google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு கவிதையின் பயணம்

Saturday, April 14, 2012

ஒரு கவிதையின் பயணம்


கவிதை ஓன்று எழுதினேன்
புனைபெயர் சூடி
கவிஞர்கள் வரிசையில்
சேர்ந்துகொண்டேன்

எழுதிய கவிதையை
என்ன செய்ய?
போட்டிக்கு அனுப்பலாமா?
பத்திரிகையில் 
வெளியிடலாமா?
விருது கிடைக்குமா?

நாலுபேரிடம் 
காண்பிப்போமென்று   
என் தமிழாசிரியரிடம் 
எடுத்துச்சென்றேன்
எதுகை மோனை 
எதுவுமில்லை
என்னையா கவிதை? என்றார்.
எடுத்தேன் ஓட்டம.

பக்கத்துவீட்டு எழுத்தாளரிடம்
படிக்ககொடுத்தேன்
ஆகா...ஓகோ....அருமை...
ஆனால்ஆங்கிலத்தில் இதை  
படித்ததாக ஞாபகம் என்றார்
(போலி கவிஞரென்று
புகார் கொடுப்பாரோ?)

வீட்டுக்கு வந்துவிட்டேன்
கைபேசியில் வாய்பேசினேன்   
நண்பரோ"சிக்னல் வீக்"என்று
துண்டித்துவிட்டார் 
(நட்பையும் சேர்த்துதான்)

மகனைப்பார்த்தேன்
படிப்பதுபோல் பாவித்தான்
மனைவியை தேடினேன்
அடுப்படியில் 
அடைந்துகொண்டாள்  

கணணியை முடுக்கி
தளங்களை தேடினேன்
எல்லா தளங்களிலும்
ஏகப்பட்ட விதிகள்
நானே உருவாக்கினேன் 
ஒரு வலைப்பூவை.....
எழுதிவிட்டேன் 
என் கவிதையை
நானும் 
கவிஞனாகிவிட்டேன்.
(கிரீடமில்லை என்றாலும்
கர்வம் குறையவில்லை)
யாரும் படிக்காவிட்டாலும் 
நானே படிக்கிறேன் 
நாளுக்கு நூறு தடவை....
***********************************************
காணொளி-


                                           Thanks-YouTube-Published  by rameshbabu1949











இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1