Siva Manasula Sakthi BGM by Ravi Sounderrajan
வேசங்கள் பல
போட்டுவிட்டேன்
போடுகிறேன்
இந்த நாடகத்தில்...
போட்ட வேசங்கள்
நிலைக்கவில்லை
நிலையானது எதுவுமில்லை
என்பதினாலே என்னவோ?
கடவுள் வேசமும் போட்டு
கேட்டவருக்கும்
கேட்க்காதவருக்கும்
வரங்களை வழங்கினேன்
வாழ்த்தினார்கள்
ராசா வேடம் போட்டு
மாதம் மும்மாரி
மழை பெய்கிறதா?
என்று கேட்டேன்?
எல்லோரும் மகிழ்ந்தார்கள்
கோமாளிவேடம் போட்டு
குட்டிக்கரணம் அடித்தேன்
கைதட்டினார்கள் எல்லோரும்
காதலன் வேடம்போட்டு
காதல் செய்தேன்
அன்றுமட்டும் முழுவதுமாய்
அரங்கம் நிறைந்தது
ஆனால்
கவிஞன் வேடம்போட்டு
கவிதை சொன்னேன்
காலியாகிவிட்டது அரங்கம்
காணவில்லை யாரையும்
*************************
காணொளி- ராஜபார்ட் ரங்கதுரை...
Thanks-YouTube-Uploaded by MrTheiv on Jun 10, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |