google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: September 2013

Monday, September 30, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-விருப்பு? வெறுப்பு? கணக்கெடுப்பு.

(குறிப்பு-இது விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு ரசிகர்களின் விருப்பு...? வெறுப்பு...? கணக்கெடுப்பும்.....ஓர் அலசலும்)



itharkuthane

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நகைச்சுவை படங்கள் கொடிகட்டி பறக்கின்றன........வித்தியாசமான நடிப்பாலும் காமெடி கதைகளாலும்   நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்,சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அதீத வளர்ச்சியடைந்த விஜய் சேதுபதி.......


vijaysethupathi

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றித் திரையுலகில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார்.

http://chennaionline.com/images/articles/August2013/bfcb4068-cb7f-417f-aa48-541cc4464c87OtherImage.jpg


இயக்குனர் கோகுல் இயக்கம் இப்படத்தின் கதை.........தினம்தோறும் நமது வாழ்வில் நடக்கும் நகைப்புக்கிடமான விஷயங்களையும் நிகழ்வுகளையும்  அடிப்படையாகக் கொண்டு  காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது....படத்தின் புகைப்படங்களும் அதையே சித்தரிக்கின்றன 




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பசுபதி,லிவிங்ஸ்டன்,பரோட்டா சூரி,சுவாதி ரெட்டி...இப்படி நிறையப் பேர் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியின்  யதார்த்தமான நடிப்பைக் காண நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு உள்ள துடிப்பு ரசிகர்கள் மத்தியில்...


                             thanks-YouTube-by thinkmusicindia

சித்தார்த் விபினின் இசையில் நான்கு பாடல்கள் கேட்க இனிமையாக இருப்பது மட்டுமின்றி.....  படத்தில் வரும் PRAYER பாடல் மிகவும் வித்தியாசமாகவும் YOUTUBE பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று.....



                                thanks-YouTube-by thinkmusicindia


மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள்கூட திரையரங்கில் கூத்தாட தத்தித்தோம் தரிகிடத்தோம் போட்டும் சாதி,மதம்,அரசியல் புகை மூட்டி வசூல் அறுவடை செய்ய நினைக்கும் இக்காலகட்டத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் எதற்கும் ஆசைப்படாமல்...... எவ்வித பிரச்சனைகளுமின்றி வெளிவருவதே ....




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வரும் காலகட்டம்....தங்க மீன்கள்,6 மெழுகுவர்த்திகள்,மூடர் கூடம்,ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...போன்ற கலைப்படங்களும் பேசப்படும் வித்தியாசமான சினிமா நேசிகளின் காலம்   தீயா வேலைசெய்யணும் குமாரு,தேசிங்கு ராஜா,வருத்தப்படாத வாலிபர் சங்கம்...போன்ற லூஸ்-டாக் காமெடி படங்களும் கல்லாக்கட்டுகின்ற காலம் 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு உங்கள் எதிர்பார்ப்பு (LIKE-UNLIKE) என்ன...? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-1/10/2013 

   

Sunday, September 29, 2013

ராஜா ராணி வெற்றிக்கு காரணம் யார்?கருத்துக்கணிப்பு


(குறிப்பு-சூர்யாவின் சிங்கம் 2 படத்திற்குப் பிறகு ஒரு மாஸ் கூட்டம்  .... திரையரங்குகளில்....ராஜா ராணி படத்தின் இந்த வெற்றிக்கு காரணம் யார்? என்று ஓர் அலசல்)



அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில்  ஆர்யா-ஜெய்  இருவரும் இணைந்து இரு கதாநாயகர்கள் போல் நடித்துள்ளனர் வலைதளங்களில் அவர்கள் நடிப்பு பற்றி...........

http://cinemalead.com/photo-galleries/raja-rani-movie-stills-01/wmarks/raja-rani-movie-stills-0101.jpg
 
கவுதமன் பாஸ்கரன் (hindustantimes) ராஜாரானியில்  ஆர்யாவை உணர்ச்சியில்லா மரக்கட்டை பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கான் மற்றும் அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு அவரது முகத்தில் எந்த உணர்வும் இல்லை (In some ways, Arya reminds me of wooden Bollywood heroes like Ajay Devgn and Abhishek Bachchan. One can read just about nothing from Arya’s awfully blank look. And they call him an actor!) என்கிறார்.

rajarani

 
rediff.com விமர்சிகரி சரஸ்வதியின் வார்த்தைகளில்........ஜெய்-யின் சாதுவான மற்றும் பயந்த தன்மையை   முகத்தில் நல்ல தெளிவாக காட்டி நடித்துள்ளார் (Jai’s meek and timid character in the film effectively ) என்று பாராட்டுகிறார்.

http://i1.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/08/Arya-Nayanthara.jpg

 
Behindwood வலைதளமோ........உணர்ச்சி காட்சிகளில் ஆர்யா நல்ல முதிர்ச்சி(maturity) காட்டுகிறார்...ஜெய் அடிக்கடி தனது விசித்திரமான அழுகை மூலம் சுய பரிதாபம் பெறுவது நல்ல நகைச்சுவை என்றும் அவரது கிறிச் குரலும் (His shrill voice suits such scenes well.) அவரது கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்துவதாக எழுதுகிறது.
http://images.desimartini.com/media/versions/main/original/7f8d5bdb-0bc9-4091-9240-c9a66049f0c9_original_image_500_500.jpg
 

இப்படியே அனைத்து வலைதளங்களும்....மௌனராகத்தின் உல்டா என்றும் தெலுங்கில் வந்த ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் என்று சொல்லப்பட்டாலும் வருங்கால தலைமுறைக்கு நல்ல செய்தியை ("there is life after love failure; there is love after love failure".) சொன்ன  அட்லியை அனைத்து தளங்களும் பாராட்டுகின்றன 


rajarani

 

நயன்தாராவின் நடிப்பையும் சத்தியராஜின் வித்தியாசமான கெட்டப்,சந்தானத்தின் நக்கல் இல்லாத கதையுடன் ஒன்றிய காமெடி,19 நிமிடங்களே வரும் நஸ்ரியா நசிமின் துள்ளல் இளமை நடிப்பும் பிரதர் காமெடியும் பாராட்டப்படுகின்றன
                              thanks-YouTube-by thinkmusicindia 


என் பார்வையில்.......வலைதளங்களில் பெரிய நட்சத்திர நடிகர்கள் படங்களுக்கு கிடைக்கும் 3.8/5 ரேட்டிங்... ராஜா ராணி படம் பெற்றுள்ளதும் திரையரங்குகளில் உள்ள இளந்தலைமுறை காதலர்கள் கூட்டமும் அரங்குக்கு வெளியே ஜெய்-க்கும் ஆர்யாவுக்கும் உள்ள கட்-அவுட்கள் வரவேற்புகள் பார்க்கும் போதும்.... ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணம் யார்? என்று என்னால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை
நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர்களாச்சே...
உங்கள் பார்வையில்...........
ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணம்யார்?




ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம் ஆனால் ஒருவர் ஒருமுறைதான் வாக்களிக்க முடியும் வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-1/10/2013  

Saturday, September 28, 2013

அஜித்தின் ஆரம்பம்-பாடல்கள் எப்படி?(கருத்துக்கணிப்பு)

(குறிப்பு-தீபாவளிக்கு வெள்ளித்திரையில் அதிரடி....வெடிவெடிக்க இருக்கும் அஜித்தின் ஆரம்பம் படத்தின் 5 சரவெடிப் பாடல்கள்  பற்றி எப்படி? ...... கருத்துக்கணிப்பு)



ஆரம்பம் படத்தில் 5 பாடல்களை இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் வித்தியாசமான திரையிசை சுவைகளில்.........பா.விஜய் வார்த்தைகளால் விருந்து படைக்கிறார்
1-அடடா...ஆரம்பமே
பாடியவர்-சங்கர் மகாதேவன்


