google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிறுக்கல்கள்-5

Saturday, May 12, 2012

கிறுக்கல்கள்-5


1
தொடுகோட்டை
தொட்டுவிட்டாலே 
வெற்றி தீர்மானிக்கப்படுகிறது
2
கூட்டுப்புழுதான்
கூட்டைக்கிழித்து    
வெளியேறவேண்டும்
3
பிரச்சனைகளுடன்
போராடத் தெறிந்தவன்,      
சுனாமி வந்தாலும்
சுதாரித்துக்கொள்வான்.    
4
ஏணிகள் ஏதுமில்லை  
ஏற்றிவிடும் ஏணி என்று
சறுக்குமரத்தில் தொங்காதே!          
5
கடலில் தத்தளிக்கும்போது
கப்பல் வரும் என்று
காத்திருக்காதே! 
6
கழுதை மீதமர்ந்து
குதிரை பந்தயம்
போகமுடியுமா?
7
கல்குவாரியில்
கல் உடைப்பவனால்
சின்ன சிலையைகூட
செதுக்க முடியாது  

8
நாம் என்ன பேசுகிறோமோ
அதுதான் நமக்கு கேட்க்கும்
நாம் என்ன செய்கிறோமோ
அதுதான் நமக்கு நடக்கும்
9
எல்லோரும்
வணக்கத்துக்குரியவர்களே
என்று நினைத்தால்
நாம் வணங்கப்படுவோம்

10
தர்மம் செய்!
தலை காக்கும் என்று
தர்மம் செய்யாதே!
அது
அவநம்பிக்கையின்
அடையாளம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1