google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கந்துவட்டியும் காவலர்களும்

Thursday, May 03, 2012

கந்துவட்டியும் காவலர்களும்





நள்ளிரவு நேரம்
அரை தூக்கத்திலிருந்தேன் 
கதவை தட்டும் சத்தம்
திறந்து பார்த்தேன்
ஆவி நின்றிருந்தது
அதன் கதையை கேட்டேன்
வந்தது ஆவியல்ல....அப்பாவி! 

“அருமைமகள் திருமணத்துக்கு
சீர்செனத்தி செய்வதற்கு
சொந்தவிட்டை
அடமானம் வைத்தேன்

வாங்கியதோ கால்பணம்  
கந்துவட்டியும் மீட்டர்வட்டியும்
போட்டிப்போட்டு வீட்டுக்குள் வந்து
வீட்டையே விழுங்கிவிட்டார்கள்     

சுனாமிபோல் வந்தார்கள்
வீடும் மூழ்கிப்போனதே!
  
நீதிகேட்டு போவதற்குள்
கட்டபஞ்சாயத்து வந்தது  
(நடமாடும் நீதிமன்றமோ?)  
வந்தார் ஒரு நீதிமான்
வரிந்துகட்டிய வேட்டியில்.

எரியும்வீட்டில்
புடிங்கியது லாபம் என்று
என் வீடும் போனதையா
என் உயிரும் போனதையா

தேடிப்போனேன்
அந்த கந்துவட்டிப்பேயை.

அது பேய்யல்ல பேய்க்கூட்டம்
அந்த பேய்களுக்கும்
பாதுகாப்பாக காவலர்கூட்டம்
அங்கு நடந்ததோ ஆலோசனைக்கூட்டம்
ஏழைகளுக்கு எப்படி உதவுவது என்று.   

இருக்குதே கந்துவட்டிச்சட்டம்
ஆலோசித்தேன் வழக்கறிஞ்சரிடம்    
சட்டப்புத்தகத்தை புரட்டிக்கொண்டே
யாரிடம் பறிக்கலாம் சில்லறை என்று
சிந்தித்துக்கொண்டிருந்தார் அவர்  

பெரியமனிதர்கள் போர்வையை
போர்த்திக்கொண்டு அலையும்
இந்த இரத்தகாட்டேரிகளை
விரட்டுவது எப்படி?

************************************
 காணொளி-cheating comedy


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1