                                    thanks-YouTube-by sonymusicindiaVEVO sonymusicindiaVEVO
இப்பாடலைப் பற்றி......தல ரசிகர் குறிப்பு-
ஹே..!நேத்திருந்த ராஜாதி ராஜனெல்லாம்
 இன்னைக்கு காணவில்லை
 இதுதாண்டா நிஜமானது'
ஹே உன்ன சுத்தி பூ போட ஆளிருக்கும் 
புகழ்பாட வாயிருக்க 
எல்லாமே நிழல் ஆனது,
நாம ஆசபட்டா அதுக்காக வாழணும்டா
எதுக்காக இருக்கணும்டா எல்லாமே கொண்டாட்டமே 
அடடட ஆரம்பமே இபோ அதிருதடா.... mass lines



2-என் FUSE போச்சே........
பாடியவர்கள்-கார்த்திக் & ரம்யா
3-ஹரே......ராமா
பாடியவர்கள்-தன்வீஷா & சக்திஸ்ரீ கோபாலன்


4-மேலால வெடிக்குது
பாடியவர்கள்-விஜய் யேசுதாஸ்,ரஞ்சித்,ஸ்வேதா மோகன்



இப்பாடல் நட்பு பற்றிய வார்த்தைகளில்........
வாழ்க்கை ஒரு வானம் அதில் நட்பே வர்ணம் ஆச்சு, வார்த்தை இல்லை தோழா நீயே எந்தன் மூச்சு" - See more at: http://parathan20.blogspot.in/2013/09/Arrambam-Songs-Review.html#sthash.6p3sQ8dZ.dpuf
 வாழ்க்கை ஒரு வானம் அதில் நட்பே வர்ணம் ஆச்சு, வார்த்தை இல்லை தோழா நீயே எந்தன் மூச்சு"...........என்று எழுதியுள்ளார் பா.விஜய்.

5-ஸ்டைலிஷ் தமிழச்சி
பாடியவர்கள்-மானசி,ரூபா பேன்ட்.PSHY,



ஆங்கிலத்தில் ஆரம்பித்தாலும் இடையிடையே அழகிய தமிழச்சி என்ற வார்த்தையையும் விருது கவிஞர் பா.விஜய் எழுதி விளாசியுள்ளார்   


ajith

பாடலைக் கேட்டு ரசிச்சிங்களா...? 
அண்ணன்மார்களே அஜித்தின் ஆரம்பம்-பாடல்கள் எப்படி? என்ற இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு வாக்களியுங்கள்...........

அஜித்தின் ஆரம்பம்-பாடல்கள் எப்படி?



அஜித்தின் ஆரம்பம்-பாடல்களில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் எது...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு 30/09/2013 
     

அரசியல் செய்திகளும் சிந்தனைகளும் (கருத்து கருந்தேள்)

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்-கலைஞர்.......
சினிமா நூற்றாண்டு விழாவில் பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது தன்னை அழைக்காதது நல்லவேளை தன் தன்மானம் காப்பாற்றப்பட்டது....என்று பெருமிதம் கொண்டார் கலைஞர் கருணாநிதி 
கருத்து கருந்தேள்......
மேடையில் ஏற்றுகிறேன் என்று தாங்களை நகரும் நாற்காலியில் வைத்து கீழே தள்ளி விட்டாலும் தள்ளியிருப்பார்கள்....நல்லவேளைதான் உங்களை அழைக்காதது....ஹி..ஹி..

********************************************************************************

ராகுலின் ஆவேசம்............
தண்டனை பெற்ற எம்பி,எம்எல்ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டம் முட்டாள்தனமானது கிழித்து எறிய வேண்டும்..சுத்த அபத்தம் என்று ராகுல் திடீர் ஆவேசம்....
கருத்து கருந்தேள்..........

