google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: February 2014

Friday, February 28, 2014

வல்லினம்-சினிமா விமர்சனம்

வல்லினம்- கூடைப்பந்து விளையாட்டு பற்றியும்  வணிகரீதியாக காதல்,நட்பு,காமெடி,அதிரடி...என்று கலவையாக கல்லூரி கதைக்களத்துடன் வந்துள்ள வித்தியாசமான திரைப்படம் 




படத்தின்  கதையாக......கிரிக்கெட் மாயையில் மறைந்து போன... மறக்கடிக்கப்பட்ட கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை முன்னணிப்படுத்தும் தொலைந்து போன அதன் அடையாளத்தை மீண்டும் மேம்படுத்தும் விழிப்புணர்வு தரும் கதை....ஆனால் திணிக்கப்பட்ட காதல்,காமெடி காட்சிகளால் கொஞ்சம் சிதைவு 

திருச்சியிலிருந்து சென்னை நேஷனல் காலேஜில் படிக்க  வரும் கூடைப்பந்து விளையாட்டில் திறமையான கிருஷ்ணா (நகுல்) கல்லூரியில் கப் வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு முக்கியத்துவம்  பெற்றிருப்பதும் அதன் கேப்டன் வம்சி (சித்தார்த் ஜோனல்கடா)யின் அடாவடித்தனத்தையும் கண்டு பொங்கி எழுந்து தன் நண்பர்களுடனும் இணைந்து........

தன் கல்லூரி தோழியும் காதலியுமான மீரா (மிருதுளா) அவளது பணக்கார தந்தை  ஜெ.கே (ஜெயபிரகாஷ்) ஸ்பான்சர் உதவியால் நடைபெறும்  கல்லூரிகளுக்கு இடையிலான மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவதே.........

படத்தின்  சிறப்பான காட்சிகள்...........
அவ்வப்போது  படத்தில் வரும் ரயில் நிலைய அதிரடிக்காட்சிகள் 
கல்லூரி விடுதி வாழ்க்கையை தத்ரூபமாக காட்சிப்படுத்தியது....
கடைசியில் காட்டப்படும் மிகப்பெரிய விளையாட்டுப போட்டி 
ஜெகன்  வரும் காமெடிக் காட்சிகள்...நகுல்-மிருதுளா காதல் காட்சிகள்
அதேநேரம்  டோர்னமென்ட் பைனல் விளையாட்டில் உண்மையான ஆப்ரிக்க கூடைப்பந்து வீரர்களை மாணவர்கள் என்ற போர்வையில் களம் இறக்கி இருபது சிரிப்பூட்டுவதாக இருந்தாலும்....படத்துக்கு விறுவிறுப்பு ஊட்டுகின்றது
vallinam


நகுல் உண்மையான கூடைப்பந்து விளையாட்டு வீரர் போன்று ஆவேசமாக நடித்துள்ளார் மிருதுளா நல்லாவே காதல் செய்கின்றது ஜெகன் காமெடியில் சந்தானத்தின் விரசமில்லா டைமிங் நகைச்சுவையுடன்  நம்மை சிரிக்க வைக்கின்றார்.....கொஞ்சநேரமே ஆயினும் கோச்சராக வரும் அதுல் குல்கர்னியும் ஜேகே என்ற பணக்காரராக வரும் ஜெயபிரகாஷும்   அசத்தலான நடிப்பு.......

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் பாஸ்கரனின் ஒளிப்பதிவு ரயில் முன் நகுல் பாயிந்து ஓடும் காட்சி.....விளையாட்டு திடலில் கூடைப் பந்து வீச்சு மற்றும் எஸ்.தமனின் இசை பாடல்களைவிட பின்னணியில்  ரசிக்கும்படி உள்ளது






















இயக்குனர் அறிவழகன் பல இடங்களில் வசனங்களால் மனத்தைக் கவர்கின்றார் நகைச்சுவை வசனங்கள் சிறப்பு முடிவில் இந்திய விளையாட்டு வெற்றிவீரர்கள் வரிசையில் அஜித்தின் கார் ரேஸ்   படத்தைக் காட்டி...தல  ரசிகர்களையும் கவர்கின்றார்....

திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் நகைச்சுவையும் நட்பு சென்டிமென்ட் காட்சிகளும் இல்லையென்றால் வல்லினம் முழு விளையாட்டு திரைப்படமாக மாறியிருக்கும் அதேநேரம் நாம் கொடுத்த காசும் எள் ஆகியிருக்கும்


Thursday, February 27, 2014

கத வாங்கலையோ கதை...சினிமாக் கதை!

அய்யா...அம்மா.... கத வாங்கலையோ கதை! சினிமாக் கதை ...! ரஜினி,கமல், விஜய்,அஜித்... எல்லா நடிகர்களுக்கும்  ஏற்ற சினிமாக் கதை.... என்று   திருவிளையாடல்  சிவன் (சிவாஜி) மாதிரி கூவிக்கிட்டு  கோடம்பாக்கம் வீதிகளில்....

