google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதுரை ஆதீனம் என்:1/293

Saturday, May 19, 2012

மதுரை ஆதீனம் என்:1/293




ஏழாம் நூற்றாண்டில்
சோழவள நாட்டில்
சீகாழிப்பதியில் அவதரித்தார்
சிவபாத இருதயர் பகவதியார்
தம்பதியினருக்கு மகனாக
ஆளுடைய பிள்ளையார்

தனது மூன்று வயதில்
நீராட மூழ்கிய தந்தையை
காணாது அம்மே..அப்பே என்று
அலறினார் குளக்கரையிலிருந்து
அதைக்கேட்ட சிவனும் பார்வதியும்
தோன்றி பசியென நினைத்து
ஞானப்பால் ஊட்டி மறைந்தனர்
உதட்டில் வடிந்த பாலைக்கேட்டு
அடிக்கவந்த தந்தையரிடம்
தோடுடைய செவியன் பாடினார்   
திருஞானசம்பந்தர் ஆனார்
தலயாத்திரைகள் பயணித்தார்

அக்காலத்தில் பாண்டிநாடு
அரசன் கூன்பாண்டியன்
ஆதரவினால்
சமண் சமய இருளில்
சிவாலயங்கள் மூழ்கியதால்
மன்னனின் மாதேவியார்
மங்கையர்க் கரசி வேண்டுதலில்
மதுரை வந்தடைந்தார்

அன்றும் எதிர்த்த சமணர்களுடன்
மன்னரும் சேர்ந்து
அவர் தங்கிய
மடத்துக்கு தீ வைத்ததால்
மன்னருக்கு வந்த
வெப்பு நோய் தீர்த்தார்
திருப்பதிகம் எழுதி
சமணத்தை அழித்தார்
சமணர்கள் கழுவேறினர்

மதுரை ஆதினமடத்தின்
முதல் ஆதினத்தின்
வரலாறு இதுவே!




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1