google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிறுக்கல்கள்-4

Saturday, May 12, 2012

கிறுக்கல்கள்-4


1
வல்லமையை கல்லாமை
கற்றபடி நில்லாமையே
அறியாமை!
2
கிளராத நெருப்பு
நீர்த்துவிடும்!
தீட்டாத கோடாரி    
மழுங்கிவிடும்!

3
சுறு சுறுப்பாய் இருந்தால்
விறு விறுப்பாய் இருக்கும்
சோம்பி இருந்தால் 
சூம்பிப்போகும் வாழ்க்கை!


4
எதையாவது செய்யவேண்டும்
நினைப்பவன் தோல்வியாளன்
செய்பவன் வெற்றியாளன்
5
உறுதிமொழி
என்பதெல்லாம்
இறுதிமொழிதான்
6
வெற்றியாளன் வார்த்தைகளில்
ஆவேசம் இருக்கும்
தோல்வியாளன் வார்த்தைகளில்
துவேசம் இருக்கும்
7
வெற்றி ஒரு பயணம்
நீண்ட பயணம்.
முடிவே இல்லாதது.
8
நம் பாதையெங்கும்
குறிக்கோள்கள் பூத்துக்கிடக்கும்
லட்சியம்கள் சிந்திக்கிடக்கும்
அலட்சியம் செய்யாமல்
அள்ளிக்கொண்டால்
வெற்றிமாலை கோர்த்துவிடலாம்!
9
தேக்கம்மில்லாத
நீரோட்டத்தில்தான்
தெளிவு தெறியும்
10
பதக்கத்தைப் பார்ப்பான் வெற்றியாளன்
விலையைப் பார்ப்பான் தோல்வியாளன் 
வெற்றிப்பரிசுக்கு விலையே கிடையாது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1