அட.... நம்ம அப்பாடக்கர் பதிவரு........யோவ் சினிமா பதிவர...என்ன இப்ப சினிமா கதையக்கூட தெருவில கூவி விக்க ஆரம்பிச்சிட்டிங்களா....? அது சரி உங்கிட்ட அப்படி என்ன விசேஷமான கத இருக்கு...? கொஞ்சம் ஒன்-லைன்ல அவுத்துவிடு கேட்போம்........

பதிவர்- வாங்க அய்யா... டைரடக்கரா நீங்க....அய்யா...இதுல ஒரு கதைய வச்சு நீங்க  படம் எடுத்தா உங்களுக்கு  பிலிம் பேர் அவார்ட் கிடைக்குமுங்க...


டைரக்டர்-
அப்ப.... இரண்டு கதையச் சேத்து வச்சு எடுத்தா....?


பதிவர்-
உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமுங்க

டைரக்டர்- 
அப்படி என்னய்யா உன் கதையில செருப்பு...ச்சே...சிறப்பு..? அப்ப எல்லா கதையையும் சேத்து வச்சு எடுத்தா...?

பதிவர்-
ஒரேயடியா...நீங்க போய் சேர்ந்திடுவிங்க....ஹாலிவுட் உலகத்துக்கு அப்புறம் உங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது........

டைரக்டர்- 
அடேங்கப்பா...அம்புட்டு பெரிய அப்பாடக்கரா நீ....சரி...உன்கிட்ட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற கதை இருக்கா....?



பதிவர்-
இக்கடச்...சூடும்மய்யா.......சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற சூப்பர் கத....
பேச்சடையான்......
ஒருநாள் சென்னையில இருக்கிற எல்லா மொள்ளமாறி பேய்களும்  ஒன்னு சேர்ந்து  எல்லா  டாஸ்மாக் கடைகளிலும்   துட்டுகுடுக்காம அம்புட்டு பாரின் சரக்கயும்  அள்ளிட்டுப் போயி அம்மா தண்ணீர் கலக்காம அப்படியே ராவா அடிச்சிபுட்டு..........

அப்படியே அம்மா உணவகத்தில ஒத்த ரூபாயும் கொடுக்காம ...த்தா னு திட்டிக்கிட்டு இட்லி,சப்பாத்தினு அம்புட்டையும் தின்னுப்புட்டு எங்கே அம்மா திரையரங்கம்...? என்று மப்புல போயஸ் கார்டன் போய் அம்மா வீட்டு வாசல்லப் பார்த்து விரல நீட்டி  ஆர்ப்பாட்டம் பன்னுராயிங்க........

அம்மாவோ  இது கேப்டனின் சதிவேலை என்று நினைத்து பதிலுக்கு இரண்டு விரலைக் காட்டியும் அடங்காத பேய்களை அடக்க ஓரக்கண்ணால் எதிர் வீட்டுல இருக்கிற  நம்ம சூப்பர்   ஸ்டார் (சின்ன) பேச்சடையானப் பார்க்க...




 உடனே நம்ம சின்ன பேச்சடையானும் கோபம் கொண்டு ஒவ்வொரு பேயாக அடித்து நொறுக்க.....ஆனாலும்   கிளைமாக்ஸில் எல்லா பேய்களும் ஒரே ஒரு பெரிய பேயாய் உருவெடுத்து நிற்க........ அங்கதான் ஒரு ட்விஸ்ட்....நம்ம சூப்பர் ஸ்டார் உடனே அவரோட தாத்தா பெரிய பேச்சடையான நினைக்க.....


உடனே தாத்தா  பெரியப் பேச்சடையான்  லகலக...லகலக  என்று பாய்ந்து வந்து சுவர்களை உடைத்து.... கதம் கதம் என்று இரட்டை இலை முத்திரையை அந்தப் பேய்கள் முன்னாடி காட்டி எல்லாப் பேய்களையும் வதம் செய்துவிடுகிறார்....

kochadaiyaan


டைரக்டர்- 
யோவ்...நிறுத்துயா இந்தமாதிரி பீரியடு சைன்ஸ் படத்தைத்தான் சூப்பர் ஸ்டார் அவரோட செல்ல மகள வச்சு கோச்சடையானு எடுத்துக்கிட்டு இருக்காரு அம்மணியும் நிறைய மணி செலவு செய்து அதென்னமோ  மோஷன் கேப்ச்சர்  பன்னிக்கிட்டு இருக்குது....அவியிங்க ஒவ்வொருத்தரையும் படம் வரைஞ்சி படம் காட்டுரதுக்குள்ள அம்மணிக்கு போதும் போதும்னு ஆச்சு...இப்பத்தான் எப்ரல்ல்ல வரும் என்கிறாயிங்க...இதுல வேற நீ மொள்ளமாறிப் பேய்கள வேற படம் வரைய சொல்லுற...

பதிவர்-
சரிங்க...அய்யா என்கிட்டே இன்னொரு கதயிருக்கு....  உலக நாயகருக்கு ஏற்ற கத.........புஸ்வரூபம்  சொல்லுறேன் கேளுங்க பிடிச்சிருந்தா எடுத்துக்குங்க காசு கீசுலாம் வேண்டாம்...இளைய தளபதிக்கு ஏற்ப ஜொள்ளானு ஒரு கதயிருக்கு....  அப்புறம் நம்ம தலக்குகூட காரம்-னு ஒரு கதயிருக்கு....  

டைரக்டர்- 
யோவ்....புன்னாக்குப் பதிவரே இப்படியே  ஓடிப் போயிடு....இன்னொருவாட்டி கோடம்பாக்கத்தில கத வாங்கலையோ கதைனு  கூவுன மவனே என் நண்பன்  குட்டிபுலி கிட்ட சொல்லி உன் சங்க அருத்துடுவேன்....ஆங்...

பதிவர்-
அட...போங்கையா...இந்த தெரு இல்லனா அடுத்த தெரு...இவரு இல்லனா இன்னொருத்தரு.....அய்யா...கத வாங்கலையோ கத..சினிமாக் கத 

குறிப்பு-இது ஒரு நகைச்சுவைப் பதிவு....ரசிகசிகாமனிகள் யாரும் கோபப்படவேண்டாம்...........

Wednesday, February 26, 2014

வெண்மேகம்-சினிமா விமர்சனம்


வழக்கமான அதிரடி மசாலா,ஜொள்ளு காதல்,அழவைக்கும் காமெடி...படங்களாகப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு வித்தியாசமான யதார்த்தமான கதைக்கருவுடன் வந்துள்ள படம் வெண்மேகம்....



சமுதாயத்தின் இருண்ட பக்கங்களின் மறைந்திருக்கும் ஓர் அவலத்தை வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் வெண்மேகம்....

படம் ஆரம்பிக்கும் போதே.........

ஜோதி (ரோஹினி) என்ற பெண் தன் பருவம் அடைத்த பள்ளிச் சிறுமி- மகள்  பூஜா (ஜெயஸ்ரீ) வைக் காணவில்லை என்றும் ஒரு ஆர்ட்டிஸ்ட் பெயிண்டர்  அரவிந்த் (விதார்த்) வுடன் ஓடிப்போயிருக்கலாம் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக...........


venmegam

அரவிந்தோ  ராஜி (இஷாரா நாயர்) என்ற இளம் பெண்ணைக் காதலிக்க சிறுமி பூஜாவும் அரவிந்தைக் காதலிக்க என்று பிளாஷ் பேக் காட்சிகளாக நகரும் படம்....

ஒரு கட்டத்தில் பூஜாவின் காதல் அவளது தாய் ஜோதிக்கு தெரியவந்து கண்டித்ததில்...... பூஜா வீட்டைவிட்டு விசாகப்பட்டனம் போன அரவிந்தை தேடி ஓடிப்போகின்றாள்......

பழி அரவிந்த் மீது விழ.......பூஜா மீதுள்ள பாசத்திலும் அரவிந்தும் பூஜாவை தேடி அலைகின்றான்........ஆறு மாதத்திற்குப் பிறகு வைசாக்கில் ஒரு கொடிய கூட்டத்தில் பூஜாவை ஒரு பரிதாபமான கோலத்தில் கண்டுபிடித்து அவளை  எப்படி மீட்கின்றான் என்பதே கதை.......

(இது ஒரு காதல் த்திரிலர் திரைப்படம் என்பதாலும் இதற்கு மேல் தொடர்ந்தால் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு த்திரிலிங் இல்லாமல் போய்விடும் என்பதாலும் இத்துடன் கதை சொல்வதை...........)

venmegam

சமுதாயத்தில்  சமுக விரோதிகள் பெண்களுக்கு செய்யும்அவலமாக இதுவரை எந்த சினிமாவிலும் காட்டப்படாத ஒரு கொடுமையை கருவாக எடுத்து  ராம் லட்சுமணன் என்ற  இரட்டை இயக்குனர்கள் தெள்ளத்தெளிவான திரைக்கதை வசனம் இயக்கம் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியிருக்கின்றார்கள்  


சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இதற்காக அவைகளை மறக்கலாம்.........தீதும் நன்றும் பிறர தர வாரா.....நல்ல முடிவு 
என் குழந்த உங்க குழந்தய பெத்துத் தருவா.....கலங்கடிக்கும் வசனம்   
இங்க வருர கோழி எதுவும்   குஞ்சு பொரிக்காம போகாது....வில்லத்தனமான வார்த்தைகள் 

விதார்த்  அடக்கமான நடிப்பு....ஜெகன் அவ்வப்போது சிரிக்க வைக்க... கவர்ச்சிக்கும் காதலுக்கும் இஷாரா நாயர்....கண்டிப்பானா தாய் ரோஹினி... கொடுமையான வில்லியாக மஞ்சரி...என்று  



ஓர்  உண்மை சம்பவத்தின் அடிப்படையில்உருவான கதை என்று சொல்லப்படும் வெண்மேகம்....அது உண்மையா? என்று தெரியவில்லை ஆனாலும்...எப்பவாவதுதான் இப்படி வெண்மேகம் போன்ற படங்கள்  தமிழ் திரைவானில் தோன்றுகின்றன அவைகளும் ஆஹா கல்யாணம்,பிரம்மன்...போன்ற அலப்பறை படங்களால் கலைந்து போகின்றன 
 

Tuesday, February 25, 2014

வல்லினம்-கிளு கிளு குளு குளு மெல்லினம்..?
















