google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிறுக்கல்கள்-3

Saturday, May 12, 2012

கிறுக்கல்கள்-3


1
பரதேசிகளுக்கு             
பாத்திரங்கள் நிறையும்
திருவிழா காலங்களில் மட்டுமே!
2
பயந்தவனுக்கு பல்லக்கு
இறந்தப்பிறகுதான்
துணிந்தவனுக்கு
தூங்கும்போதும் செல்வாக்கு
3
பார்த்தவை, பார்ப்பவை
சேர்ப்பவை சேர்த்துவிட்டால்
தோற்பவை  தோற்றுவிடும்
4
உன் வார்த்தைகள்
வாசம்வீசட்டும்
மனதில் மல்லிகை மலரட்டும்
5
கிடைப்பவைகளில்
முத்துச்சிப்பியை
எடுத்துவா
6
தோண்டும்போது
தங்கத்தை தேடு
கிடைத்தது போதும்மென்று
களிமண்ணோடு நின்றுவிடாதே!
7
வேட்டைக்குப்போனால்
சிங்கத்தை வேட்டையாடு!
கோட்டைக்குப்போனால்
சிம்மாஷனத்தில் அமரு!
8
இந்த உலகத்தை நிந்திப்பவன்
தன் உள்ளத்தை நிந்திப்பான்
தன் உறக்கத்தை நிந்திப்பான்
9
புன்னகை சிந்து
எதிரியே
இல்லாமல்போவான்
10
கசியும்போதே  
அடைத்துவிடு
உடையும்போது
தடுக்க முடியாது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1