google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இதுவே என் மாயை

Saturday, May 12, 2012

இதுவே என் மாயை




நேற்று இருப்பவர்
இன்று இல்லை
இன்று இருப்பவர்
நாளை இல்லை
இது வாழ்வின் மாயை

எல்லோருக்கும்
பகுத்தறிவு வந்துவிட்டால்
கடவுள்கள்கூட
கானாமல்போவார்கள்
இது அறிவு மாயை  

உழைப்பவன் எல்லாம்
ஓன்று சேர்ந்துவிட்டால்
முதலாளிகள் ராச்சியம்
முடிந்துபோய்விடும்
இது பொருளாதார மாயை

இருப்பன் எல்லாம்
பதுக்கிகொண்டால்
பதுங்கிகொண்டால்  
இல்லாமை தாண்டவமாடும்
இது வஞ்சகமான மாயை  

காமத்தோடு
காதல் செய்தால்
காதலும் அழிந்துபோகும்
கற்பும் கேள்விக்குறியாகும்
இது வாலிபத்தின் மாயை


சுட்டெரிக்கும் சூரியன்கூட
மாலையானால்
மறைந்துபோகுது
நிலவும் தேய்ந்துபோகுது
இது இயற்கையின் மாயை

மலையாக இருந்தது
மண் மேடானது
மரங்களெல்லாம்
புல்தரைகளானது  
இது செயற்கை மாயை

இப்படி மாயை நிறைய...

நிலையானது எதுவென்று  
நித்தம் நித்தம் தேடியே
பித்தனாக அலைகிறேன்
எதுவும் நிலையில்லை
என்ற முடிவும் வரவில்லை
எதுவும் தெரியவில்லை   
இதுவே என் மாயை 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1