விரைவில் வரவிருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரும் சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்க மெடல் விருது பெற்ற ஈரம் பட இயக்குனர் அறிவழகனின் வல்லினம் பற்றி.............



முன்பு ஹாலிவுட்  படங்களில் மட்டுமே நாம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களைப் போன்று தமிழ் திரைவானிலும் விளையாட்டுப் பற்றிய திரைப்படங்கள் வெண்ணிலா கபடிக் குழு (கபடி),சென்னை-28 (கிரிக்கெட்),குமரன் S/o மகாலட்சுமி (குத்துச்சண்டை),எதிர் நீச்சல் (ஓட்டப்பந்தயம்).... இப்படிநிறைய படங்கள் வந்து வெற்றிவாகை சூடியுள்ளன.

vallinam


கூடைப்பந்து  (Basket Ball) விளையாட்டு பற்றி மிகுந்த பொருட்ச் செலவிலும் சிறந்த கதையமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள வல்லினம் படம் நிச்சயம் வெற்றிப் படமாகும் என்று கோடம்பாக்கம்   சினிமா பட்சிகள் படபடக்கின்றன....

vallinam

அச்சம்  தவிர் என்று முதலில் பெயரிடப்பட்டு...பின்பு  வல்லினம் என்று மாறிய இப்படத்தில் நடிக்கும் நகுல் உண்மையான கூடைப்பந்து வீரராக தோன்றவேண்டும் என்று சிறப்பு பயிற்சி எடுத்துள்ளார்..............



 
     thanks-YouTube by Sony Music India






























மிருதுளா என்ற கவர்சிக்கன்னியையும் படத்தின் நாயகியாக பிடித்துவந்து படம் காட்டுகின்றார்கள் மேலும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியும்  தெலுங்கு நடிகர் சித்தார்த் ஜோனலகடாவும் வில்லன்களாக நடித்துள்ளனர் 


vallinam

வல்லினம்  படக்குழுவினர் செங்கல்பட்டு ரயில்நிலையம் அருகில் ஒரு காட்சியை படமாக்க தொடர்ந்து 72 மணிநேரம் இடைவிடாது உழைத்துள்ளனர் என்பதே இப்படம் எப்படி சிரத்தையுடன் உருவாகியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு............


அண்ணேன்...இது வல்லினமா? மெல்லினமா?
ஒரே கிளு கிளு குளு குளு  படங்களாயிருக்கு....
ஹி...ஹி....இது பேருதான் 
கூடைப் பந்து விளையாட்டா....? அவ்வவ்...
 


Monday, February 24, 2014

ஜெ.ஜெ...எனும் அம்மாவின் வாழ்க்கை


இதுதான் ஜெ.ஜெ...எனும் (தமிழக முதல்வர்) அம்மாவின் வாழ்க்கை...........அந்தப் பிரம்மன் அவர் தலையில் எழுதிய எழுத்து....... அதிர்ஷ்டத்தின்   ஆட்டோகிராப்   

 
பள்ளிப் படிப்புக்கு பாதிப்பு வராமல் 1961-ல் Epistle என்ற ஆங்கிலப்படத்தில் நடித்த  அம்மா தனது 15-வயதில் நடித்த முதல் படம் சின்னடா கொம்பே என்ற கன்னட படம் தமிழில்வெண்ணிற ஆடையில் அறிமுகமாகி.......

தமிழ் திரைப்படப் பட வரலாற்றில் முதன் முறையாக குட்டைப்பாவாடை (skirt) அணிந்து புரட்சியாக நடித்த ஒரே நடிகையான அவர் நடித்த படங்களில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பான யாருக்கும் அடிபணியாத குணத்தையும் பிரதிபலிக்கும்.....



யாருக்கும் அடிபணியாத லண்டனில் படித்து விட்டு கிராமத்துக்கு வரும் கல்பனாவாக  அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது 1972-ல் முதல் முறையும் அவரது சூர்யகாந்தி படம் 1973-ல் இரண்டாவது முறையும் அவரது தெலுங்கு ஸ்ரீ கிருஷ்ணா சத்ய மூன்றாவது முறையும் பெற்றுத்தந்தது 


jayalalitha

அதேபோல் அவர் சுதந்திரப் பறவையாக  நடித்த தெய்வமகன் சிறந்த வெளிநாட்டு மொழிக்கான ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்படம் ஆகும்



அவர் எம்ஜிஆருடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன்,காவல்காரன்,அடிமை பெண்,எங்கள் தங்கம்,குடியிருந்த கோயில்,ரகசிய போலிஸ் 115, நம் நாடு....என்று அனைத்தும் வெற்றிப்படங்களே.........அதுவே அவருக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு நெருக்த்தை தந்தது...