அண்ணேன்...என்ன இது? கிழிஞ்சது கிருஷ்ணகிரி கதையாட்டம் இருக்கு...? அடுத்த பிரதம வேட்பாளரு  நீங்கதான்னு அம்புட்டுபேரும் உங்க கட்சியில அலம்புராயிங்க...நீங்க என்னடானா...எதுவும் தெரியாத மாதிரி இப்ப இப்படி ஆ...வேஷம்....காட்டுறீங்க....அட இந்த இந்திய அரசியலே எதுவும் புரியமாட்டேங்குதையா....இத்தாலி..ஜெர்மனி...இப்படி அரசியலு இருந்தா சொல்லுங்கையா...      

*******************************************************************************



ஒட்டு மிஷினில் தனி பட்டன்..........
ஒட்டு மிஷினில் தனி பட்டன் வைத்து எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு 
கருத்து கருந்தேள்.....

ஆமாம்...இவிங்க உத்தரவு போடுவாயிங்க....அவிங்க எல்லாரும் பாராளுமன்றத்தில கூடி அவசர சட்டம் போடுவாயிங்க... நாட்டாம...தீர்ப்ப மாத்து-னு   ஒட்டு போடுவாயிங்க..இப்படித்தான் கிரிமினல்ஸ் தேர்தல்ல நிற்க கூடாதுன்னு சொன்னாயிங்க..இப்பலாம் இப்படி சட்டம் போடுறதும் போட்ட சட்டம் உடனே இத்துப் போறதும்....

*********************************************************************************


கொசுறு தகவல்...........பழநி அருகே குகை ஓவியம்.....
ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குகையில் 4,000 ஆண்டு பழைமையான பாறை ஓவியமும் கல்வெட்டு எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டது...அதில் சில சிதைந்தும் முழுமையாகவும் உள்ளன 
கருத்து கருந்தேள்............தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அய்யா...நல்லா ஆய்யிங்க..ச்சே...ஆய்வு செய்து பாருங்க........அது வௌவ்வாலு ஆ........ய்...யாக இருக்கப்போகுது?



   

Friday, September 27, 2013

ராஜா ராணி-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-நிறைய காதல்+கொஞ்சம் காமெடி....காதலுக்கு புதிய தத்துவம் சொல்லி...காதல் செத்துப்போனால் கலங்க வேண்டாம் யாரையாவது கட்டிக்கொண்டு மீண்டும் காதலியுங்கள்...? என்று சொல்லாமல் சொல்லும் நவீன தேவதாஸ் காதல் திரைப்படம்..........நீளப்பதிவு...)

http://chennaionline.com/images/articles/August2013/043db2a8-fb87-48af-9bb6-d424200f8a47OtherImage.jpg

படம் ஆரம்பமே சர்ச்சில் நடக்கும்  செல்வந்தர் ஜேம்ஸ் (சத்தியராஜ்) மகள் ரெஜினா (நயன்தாரா)-வுக்கும் ஜான்(ஆர்யா)-வுக்கும் திருமணம்.........
ஜானாகிய நான் ரெஜினாவை மணந்துக்கொள்ள சம்மதிக்கிறேன் என்று ஜான் சொல்ல...ரெஜினாவாகிய  நான் சூர்யா(ஜெய்)-வை மணந்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று ரெஜினா சொல்ல....அதிர்ச்சியில் ஜேம்ஸ் மயங்கி விழ..

மீண்டும் திருச்சபையில் மன்னிப்புடன் ரெஜினா.....
ரெஜினாவாகிய நான் ஜானை மணந்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று சொல்ல....அடாடா...என்று நாம்  அப்போது திறந்த வாயை மூட முடியாமல் ஜொள்ளு வடிய...ஆரம்பிக்கும் படம் பல காதல் திருப்பங்களுடன்......


திருமணத்திற்குப் பிறகு ஜானும் ரெஜினாவும் மிக்கி-மவுஸ் போன்று வீட்டுக்குள் மோதிக்கொள்ள....ஒரு கட்டத்தில் ரெஜினாவுக்கு வலிப்பு வர...ரெஜினா-சூர்யா  காதல் ஜானுக்கு தெரிய வருகிறது
இன்னொரு கட்டத்தில் ஜானின் நண்பன் சாரதி(சந்தானம்) மூலம் ரெஜினாவுக்கும்  .........ஜான்-கீர்த்தனா (நஸ்ரியா நஸிம்) காதல் தெரிய வர...அங்கே ஒரு ட்விஸ்ட்.......ரெஜினாவுக்கு ஜான்மீது காதல் வர....

http://i1.ytimg.com/vi/oSW8l4nRpQw/hqdefault.jpg

இன்னொரு மிகப்பெரிய காதல் திருப்பமாக....இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் சூர்யா உயிருடன் இருப்பதை  ஜானைப் பிரிந்து ஆஸ்ட்ரேலியா செல்ல நினைக்கும் ரெஜினா விமான நிலையத்தில்   சூர்யாவை உயிருடன் சந்திக்க...........கிளைமாக்ஸ்

முதலில் திருமணம் செய்து கொண்ட ரெஜினாவும் ஜானும் இணைந்தார்களா...? இல்லையேல் ரெஜினா மீண்டும் சூர்யாவுடன் போய் இணைந்து கொண்டாளா...? இந்த மாபெரும் கேள்விக்கு விடைவேண்டுமா...? வெள்ளித்திரையில் பாருங்கள்.

freeonlinephotoeditor


இயக்குனர் அட்லியை பாராட்ட வேண்டும்....கதாப்பாத்திரங்களை நடிக்க விடாமல் அப்படியே நிஜமாக அறிமுகப்படுத்தியுள்ளதற்கு....... நயன்தாராவின் கதாப்பாத்திரம் அப்படியே நிஜத்தின் பிரதிபலிப்பு... இப்படியொரு இரட்டைக்காதலை தேர்வு செய்து படமுழுக்க காதல்...காதல்...காதல் அப்படியே இடையிடையே சந்தானத்தை வைத்து கொஞ்சம் காமெடிக் கூத்து.

http://timesofindia.indiatimes.com/photo/20713983.cms

நயன்தாரா......அப்படியே படமுழுக்க  நிஜமாக காதலில் வாழ்ந்திருக்கிறார்... நடிக்கவில்லை ஆனால்.. ஜெய்யுடன்   காதலிக்கும் போது ஆண் பாலியல் வன்கொடுமை (அப்படியொன்று இருந்தால்...) போல் தெரிகிறது
rajarani


ஆர்யா......பல்வேறு பாவனை முகத்தில் காட்டி காதலிக்கிறார்...நஸ்ரியா வீட்டு நாய்க்கு பிஸ்கட் போட்டு ஒரே வாரத்தில் அம்மணி கழுத்தில் தாலி கட்டுகிறார்...அய்யோ பாவம் அவர் கண் முன்னாடியே அம்மணியை விபத்தில் பறிகொடுக்கிறார்

ஜெய்-நஸ்ரியா படத்தில் துனைப்பாத்திரங்களாக வந்து இளமைத்துடிப்புடன் அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்கள்....
சந்தானம்........படத்தின் உண்மையான கதாநாயகன்...இல்லையேல் படம் திசை மாறி போயிருக்கும்....ஆனால் உண்மையில்  படத்தில் வரும் அபார்ட்மென்ட் நாயும் ஆர்யாவின் கையில் உள்ள காரச்சேவும் நல்லாத்தான் காமெடி செய்கிறது

இசை -ஜீ.வி.பிரகாஷ்........பாடல்கள் கேட்கும்படி உள்ளன..அதிலும் கானா பாலாவின் ஹே...பேபி.. பாடல் சூப்பர்... பாடல்களுக்கு ஏற்ப ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு புதுமையாகவும்  வித்தியாசமாகவும் உள்ளது..


