google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிறுக்கல்கள்-1

Saturday, May 12, 2012

கிறுக்கல்கள்-1

1
ஆணிவேர்
இல்லையேல்
அது மரமல்ல!
2
வைரத்தை தேடி
அலையாதே!
அதன் மீதுதான்
நீ நிற்கிறாய்!
3
மலைத்து நிற்காதே!
மிக அருகில் போனால்
மலைகூட மண்மேடுதான்.
4
 சுட்டெரிக்கும் சூரியனை
உன் சுட்டுவிரலால்
சுட்டுவிடு!
5
போதை விடு
பாதை தேடு
பாதை இல்லையேல்
பாதை போடு!
6
ஆசை-
அளவோடு வீசினால்
அது தென்றல்.
அதிகமாக வீசினால்
அது புயல்
7
உன்
கல்லறை மீது
ஏதேனும் எழுதிவைக்க
நல்லதை ஏதேனும்
செய்துவிட்டு போ!
8
அன்று ஷேக்ஸ்பியர் எழுதிய   
நாடகங்களைப்  படியுங்கள்
இன்று பேசுபவர்களின்
வார்த்தைஜாலங்கள் புரியும்
 9 
வாழ்ந்தவர்களின்
வரலாறைப் படியுங்கள்
அப்போதுதான்
நிகழ்காலத்தின்
நிஜங்கள் தெரியும்

10
கர்வம்  
கீரீடமானால்
தலை இருக்காது
தலைவலிதான் இருக்கும்  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1