அம்மா அவர்களை எம்ஜிஆர்  அரசியலிலும் பங்காற்ற அழைத்தப்போது முதலில் மறுத்த அவர் 1982-ல் அதிமுகவில் இணைந்தார்.... அரசியலில் அவரது முதல் பேச்சு-பெண்ணின் பெருமை அவருக்கு பெரும் புகழும் தந்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கியது 


beach

அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமையை அறிந்த எம்ஜிஆர் ராஜ்யசபை உறுப்பினர் ஆக்கினர் பிறகு பல சூது கவ்வும்  போராட்டங்களில் வெற்றிபெற்று 1991-ல் முதலமைச்சரானார் தொடர்ந்து மூன்றாவது தடவையாக முதல்வராக இருக்கும் அவர் நாளையப்  பிரதமராக......... பேசப்படுகின்றார்


cricket

அச்சுறுத்தலாலும் கடுமையான நடவடிக்கையாலும் யாரும் என்னிடமிருந்து எதையும்  பெறவோ அல்லது என்னை அடிபணிய வைக்கவோ முடியாது.யாருக்கும் எனது ஒத்துழைப்பு வேண்டுமென்றால் என்னிடம் அன்பாக,பணிவாக,கொஞ்சலாக நடந்துகொள்ள வேண்டும்..... இது 1985-ல் அம்மா அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது........



















அவரது  இன்றைய செயல்பாடுகள் அத்தனையும் இதற்கு சான்று இன்று அம்மா 7-பேர் விடுதலை தீர்மானம்கூட அடுத்த பிரதமாராக அம்மா வந்தாலும் வருவார்களோ...?  என்ற அச்ச உணர்வை இந்திய அரசியலில் காங்கிரஸ்,பாஜக,ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஊட்டியுள்ளது......


jj

இன்று  பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சினிமா-அரசியல் வாழ்வில் நேற்று நடந்தவைகள் அத்தனையும் அவர்கள் திட்டமிட்டச் செயல்கள் அல்ல...நாளை பிரதமர் பதவியும் நடக்காது என்று சொல்வதற்கில்லை.........

Made with FreeOnlinePhotoEditor.com  

சிலநேரங்களில் கல்லெடுத்து எறியாமல் தானாக அவரது மடியில் விழுந்த வெற்றிக்கனிகள்......பலநேரங்களில் அவர்கள் எதிரிகள் எறியும் கல்லில் இவரது மடியில் வந்து விழும் வெற்றிக்கனிகள் 

Made with FreeOnlinePhotoEditor.com  
இதுதான் ஜெ.ஜெ...எனும் அம்மாவின் வாழ்க்கை...........அந்தப் பிரம்மன் அவர் தலையில் எழுதிய எழுத்து....... அதிர்ஷ்டத்தின்   ஆட்டோகிராப்  



என்  பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்............
அடுத்தப் பிரதமராக அம்மா வர (அதிஷ்ட) வாய்ப்பு உள்ளதா...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-3/3/2014


Sunday, February 23, 2014

ஆஹா கல்யாணம்-ஏலே என்னல படம்காட்டுறீங்க..?

ஆஹா கல்யாணம்-எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால்...முக்கிக்கிட்டு கிடக்கிற மும்பாய் கலாச்சாரத்த இங்க படம் காட்டும் பரதேசிகள என்னத்தச் சொல்றது...? இந்த ஊடகங்கள் அதிலும் தி ஹிந்து,நக்கீரன்...இவியிங்க நல்லாயிருக்குனு வாயவச்சாலே அதில வில்லங்கம் இருக்கும்...நாடு நாசமாப் போட்டும்னு கூடவே சாபம் இருக்கும்
aahakalyanam

ஏலே...சினிமாவ சினிமாவா பார்க்கத் தெரியாத  நாடுல இது...இங்கதான் இந்த கூத்தாடிக கோட்டையில இருந்து கும்மாளம் அடிக்க முடியும் இன்னும் கோட்டையப பிடிக்க வரிச கட்ட முடியும் ஏலே..எங்க மக்க  சினிமாவைப் பார்த்தே வயித்த நிரப்பிக்கிறவியிங்க... கற்பனையிலேயே காலத்த ஒட்டுறவியிங்க........இப்ப அம்மா திரையரங்கம் வேற கட்டி மலிவுவிலையில மக்களைமகிழ்விக்கப் போறாயிங்களாம்...

ஏலே...பேண்டு பஜா பராட் - இந்தி படத்த தமிழ்ல ரீ-மேக் பண்ணுனது தப்புயில்லல.... அதில பாலிவுட் அம்மணி வாணி கபூர் பெல்லி ஆட்டுரத காட்டினது தப்பு இல்லையா?....நாணி-வாணி உதடுகள ஓட்ட வச்சது தப்பு இல்லையா? பொழுது போக்குனு  இப்படி எச்ச காட்சிகள காட்டி கவிச்ச கலாச்சாரத்த ஊட்டுனதுதப்பு இல்லையா?
aahakalyanam

 
அரங்கம் நிறைந்து வசூல் அள்ளிக்கிட்டும்  துள்ளிக்கிட்டும்  ஓடும ஆஹா கல்யாணம் தமிழ் சமுதாயத்த  சீரழிக்க வந்த சினிமால.....இத ஆகானா ஓகோனா பாராட்டுனா இந்த  பாலிவுட் பண்ணி இன்னும் நிறைய குட்டி போடும்ல........

