google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கென்றி டேவிட் தூரோ

Thursday, May 10, 2012

கென்றி டேவிட் தூரோ





கென்றி டேவிட் தூரோ
(Henry David Thoreau)
அறிவு எல்லை கடந்த
கருத்து சொன்னவன்
உண்மைக் கவிஞன்  

வீட்டுவரி கட்டமாட்டான்  
அடைக்கப்படுவான்  
அமெரிக்க சிறையில்
மாமியார் மீட்டு வருவார்
இடது வேடிக்கையல்ல
தூரோ-வின் வாடிக்கை

அவனது வாழ்க்கை
இயற்கை சூழலில்
எளிய வாழ்க்கை

ஒரு நியாயமற்ற அரசுக்கு
தார்மீக எதிர்ப்பு
தனிப்பட்ட எதிர்ப்பு
அவன் எழுத்து  
குரோதமான கூறுகளை
எதிர்கொள்ளும் உயிர் கருத்து

வாழ்வின் உண்மையான
அத்தியாவசிய தேவைகளுக்கு
மாயையை விரட்டும் மந்திரவாதி

அடிமைதனத்திற்கு வழக்காடுபவன்
புற உலகில் தோன்றுவதெல்லாம்
கருத்தளவேயாகும் என்ற
எமர்சன் கூட்டத்தைச் சேர்ந்தவன்

அவனது படைப்பு 
சட்ட மறுப்பு
ஒரு நூற்றாண்டு கழித்து
நம் மகாத்மாவுக்கு
அஹிம்சை அளித்தது
ஆங்கிலேயரை எதிர்க்க
ஆதாரமாக இருந்தது
அடிமை விலங்கை
அகற்ற அடித்தளமிட்டது

இப்போது  
நல்ல படகோட்டம்
வருகிறது' என்று
மரணத்தை சொன்னவன்.
***********************
video-bar-wisdom of thoreau

                     Thanks-YouTube-Uploaded by wileystudios 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1