்பித்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை அதனால் கொஞ்சம் தயக்கம்...
இந்த வருடம் அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொல்ல...சாரி....கொள்ளப்  பெயர் கொடுத்துவிட்டார்ர்ர்ரர்ர்ர்ரர்...


senthil

அப்புறம்தான் அவருக்கு வந்தது  ஆழ்ந்த கவலை......?
அண்ணன் ஆரூர் மூனா செந்தில் பதிவர்  சந்திப்பு பற்றிய பஞ்சேந்திரியா...பதிவுகளையும்
"பதிவர் சந்திப்புக்கு அருகில் நெருங்கிவிட்டோம். கடைசி வாரம் இது. வேலைகள் அடிப்பொலியாக நடந்து கொண்டு இருக்கிறது"....என்று அவர் அவ்வப்போது விடும் அறிவிக்கையையும் பார்த்து ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு புறம் அவரு வயிற்றைக் கலக்கியது....?

http://www.supercoloring.com/wp-content/main/2009_07/funny-mask-coloring-page.jpg

அவர் ஒரு பதிவர் என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது அவருடன் பணிசெய்பவர்களுக்கும் இதுவரை தெரியாது (எப்பம்பார்த்தாலும் அந்த ஆளு கம்புட்டரை தட்டிக்கிட்டு கிடக்கான்...பெரிய கம்புவெட்டி இஞ்சி..நியறு மாதிரி..என்பாயிங்க அவர எல்லோரும் மறைமுகமா..) அவரு குடும்பத்திலும் இப்படி எதையாவது அவர் கிறுக்கிக்கொண்டிருப்பது அவர் மனைவிக்குக் கூடத் தெரியாது...




பதிவர் சந்திப்பு  நிகழ்ச்சி நிரலைப் பார்த்ததும் அவருக்கு பகிர் என்றது (காலை 9.40 மணிக்குப் பதிவர்கள் சுய அறிமுகம்) அட்டடா...அவரு முகமூடி கிழிஞ்சிடுமே... அப்புறம் ஒர் ஐடியா அவருக்கு வந்துச்சு...எல்லோருடைய அறிமுகமும் முடிஞ்சப் பிறகு போனால்...? (யோவ்...சோத்துக்கு வந்துட்டியானு...? யாரும் கேட்டுடக்கூடாதே...)


chennaiblogger


புலவர்  அய்யா தலைமை தாங்குறாங்க...
அண்ணன் ஆரூர் மூனா செந்தில் வருறாக...
இன்னும் விழிப்புணர்வு கவிஞர்  மதுமதி வருறாக.....
கவிதை வீதி சௌந்தர் வருறாக....
அண்ணன் சிபி செந்தில்குமார் வருறாக...
டி.என்.முரளிதரன் வருறாக...
அண்ணன் திண்டுக்கல் தனபாலன் வருறாக...

(யோவ்..இப்படி 200 பேர்களுக்கு மேல் பதிவர்கள் வருகிறாங்க அவ்வளபேருக்கும் ராகம் போடுவியா...? ஏதோ சிரிப்பு பதிவுனு படிக்க வந்தா இப்படிப் போட்டு கடிக்கிறீயே....படு பாவி என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது..சரி..எல்லா நண்பர்களும் வாருங்க...உங்களை அவர் நேரடியாக வரவேற்காவிட்டலும் அப்படி ஓரமா எட்டிப்பாருங்க..யாராவது முகமூடி போட்டுக்கிட்டு நின்றால்...அது வேறு யாருமில்ல அவர்தாங்க...அந்த முகமூடிப் பதிவர்..)

இதுல தமாசு என்னனா...
"இந்த  ஞாயிறு அப்படியே தூங்க விட்டுடாத...காலையிலே எழுப்பிவிடு...?" 
என்று அவரது  மனைவியிடன் இன்று அவர் சொன்னபோது... 
"ஏங்க காலையிலே அப்படி எங்கப் போறீங்க...?" என்று கேட்க...

சரி சொல்லிவிடலாம் என்று அவரும்....
"நான் பதிவர் சந்திப்புக்கு போகணும்மா.."என்று சொல்ல..
 அதற்கு அவரது மனைவியோ ... 
"பதிவரா...? அப்படினா...?" என்று அவரை மேலும் கீழும் பார்க்க...
"அதுதாம்மா...பிளாக்கர்...பிளாக்கர் சந்திப்பு"  என்றார் அவர் ....

ஒ...கருப்பர்கள் எல்லாம்  ஒண்ணா சந்திக்கிங்களா...? 

ம்கூம்..இதற்கு மேல் அவரால் விளக்கம் சொல்ல முடியாமல்....
  இப்படி முகமூடி போட்டுக்கொண்டு.......பதிவர் சந்திப்புக்கு வரும் ஒரு முகமூடிப் பதிவர் வேறு யாருமல்ல இவரேதான்...

parithi

 
(மீண்டும் உள்ளூர் வெளியூர் பதிவர்கள் சந்திப்புக்கு வரும் வராத அன்பர்கள் நண்பர்கள் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி... நண்பர்களே! இப்பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது மற்றபடி பதிவர் நண்பர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.......) 

தீர்ப்பு-இதனால் அறிவிப்பது என்னவென்றால்...நம்ம (வருத்தப்படாத) வலைப்பதிவர்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கலாமே....? (அய்யா...நியாயன்மார்களே! நான் ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா காதில போட்டுக்காதீங்க....)
 

Tuesday, August 27, 2013

விஸ்வரூபம் 2- மீண்டும் வில்லங்கரூபம் எடுக்குமா...?


(குறிப்பு-அக்டோபர் 2013-ல் கமல் படம்காட்ட இருக்கும் விஸ்வரூபம் II திரைப்படம் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை........)



இது வெற்றிப்படமான விஸ்வரூபத்தின் தொடர்ச்சியே..(ஆனால் அதேப்போல் வில்லங்கத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தால் சரி...)அதனால் அதில் நடித்த நட்சத்திரங்கள் கமல்ஹாசன், ராகுல் போஸ், நாசர்,பூஜா குமார், ஆன்ட்ரியா ஜெரிமியா மீண்டும் நடிக்க இவர்களுடன் வஹிதா ரகுமான்,ஆனந்த் மகாதேவன் புதிதாக இணைந்துள்ளார்கள் 

https://sphotos-b-ord.xx.fbcdn.net/hphotos-frc3/p480x480/1011503_566999756692887_78216472_n.jpg  

படத்தின் பெரும் பகுதி விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டபோதே எடுத்திருந்தாலும் சில மாற்றங்களுடன் இப்போது தாய்லாந்து பாங்காக் விமான நிலையம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன


portrait

படத்தைப்பற்றிக் கமல்ஹாசன் எதுவும் பேசாமல் மெளனமாக இருக்கும் வேளையில் படத்தின் முக்கிய நாயகியாகிய பூஜா குமார்... விஸ்வரூபம் II படமானது முதல் படத்தைவிடச் சிறப்பாக இருக்கும் என்றும் அதில் முதல் படத்தில் உள்ளது போல்.....

freeonlinephotoeditor

ஒரு நச்சரிக்கும் மனைவியாகத் தான் இல்லை என்றும் மேலும் இந்தப் படத்தைப் பற்றி எவ்விதக் கருத்து வேறுபாடும் சமுகத்தில் வராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.(அம்மணி அத்தோடு விட்டால் பரவாயில்லை...கருத்துச் சுதந்திரம் பற்றி பேசியிருப்பதுதான் கொஞ்சம் வில்லங்கமாகத் தெரிகிறது....) 

freeonlinephotoeditor

இந்தச் சுதந்திர தினத்தில் வரவேண்டிய கமலின் விஸ்வரூபம் II திரைப்படம் வரும் அக்டோபரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அப்படியென்றால் இந்த விஸ்வரூபத்துக்குப் போட்டி அஜித்தின் ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது.இரண்டு பெரிய தலைகள் மோதிக்கொண்டாலும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

எது எப்படியோ இப்போது கோலிவுட் நட்சத்திர நடிகர்களுக்கு மட்டும் நேரம் நல்லாயில்லை என்று கோடம்பாக்கம் சினிமா கிளி ஜோசியர் சொல்வதால்....பேசும் படம் காட்டும் நீங்கள் கொஞ்சம் ஊமையாக இருப்பதே நல்லது....விளம்பரம் வேண்டுமென்றால் எதையாவது புகை மூட்டுங்கள்...

freeonlinephotoeditor

அதற்கென்றே இங்கே இருக்கிறார்கள் நிறையத் தலைவர்கள் அய்யோ..அவர்கள் ஒர் அறிவிக்கை விட்டால் போதும் (வேண்டுமென்றால் அவர்களையும் விளம்பர பங்குதாரராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்) 

விஸ்வரூபம் 2- மீண்டும் வில்லங்கரூபம் எடுக்குமா...?  எடுப்பதும் எடுக்காததும் உலகநாயகரே! உங்கள் கையில்...சாரி...வாயில்தான் இருக்கிறது இப்பலாம் விளம்பரத்தீ மூட்டி யாரும் குளிர்காயமுடியாது.

kamal

(தலைவா...இப்பலாம் தடை பண்ண புது டெக்னிக் வச்சிருக்காங்க நம்ம அரசியல்வாதிக....இது தமிழ் படமே இல்ல என்பாயிங்க...அப்புறம் இவர் தமிழ் நடிகரே இல்ல என்பாயிங்க... 
இல்லனா யாராவது மொட்ட கடுதாசி போடுவாயிங்க...)
     
*************************************************************

இது சும்மா சிரிக்க.....

    I LOVE ஆதித்யா...மியாவ் 
(இவர் எங்க வீட்டு (பூனை) டும்மி....சிரிக்கத் தெரியாது 
ஆனால்...ஆதித்தியா டிவி போட்டா எங்கிருந்தாலும் ஓடி வந்து டிவி முன்னாடி உட்கார்ந்துக்கொள்ளும்...நானும் என்னைக்காவது சிரிக்குமா...? என்று ஆவலுடன்...)
   
 
UA-32876358-1