                               thanks-YouTube-byFoxStarIndia FoxStarIndia

ஆக........காதலுக்கு புதிய தத்துவம் சொல்லி...காதலில் தோல்வியுற்றால்....கலங்க வேண்டாம் யாரையாவது கட்டிக்கொண்டு மீண்டும் காதலியுங்கள்...? என்று சொல்லாமல் சொல்லும் நவீன தேவதாஸ் காதல் திரைப்படம்........படம் பார்க்கும் போது எனக்கு மௌனராகம்..அந்த 7 நாட்கள் படங்கள் நினைவு வந்தது...பிரமையோ?

நான் படம் பார்த்த  கோல்மால் திரையரங்கில்...கூட்டமோ கூட்டம் காதலர்கள் கூட்டம்...படம் முடிந்து அரங்கை விட்டு வெளியே வரமுடியவில்லை ..அப்புறம்தான் தெரிந்தது வாசலில் வீடியோவுடன் படம் எப்படிங்க...? கோஷ்டிகேமராவால் சுட்டுக்கொண்டு நிற்க...பாவம் காதலர்களோ முகத்தை மூடிக்கொண்டு பதுங்கி நிற்க...நான் எப்படியோ தப்பி வெளியே வந்து விட்டேன்.......இளைய மக்கள் ரசனை இப்படி இருக்க ஏன்தான் இவர்கள் தங்கமீன்கள்...மெழுகுவர்த்திகள் எடுத்து உருகி.....    

Thursday, September 26, 2013

திருச்சி மாநாடு-மோடியின் தமிழக படையெடுப்பா? கருத்துக்கணிப்பு


இந்திய அரசியலில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நரேந்திர மோடியின் திருச்சி இளந்தாமரை மாநாடு.....

http://www.modiintamilnadu.com/images/conference_logo1.png

மிகப்பெரிய  மக்கள் கூட்டத்தின் மத்தியில் மோடியின் பேச்சுக்கள் அத்தனையும் தமிழ் மொழி மீதும்...தமிழக மக்கள் மீதும்...தமிழக மீனவர்கள் மீதும் அதீத அக்கறையுடன் உள்ளது.

 குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கிச்செல்கிறது? தமிழக மீனவர்களை ஏன் இலங்கை தூக்கிச்செல்கிறது.  மத்தியில் இருக்கும் பலமில்லாத ஆட்சியால்தான்.  குஜராத்தாக இருக்கட்டும், தமிழகமாக இருக்கட்டும், கர்நாடக,கேரளா மீனவர்கள்  நிம்மதியாக இருக்கவேண்டுமானால் மத்தியில் தற்போது இருக்கும் ஆட்சி மாறவேண்டும். 

இன்னும் அவரது பேச்சில் காந்திஜி,ராஜாஜி,நாமக்கல் கவிஞர்,அப்துல் கலாம்  போன்றவர்கள் பெயர் அடிபடுகிறது (அண்ணேன்...அம்மா பெயர் சொல்லவில்லையே...? சூப்பர் ஸ்டார் பெயர் சொன்னா இன்னும் சூப்பராயிருக்கும்...?)

இது போன்ற கூட்டத்தை தமிழகத்தில் அவர் பார்த்ததில்லை இந்தக் கூட்டம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார் 
(அய்யோ...மோடி  அய்யா...எங்க ஆட்கள் அய்யா வந்தாலும் கூடுவாயிங்க...அம்மா வந்தாலும் கூடுவாயிங்க...)

http://timesofindia.indiatimes.com/photo/22661589.cms
(அண்ணேன்...அந்த காலத்தில் மன்னர்கள் படையெடுத்து வந்தது போல் இந்த காலத்தில் இவர்கள் படையெடுக்கிறார்கள்...இந்தக் கூட்டம்கூட அண்ணன் சூப்பர் ஸ்டார் மேடையில் தோன்றினாலும் தோன்றுவார் என்று நினைத்து வந்த கூட்டமாக இருக்கும்....பேசாமல் இவரும் கோச்சடையானில் நடிக்கிறார் என்று ஒரு புரளியைக் கிளப்பினால் இன்னும் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும்)

http://english.globalgujaratnews.com/uploads/news/09_2013/1379663030_Narendra_Modi.jpg

அய்யோ...நியாயன்மார்களே! எனக்குத்தான் இவியிங்க அரசியலில் எதுவும்  புரியமாட்டேங்கிறது....
உங்கள் பார்வையில்...
உண்மையில் இந்தக் கூட்டம் அவருக்கு வெற்றியைத் தருமா...? மத்தியில் ஆட்சிமாற்றத்தை உண்டாக்குமா...?

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
(குறிப்பு-இந்தக் கருத்துக்கணிப்பு உண்மை நிலையை தெரிந்துகொள்ளவே..
மற்றபடி எவ்வித அரசியல்...மதம்...சார்ந்ததுமல்ல)

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்-கதை இயக்கும் படமா?

(குறிப்பு-இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நாளை வரவிருக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றிய சிறப்புப் பார்வை.....)


mishkin

இந்திய சினிமா தனது நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வருடம் நிறைய வித்தியாசமான முயற்சிகளுடன் படங்கள் வருகின்றன......ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அதில் ஓன்று

freeonlinephotoeditor

இப்படத்தில் கதாநாயகன்-கதாநாயகி-வில்லன்-பாடல்கள் என்று யாருமில்லை என்கிறார் அதன் இயக்குனர் மிஷ்கின்
"கதையால் இயக்கப்படும் படத்திற்கு இவைகள் எதற்கு...?"

freeonlinephotoeditor

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - முழுக்க முழுக்கச் சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் இரவு நேரங்களில் எடுக்கப்பட்டுள்ள...... திரிலர் திரைப்படம் மிஷ்கின்,ஸ்ரீ,ஆதித்யா...முவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க...கதையே எல்லாமுமாகக் காட்சிகளை நகர்த்திச் செல்லும்  இப்படம் அவரது முந்தைய படங்கள்...சித்திரம் பேசுதடி,அஞ்சாதே...வெற்றி வரிசையில் வருமா? 



                                 thanks-youtube by Lonewolf Productions Lonewolf Productions

வாழமீனுக்கும்.... பாடல் இயக்கத்தில் வித்தியாசமாகப்  பேசப்பட்ட   மிஷ்கின் இப்படத்தில் பாடல்கள் எதற்கு...? என்கிறார். இசைஞானி இளையராஜாவை படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளார் 



                                 thanks-youtube by Lonewolf Productions Lonewolf Productions

ஆக...குத்துப்பாட்டு ஆட்டம் இல்லை,கவர்சிக்கன்னிகள் குலுக்கல் இல்லை,நட்சத்திர நடிகர்களின் அலப்பறை இல்லை....மிகவும் துணிச்சலுடன் புதுமைப் புரட்சியாக வரும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஆதரிப்போம் (அண்ணேன்...வசனமாவது இருக்குமா...?)


                                thanks-youtube by Lonewolf Productions Lonewolf Productions

(சினிமாப் பதிவர் அண்ணன்மார்களே...விமர்சனம் எழுதும் போது   நிறைகளை மட்டும் எழுதுங்கள் குறைகள் எதுவும் இருந்தால்...மிஷ்கின் அண்ணன் காதுல போய் ரகசியமாய்ச் சொல்லுங்கள்...அப்புறம் ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று யாரும் உங்களை முகமூடி போட்டோ போடாமலோ திட்டினால்..... எச்சரிக்கை)  


படத்தின் கதையும் படம் போல் மர்மமாக உள்ளது நமக்கு தெரிந்த ஈசாப் கதைகளில்..........ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று ஒரு நீதிக்கதை  உண்டு....
(கதை உணர்த்தும் நீதி : கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்)


UA-32876358-1