google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இப்படியும் ஒரு கவிஞனா?-2

Thursday, May 10, 2012

இப்படியும் ஒரு கவிஞனா?-2



கவிஞன் நாடக ஆசிரியன்
வில்லியம் ஷேக்ஸ்பியர்-

வாழ்க்கையில் வந்துபோகும்  
தந்திரங்கள் மந்திரங்கள்
தடுமாற்றங்கள் ஏமாற்றங்கள்  
முழுமையாக எழுதிவைத்தான்
நாடகமாய் அரங்கிட்டான்

நாடகம்தான் நம் வாழ்வு  
நாமெல்லாம் நடிகர்கள் என்று
நினைத்தானோ அவன்?

நாடகக்கொட்டகையில்   
திரைச்சீளை இழுத்த சிறுவன்
அனுபவத்தை கற்று  
எழுதுகோலை எடுத்தவன்

நீ கூடவா புருட்டஸ்? என்றான்
நட்பின் நயவஞ்சகத்தை...
நட்பின் பரிமாணத்தை
ஆண்டனியிடம் காட்டினான்
காதல் பரிதாபத்தை
ரோமியோ ஜூலியட்-டில்..
காதல் இன்பத்தை
‘அஸ் யூ லைக் இட்’-டில்
நீதி நியாயங்களை
மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்-ல்
பாடம் காட்டினான்
பாசம் காட்டுவதை கிங் லியர்-லும்     
சந்தேகக்காரனை ஓதெல்லோ-விலூம்  
பேராசை அழிவுகளை மக்பத்-திலும்
பகைமையின் பாவங்களை
ஹாம்லெட்-நாடகத்திலும்
இப்படியே போய்கொண்டிருக்கும்....

நாடகம்தான் நம் வாழ்வு 
நாமெல்லாம் நடிகர்கள் என்று
நினைத்தானே அவன்...
இறைவனுக்கு சமம்மல்லவா?

இப்படியும் ஒரு கவிஞனா?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1