26-வயசுக்குள்ள வாலிபர்கள் உருவாக்கின படம் என்கிறாயிங்கல...ஏன்தான் இவியிங்க புத்தி இப்படி போச்சோ...கொஞ்சம் சொந்தமா யோசிங்கல...? 

(யோவ் நாட்டுப்புறத்து பதிவரே! என்ன சினிமாவ காக்க வந்த அந்நியன் மாதிரி அலப்பறக்  காட்டுற....இந்த ஆஹா கல்யாணம் அப்படி என்னதான்  ஆகாதத சொல்லுது..?ஏதோ விமர்சனம் படிக்கலாம்னு வந்தா இப்படி சாகடிக்கீறியே...)

இப்பட்டித்தான்  ஆஹா கல்யாணம் படத்துக்கு சினிமா விமர்சனம் எழுத நினைத்தேன் படம் பார்ப்பதற்கு முன்னாடி...ஆனால் படம் பார்த்தப் பிறகு அப்படியே அசந்து விட்டேன்.....மக்கா இப்படியொரு படத்த பார்க்க கொடுத்து வச்சிருக்கணும் 

ஆம்மாம்...நம்ம நட்சத்திர நடிகர்க படம்னு நம்மள பாடாப் படுத்துறத பார்த்தப் பிறகு எந்த அலட்டலும் இல்லாமல் கொடுத்த காசுக்கு அருமையானபொழுது போக்கு படம் காட்டுறாயிங்க....
இவியிங்க  BUTX பிடின்னு கூத்தடிக்கும் போது இது எம்புட்டோ பரவயில்ல.....

படத்தின் கதையாக....FINANCE + ROMANCE ஒன்னுசேர முடியுமா...? அதாவது பணம் சம்பாதிக்கனும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு இளஞ்சியும் காதல் போதையில் தள்ளாடும் இளைஞனும் வாழ்வில் ஓன்று சேரமுடியுமா..? என்பதை காதலும் நகைச்சுவையாகவும் கலந்து கட்டி..காட்டியிருக்காங்க 



கல்லூரி விடுதியில் சாப்பாடு சரியில்லாததால் கல்யாண மண்டபங்களில் நடக்கும் விசேஷங்களில் போய் உறவினர்கள் போல் உண்டு மகிழும் மானவர்களில் ஒருவராக யதார்த்தமாக அறிமுகமாகும் சக்தி (நாணி)...அதைக் கண்டு பிடித்து கேலி செய்யும் ஸ்ருதி (வாணி கபூர்) யின்  ஆட்டம் பாட்டத்தில் மயங்கிய சக்தி அவளைக்  விரட்டிக் காதலிக்க....ஸ்ருதியோ திருமண ஏற்பாடு செய்யும் தொழில் மீது கனவில் இருக்க...

இருவரும்  இதே தொழிலை பெரிதாக செய்யும் சந்திரலேகா(சிம்ரன்) விடம் வேளையில் சேர்ந்து...பிறகு இருவரும் தனியாக கெட்டிமேளம்  என்ற திருமண ஏற்பாடு செய்யும் தொழிலை பார்ட்னராக தொடங்கி ஓகோ என்று வளர்கிறார்கள்....ஆனாலும் சக்தி காதல் எண்ணத்திலும் ஸ்ருதி தொழில் எண்ணத்திலும் என்று மட்டுமே இருக்கின்றார்கள்

ஒருநாள் ஒரு பெரிய திருமணத்தை நடத்திய வெற்றிக் களிப்பில் இருவரும் மப்பில் உடலளவிலும் ஓன்று சேர்ந்து விடுகின்றார்கள் அதனால் அம்மணிக்கு சக்தி மீது காதல் வருகின்றது ஆனால் இருவருக்கும் உள்ள ஈகோ மோதலாகி பிரிவு......இருவரும் தனியாக தொழில் நடத்தி நஷ்டம் 


aahakalyanam


சக்தியும் ஸ்ருதியும் மீண்டும்  ஒரு பெரிய திருமண ஏற்பாடை செய்ய  ஓன்று சேர்ந்து நடத்தவேண்டிய சந்தர்பம் வருகின்றது அதேநேரம்  ஸ்ருதிக்கு வேறு மாப்பிளை நிச்சயிக்கப்பட்டதை அறிந்து சக்தி துடிக்கின்றான் இப்படி தொழிலில் ஓன்று சேர்ந்த சக்தியும் ஸ்ருதியும் வாழ்வில்  ஓன்று சேர்ந்தார்களா...? என்பதே..............

படம்முழுக்க காட்சிகள் அனைத்தும் வண்ணமயமாக காட்டப்படுகின்றது தெளிவான கதைப் போக்கு..சிலநேரம் லோக்கல் கீழ்குடி மக்களின்  ஈத்தர மொழியில்  இருந்தாலும் சில நேரம்  உயர்மட்ட மேல்குடி மக்கள் உளறலாக இருக்கும் கலகலப்பான வசனங்கள்....






எந்த எதிர்பார்ப்பும் பார்வையாளனுக்கு இல்லை என்றாலும் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு கட்டுப் பட்டவர்களாக அரங்கில் அமர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது...........(அண்ணேன்..அடுத்து ஏதாவது சீன் வரும்னு எதிர்பார்த்து இருப்பாயிங்க....ஹா..ஆஹா...?)

படத்தில் சூடான அந்தப் படுக்கை காட்சிகள்...நாணி-வாணி லிப்-லாக்கிங் காட்சி...இவைகளை தவிர்த்திருந்தால் தமிழில் அருமையான குடும்பப் படமாக....ஆஹா கல்யாணம் கொண்டாடலாம்      

நாணியின் நடிப்பு தமிழுக்கு புதுசு அல்ல...ஓவர் ஆக்டிங் இல்லாத யதார்த்தம் அவரது தமிழும் நமக்கு புதுசு அல்ல...தசாவதாரம் நாயுடு பேசும் ஸ்டைலு தமிழ்+தெலுங்கு=தமிலுங்கு......? 

வாணி....ஒட்டகத்துக்கு சுடிதார் போட்டது போல்...சேலையில் சகிக்கல...ஆனாலும் அம்மணி நல்ல ஆட்டம் போடுது அசத்தலா நடிக்குது....கோலிவுட் முதிர்கன்னிகள்..ச்சே..கவர்ச்சிக் கன்னிகள் வரிசையில் அம்மணிக்கு நல்ல இடமிருக்கு ..........



 


















ஆக...........ஆஹா கல்யாணம் கொடுத்த காசுக்கு போக்கு இல்லை ஆனால் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பொழுது போக்கு இல்லை 
ஆஹா  கல்யாணம்..... 40 வகை பதார்த்தங்கள் வைத்து பரிமாறப்பட்ட விருந்து அதில் ஓன்று  விரசம் உறுகாய் போல..........ஆனாலும் இயக்குனர் கோகுல் கிருஷ்ணாவணிக ரீதியில் பிழைக்கத் தெரிந்த படம் காட்டும் வெற்றியாளர்




Saturday, February 22, 2014

பிரம்மன்-அடிச்ச சரக்கு எறங்கி போச்சு மாப்ள...


இங்கே பிரம்மன் படத்திற்கு சும்மா சிரிக்க சில ட்விட்டர் விமர்சனங்கள், அதற்கு நடிகர் சசிகுமார்-இயக்குனர் சாக்ரடிஸ் என்ன பதில் சொல்லுவார்கள் என்ற ஒரு கற்பனைப் பதிவு......

புலி@prakaash86 
அடிச்ச சரக்கு எறங்கி போச்சு மாப்ள. கைவசம் குவார்டர் இருக்கா? #பக்கத்து சீட்டு இரசிகர் கவலை. பிரம்மன்

சாக்ரடிஸ்-புலி அண்ணேன்...படத்தில குளு குளு சுவிஸ் ஆல்ப்ஸ் பனிமலை, வெனிஸ் தெருவீதி...எல்லாம் காட்டுறோம் அப்புறமும் இறங்கிப்போச்சுனா என்னத்தச் சொல்றது......?

தீப்பொறி @theeppori10 
த்தா ...படம் எடுங்கடானா குப்பைய ஸ்கிரீன்ல காமிக்கறானுக ...இதுக்கு 60 ரூவா நான் அழுதேன் ..புரடியூசர் எவ்ளோ அழுதானே #பிரம்மன்

சசிகுமார்-அவியிங்க ஏக்-தம்ல படிக்காமலே குருப்-1 எழுதி....ASP ஆயிடுவாயிங்க...நான் யதார்த்தமா கிளாப் அடிக்கக்கூட தெரியாம கஷ்டப் படுறத காட்டுனா இது குப்பையா...தீப்பொறி அண்ணேன்?

காதல் @143di 
படம் முடியறப்ப சிச்சுவேஷன் சாங் வச்ச பாரு ஓடு ஓடு ஓடுன்னு. சாக்ரடீசு அங்க ஒளிஞ்சிகிட்டு நிக்குறப்பா நீ -பிரம்மன்.

சாக்ரடிஸ்-ரொம்ப தாங்க்ஸ் அண்ணேன்...இது வாழ்க்கை  படம்...அதுதான் கொஞ்சம் தத்துவார்த்தமாய் பாட்டு போட்டேன்...ஹி...ஹி...என் பெரும் சாக்ரடிஸ்ல.......
மதன்@i_mathan 
டிஸ்கவரி தமிழ் ல பிரம்மன் படத்துக்கு ட்ரைலா் போடுறானுக #அடேய்

சசிகுமார்-அப்படியா....அதுக்குள்ள போட்டுட்டாயிங்களா...வெண்ணைக பிரமன்னா ஏதோ மனுஷ குரங்குனு நினைச்சிப்புட்டாயிங்க....

சிலம்பரசன் @chilamb 
பிரம்மன்,டைரக்டர் சசி நடிச்ச பிரம்மன் படத்த பாத்தா தப்பு பண்ணிட்டோம்'னு வருத்தப்படுவார்

சாக்ரடிஸ்-முதல்ல அவருகிட்டத்தான் கால்-ஷீட் கேட்டோம்...அவரு புல்-ஷிட்னு சொன்னாரு...அப்படிங்கண்ணா...என்னங்கண்ணா  

கொலவெறி குந்தன்@gklkrish 
வந்தோமா!!! நட்புன்னா என்ன!?? காதல்னா என்ன??? நாலு கருத்து சொன்னோமானு போகாம, உனக்கேன்ல பனி மலைலலாம் டான்சு???? #பிரம்மன்..

சசிகுமார்-ஏலே...அவரு பெப்பர்-சால்ட் தலையோட தொங்கு தொங்குனு குதிச்சா வீரம் என்கிறீங்கல.........இன்னொருத்தரு ஜில்லாவிட்டு ஜில்லா போயி ஜப்பாணுல  தாவணி போட்ட அம்மனியோட கண்டாங்கிச் சேல கட்டிவந்தப் பொண்ணுனா ஜோள்ளுவிடுறீங்கல...இருங்கல இந்தா  வருறேன் 

திருட்டுகுமரன்@ThirutuKumaran 
கடைசில பிரம்மன் டைட்டிலுக்கு ஒரு எக்ஸ்ப்ளைன் வேற பண்ணாய்ங்க பாரு...ஸ்கீரினுக்கு தீ வைக்க போயிட்டேன்

சசிகுமார்- கடைசிவரை திரையரங்கில் இருந்து படம்பாத்த குமாரு அண்ணேன்...உங்க நேர்மைய ரொம்ப பாராட்டுறேன் உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு....


climb

RajanLeaks@RajanLeaks 
பிரம்மனில் பத்மப்பிரியா ஒரு ஐட்டம் சாங்குக்கு வருகிறார். # தட் துக்கம் தொண்டையை அடைத்த மொமண்ட்

சாக்ரடிஸ்-அது அயிட்டம் சாங் இல்ல அண்ணேன்...அதுதான் டைட்டில் சாங் அப்புறம்தான் கதையே ஆரம்பிக்குது ...எடிட்டர் ஏன் அத இப்படி இடையில வச்சாரு.....?

புகழ்@PugazhQ 
பிரம்மன் மொக்கத்தான்.. அதுக்காக சசிக்குமார பவர்ஸ்டார் கூட கம்பேர் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர் ! ஏன் உங்க ஹீரோலாம் மொக்க படம் குடுக்கல ?!

சசிகுமார்-அய்யா...புகழ்..நீ நல்லா வருவ..அடுத்த படத்தில நீதான் என் நண்பன்டா...நண்பன்டா....


♪ விஜய் சூரியா ♪@Its_Suriya 
வாட்ச் மேன் அண்ணே... உங்க கால்ல விழுந்து 200 ரூவா தர்றேன் ..கதவ தொறந்து விடுங்கண்ணே..# பிரம்மனின் கதறல் :'

வால்டர் வடிவேல்@murugan_vadivel 
பேர்லதான் "பிரம்மன்" உண்மையில் அவன் எமன் #உயிர் போயிரும்

Doha Talkies@dohatalkies 
கக்கூஸ் வராதவன் மாதிரியே மூஞ்சிய வச்சிட்டு ஆடிட்டு இருக்கான் சசிகுமார். #பிரம்மன்


சசிகுமார்-சாக்ரடிஸ்
யோவ் பதிவரே! 
இப்ப நீ இத்தோட இவியிங்க அழிஞ்சாட்டியத்த நிறுத்தப் போறீயா...
இல்ல உன் சங்க அருக்கட்டுமா...? 
ஒரு படத்த எடுக்கிறது எம்புட்டு கஷ்டம்னு இந்தப் படத்தில காட்டியிருக்கிறோம் அம்பதோ நூறோ கொடுத்துப்புட்டு ஏன்...? ஏன் இப்படி..? கீச்சுறீங்க



கவர்ச்சிப் பக்கம்................

அய்......பிகினியில் -பட நாயகி 




இயக்குனர்  ஷங்கரின் பட நாயகி எமி ஜாக்சன் பிரபல இங்கிலாந்து புகைப்பட நிபுணர் கேவின் க்ளவ் (Gavin Glave) வின் கேமரா கண்களுக்கு மேலாடையின்றியும் பிகினி (bikini) உடையிலும் தன் மேனியின் அழகை பயம்...ச்சீ... படம் காட்டினார்.......
அய்...அப்ப சூப்பர் ஜொள்ளா....?

******************************************
யோவ்...பதிவரே இது என்னய்யா கவர்ச்சி 
இக்கடச் சூடு....இங்க கொஞ்சம் பாரு......
அன்று  சச்சினை டாட்டு போட்ட..........


இன்று   ட்விட்டரை தீ பிடிக்க வைத்த  
யோகா டீச்சர் பூனம் போண்டா....ச்சே....பாண்டே 



 (அண்ணேன்....
நீங்க போன்டாவின் யோகா படத்த 
காட்டவே இல்ல ....
அய்யோ நா எப்படி யோகா கத்துக்குவேன்.... )

 

UA-32876358-1