google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உயிருள்ள பேய்கள்-5

Thursday, May 03, 2012

உயிருள்ள பேய்கள்-5





அவர் செய்யாத தொழில்கள் இல்லை
எதிலும் அவருக்கு அதிக லாபமில்லை
“ஜாதி தொழில்செய்ய துணிந்துவிட்டார்   
ஷேக்ஸ்பியர் நா டகத்தில்வரும்
மக்பத்(Macbeth)முன்னாடி தோன்றும்
மூன்று மாயக்காரிகள்
இவர் முன்னாடியும் தோன்றி
எதுவும் செய்யலாம் பாவமில்லை என்று
கெட்ட எண்ணங்களை விதைத்ததோ

அந்த சமயத்தில்
எதோ ஒரு பத்திரிகை
இவருடைய ஜாதியை பற்றி
எழுதிவிட்டது தவறாக
எழுந்துவிட்டார் இவரோ தீயாக
அறைகூவல் விடுத்தார் அநீதியாக
கூடிய கூட்டத்தில்
எரிந்தது பத்திரிகைகள்
பத்திரிக்கை அலுவலகம்   
தன் ஜாதி மக்களுக்கு
தியாகியானார்
தன் ஜாதி சங்கத்துக்கு
தலைவரானார்
தன் ஜாதிக்கு வாக்காளர்களுக்கு
அரசியல்கட்சியும் ஆரம்பித்தார்

இன்றோ அவருக்கு
இருநூறு வீடுகள்
வாடகைதருகிறது
வீதியெங்கும் வாழ்த்துப்பேனர்கள்

மாயக்காரிகளின் போதனை
இப்போதுதான் அரங்கேறியது
கொலைகள் கொள்ளைகள்
தன் ஜாதிகாரர்களிடமே
அரங்கேற்றிவிட்டார்
தன் ஜாதிக்காரர்களுக்கே
சங்கம் ஆரம்பித்தவர்
தன் ஜாதிக்காரர்களுக்கே
சங்கடமாகிவிட்டார்

போட்டி –பொறாமை
இன்று அதே ஜாதி
ஆயிரம் சங்கங்களுடன்...
இன்று அதே ஜாதி
ஆயிரம் தலைவர்களுடன்
இன்று அதே ஜாதி
ஆயிரம் கட்சிகளுடன்....

இந்த உயிருள்ள பேய்களின்
உச்சகட்ட கூத்து.....
“ஜாதிகள் இல்லையடி பாப்பா  
பாடிய பாரதியின் பிறந்தநாளில்.....
வரிசையில் நிற்பார்கள்
கையில் மாலையுடன்
அணி அணியாக வருவார்கள்
மாலை அணிவிக்க...
................................(தொடரும்)    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1