சிவனே என்றுயிருந்தேன்
அவர்களே வந்தார்கள்
கடன் அட்டை தந்தார்கள்
காசோலை வாங்கிக்கொண்டு
கடனும் கொடுத்தார்கள்.
எல்லாம் சரியாகத்தான் போனது
எங்கேயோ ஒரு தவறு
வட்டி குட்டிப்போட்டு
அசலைத்தாண்டிவிட்டது.
விட்டால் போதுமென்று விலகினால்
போனில் தொல்லை நேரில் தொல்லை
தடிதடியாக குண்டர்கள்
அடிதடிவரை வந்துவிட்டது
நீதிமன்றத்தில் முறையீடு
வக்கீல்கள்-குமாஸ்தாக்கள்-நீதிபதி
கைகட்டி நின்றேன் குற்றவாளியாக
அவர்களே பேசிக்கொண்டார்கள்
வாங்கிய கடனில் பாதியை
அவர்களே புடுங்கிக்கொண்டார்கள்
வாய்த்தா..... வாய்த்தா.... வாய்த்தா
எழுவருடம் கழித்து தீர்ப்பு.
மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில்
மூன்று வருடம் அலைக்கழிப்பு
அப்புறம் விரைவு நீதிமன்றம்
நீதிபதி மாமியாருக்கு நெஞ்சுவலியாம்
இருக்கும் பாதிக்கடனில் மீதியை
அன்பளிப்பாய்(கையூட்டு) கேட்டார்கள்.
எதிரியிடம் சரணடைந்தேன்.
ஏறிய மனஅழுத்தம் இறங்கிவிட்டது
ஆனால்,
420 நானா? அவர்களா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |