google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல்நோயை பரப்பாதீர்கள்.

Sunday, April 15, 2012

காதல்நோயை பரப்பாதீர்கள்.


இருப்பவர்களைப் பற்றியே 
எழுதுகிறோம்
இறந்தவர்களையும் 
எழுதலாமென்று
கல்லறைகளை 
கணக்கு எடுத்தேன்

கணக்கு எடுத்தவைகளில்
காதலர் கல்லறைகள் 
கணக்கிலடங்காது
காதலிகள் கல்லறைகள் அதிகம்
காதலர்களின் கல்லறைகளோ
மிக மிக அதிகம்

நாட்டில் அத்தனை நோய்களுக்கும்
மருத்துவமனை இருக்கும்போது
காதல் மருத்துவமனை
இல்லாதது ஏன்?  
காதல் மருத்துவமனையும்  
காதல் மருத்துவர்களும்  
இருந்திருந்தால்
காதலர் கல்லறைகள்
குறைந்திருக்குமே!

காதல்நோய்
பன்றிக்காய்ச்சலைவிட
படு மோசமானது.

கவிஞர்களே! நீங்களாவது
காதல்நோய்க்கு மருந்திடுங்கள்
உங்கள் கவிதைகளால்
காதல்நோயை பரப்பாதீர்கள். 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1